'ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வையுங்கள்…' சர்ச்சையாகும் அமைச்சர் மூர்த்தியின் பேச்சு

Minister Moorthy Viral Video: ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் பல வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.

‘தமிழக அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்துக் கொடுப்பது நியாயமற்றது’ – மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: “கல்வி கொடுக்க வேண்டியது அரசின் முதன்மையான கடமையாக இருக்க வேண்டுமே தவிர, அரசு பள்ளிகளுக்கு செலவிடாமல் அதிலிருந்து தமிழக அரசு தப்பிப்பது, நிதி சுமையை காரணம் காட்டி தனியாருக்கு தத்துக் கொடுப்பது முற்றிலும் நியாயமற்ற நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த கல்வியாண்டில் (2025-2026) 500 அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து அந்தப் … Read more

உருவாகும் புதிய நகராட்சிகள்… விரிவடையும் மாநகராட்சிகள் – தமிழக அரசின் அறிவிப்பு

TN Latest News Updates: புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம்; அதன் விரிவாக்கம் ஆகியவை குறித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கம் – அரசாணை வெளியீடு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எல்லைகள் விரிவாக்கம் மற்றும் புதிய நகராட்சிகள், பேரூராட்சிகள் அமைத்துருவாக்கம் தொடர்பாக தமிழக அரசு 5 அரசாணைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, கன்னியாகுமரி, அரூர், பெருந்துறை உள்ளிட்ட புதிதாக 13 நகராட்சிகள் உருவாக்கப்படவுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகம் நகரமயமாதலில் இந்தியாவில் முன்னோடி மாநிலமாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதமாகவும் … Read more

அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டர் ரத்து – தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு(ஏஇஎஸ்எல்) வழங்கப்பட்ட ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மத்திய அரசின் புதுப்பிக்கப்பட்ட விநியோகத் துறை திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் மீட்டர்களை கொள்முதல் செய்வதற்காக தமிழக அரசின் தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) சார்பில் கடந்த 2023 ஆகஸ்ட்டில் நான்கு தொகுப்புகளாக டெண்டர்கள் வெளியிடப்பட்டன. பிஎஸ்இ-பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஏஇஎஸ்எல், சென்னை உட்பட எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய முதல் தொகுப்புக்கான டெண்டரை மிகக் குறைந்த ஏலத்தில் எடுத்தது. இந்நிறுவனம் 82 … Read more

கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் – பாஜக சார்பில் போஸ்டர்!

பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் துணை நிற்பதே பாஜகவின் பழக்கம். கருப்பு சிவப்பு நரிகளிடமிருந்து பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை எங்கள் முழக்கம் – கோவையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.

சென்னை | 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விதித்துள்ளது. இதுகுறித்து இன்று தமிழகக் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: ”2023ம் ஆண்டு, சென்னை பெருநகர காவல், பூக்கடை காவல் மாவட்டத்தில் வசித்து வந்த 13 வயது சிறுமியை ஒரு நபர் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, மேற்படி சிறுமியின் தாயார் கொடுத்த புகார் மீது W-10 பூக்கடை … Read more

‘சின்னசேலம் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண் படுகொலை’ – காவல்துறைக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: சின்னசேலம் அருகே இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்து 7 நாட்களுக்கு மேலாகியும், அதற்குக் காரணமான மனித மிருகங்களைக் கைது செய்ய தமிழக அரசும், காவல்துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்ப்பது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த திம்மவரத்தைச் சேர்ந்த நிர்மலா என்பவர் கடந்த டிசம்பர் 26ம் தேதி இரவு 7 … Read more

தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்! இளைஞர்கள் கோடீஸ்வரராகலாம்..!

Tamil Nadu Government | தமிழ்நாடு அரசு இளைஞர்கள் தொழில் முனைவோர் ஆக்கும் வகையில் கெமிக்கல் மற்றும் யூடியூப் பயிற்சிகள் வழங்க உள்ளது. இதில் கலந்து கொள்வது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்: வேலை​வாய்ப்பு பயிற்​சித்துறை அறிவிப்பு

சென்னை: வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் பி.விஷ்ணு சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2025-2026-ம் கல்வியாண்டில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள் (ஐடிஐ) தொடங்குதல், அங்கீகாரத்தை புதுப்பித்தல், புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற் பிரிவுகளில் கூடுதல் அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் … Read more