தமிழக மக்கள் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த ஓயாது உழைப்போம்: இபிஎஸ் புத்தாண்டு வாழ்த்து

சென்னை: “தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்! ஓயாது உழைப்போம்!” என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலருகின்ற இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் என் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் … Read more

குடிபோதையில் வாகனத்தை இயக்கினால்… காவல்துறை கொடுத்த எச்சரிக்கை!

New year Party: புத்தாண்டு இரவில் இருசக்கர வாகனங்களில் பந்தயம் வைத்து ‘பைக் ரேஸ்’ செல்ல தடை; மீறினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் புதிய கால அட்டவணை நாளைமுதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நாளை (ஜன.1) வெளியாகவுள்ள நிலையில் புதிய ரயில்கள், ரயில்களின் சேவை நீட்டிப்பு, வேகம் அதிகரிப்பு உள்ளிட்ட சிறப்பம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளன. ரயில்வேயில் ஆண்டுதோறும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் விரைவு மற்றும் பயணிகள் ரயில்களுக்கான புதிய கால அட்டவணை வெளியிடப்படும். இந்நிலையில், 2024-ம் ஆண்டுக்கான ரயில்வே புதிய காலஅட்டவணை சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு, 2025-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வே புதிய … Read more

அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு துணி அணிந்து ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு 21 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியப் பலன்களை உடனே வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை பல்லவன் இல்லம் முன்பு போக்குவரத்து ஓய்வூதியர்கள் வாயில் கருப்பு மாஸ்க் அணிந்து நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு 110 மாத அகவிலைப்படியை நிலுவையுடன் வழங்க வேண்டும், அகவிலைப்படி உயர்வு வழங்க உத்தரவிட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வதை கைவிட வேண்டும், கடந்த ஆண்டு ஏப்ரல் … Read more

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் இளைஞருக்கு தூக்கு தண்டனை

சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவியை ரயில் முன்பாக தள்ளிவிட்டு கொலை செய்த குற்றத்துக்காக இளைஞர் சதீஷுக்கு தூக்கு தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குடும்பத்தை இழந்து தவிக்கும் மாணவியின் தங்கைகளுக்கு இளைஞருக்கான அபராதத்தில் இருந்து ரூ.25 ஆயிரமும், தமிழக அரசு ரூ.10 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சென்னை பரங்கிமலை காவலர் குடியிருப்பில் வசித்த மாணிக்கம் – தலைமைக் காவலர் ராமலட்சுமி தம்பதியின் மூத்த மகள் சத்யபிரியா. … Read more

மகளிர் உரிமை தொகையில் உயர்வு? பட்ஜெட்டில் வரவிருக்கும் மாஸான அறிவிப்பு?

Kalaignar Magalir Urimai Thogai:தமிழக அரசு வழங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமை தொகையில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாக உள்ளது.

கண்ணாடி இழை நடைபாலம் முதல் லேசர் ஒளிக்காட்சி வரை – திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பம்சங்கள்!

நாகர்கோவில்: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். கடல் நடுவே விவேகானந்தர் பாறை – திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தையும் திறந்து வைத்தார். கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் உள்ளது. இதன் அருகே உள்ள மற்றொரு பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2000-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி … Read more

மாணவி வன்கொடுமை விவகாரம்: பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கிய புஸ்ஸி ஆனந்த் கைதும், விஜய்யின் எதிர்வினையும்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறி அதனை துண்டுபிரசுரமாக வழங்கிய தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட 250 பேரை சென்னையில் போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைத்தொடர்ந்து சாலை மறியலும் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு எதிராக தவெக தலைவர் நடிகர் விஜய் ஏற்கெனவே தனது கண்டனங்களை தெரிவித்திருந்தார். … Read more

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை முதல் புயல் பாதிப்பு வரை – ஆளுநரிடம் விஜய் பேசியது என்ன?

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பது உட்பட 3 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆளுநரிடம், தவெக தலைவர் நடிகர் விஜய் மனு வழங்கினார். பருவமழை ஃபெஞ்சல் புயல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மாநில அரசு கோரும் நிவாரணத் தொகையை முழுமையாக மத்திய அரசு வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தை கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இச்சம்பவத்துக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் … Read more

தஞ்சை தமிழ்ப் பல்கலை.யில் பதிவாளர் அறை கதவு பூட்டை உடைத்து புதிய பதிவாளர் பொறுப்பேற்பு – நடந்தது என்ன?

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அதிகார மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பதிவாளர் அறையின் பூட்டை உடைத்து, துணை வேந்தரால் நியமிக்கப்பட்ட புதிய பதிவாளர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு நீக்கம் செய்யப்பட்ட பதிவாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக பொறுப்பு துணை வேந்தர் க.சங்கருக்கும், பொறுப்பு பதிவாளர் சி.தியாகராஜனுக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் போக்கு நிலவுகிறது. இதனிடையே, டிச.27-ம் தேதி ஒருவரையொருவர் பணி நீக்கம் செய்து உத்தரவு … Read more