பாமக உட்கட்சி பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேச தேவையில்லை: அன்புமணி விளக்கம்

பாமக உட்கட்சிப் பிரச்சினை குறித்து மற்றவர்கள் பேசத் தேவையில்லை என்று பாமக தலைவர் அன்புமணி கூறினார். புதுச்சேரி அருகே பட்டானூரில் நடைபெற்ற பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் இளைஞரணித் தலைவராக முகுந்தனை நிறுவனர் ராமதாஸ் அறிவித்தபோது, மேடையிலிருந்த கட்சித் தலைவர் அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இருவரிடையே நடைபெற்ற காரசார விவாதம் அரசியல் களத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. இந்நிலையில், பாமக ஊடகப் பிரிவு இளைஞரணித் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதுடன், இளைஞரணித் தலைவர் பொறுப்பை தான் ஏற்கவில்லை என … Read more

தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: திருச்சி எஸ்.பி வருண் குமாருக்கு டிஐஜியாக பதவி உயர்வு!

சென்னை: கன்னியாகுமரி, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர் எஸ்.பி.க்கள் உட்பட தமிழகம் முழுவதும் 56 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமை (டிச.29) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: கடலூர் மாவட்ட எஸ்.பி. ஆக பணியாற்றிவந்த ராஜாராம் ஐபிஎஸ், தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி. ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏடிஜிபியாக இருந்த மகேஷ்குமார் அகர்வால் சிறப்பு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராணிப்பேட்டை எஸ்.பி. கிரண் சுருதி, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி. … Read more

அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை கோரி ஆர்ப்பாட்டம்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு

மதுரை: அகவிலைப்படி, பணிக்கொடை நிலுவை உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து கழக ஓய்வூதியர்கள் நாளையும், நாளை மறுநாளும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றனர். இது குறித்து அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நலச் சங்கம் தலைவர் கிருஷ்ணன், பொதுச் செயலாளர் கர்சன், பொருளாளர் வரதராஜன் ஆகியோர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் 30, 40 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், பணி ஓய்வுக்குப் பின் மறைந்த தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியர்கள் … Read more

ஈஷா கிராமோத்சவம்: 'இது காஷ்மீர் டூ குமரி வரை நடக்க வேண்டும்' – சத்குரு; புகாழாரம் சூட்டிய சேவாக்!

Isha Gramotsavam 2024: ஈஷா சார்பில் நடைபெறும் விளையாட்டு திருவிழாவான ‘ஈஷா கிராமோத்சவம்’ காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெற வேண்டும் என பரிசளிப்பு விழாவில் சத்குரு தெரிவித்துள்ளார்.

கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் புத்தாண்டு கொண்டாட தயாராகும் சுற்றுலா பயணிகள் 

கொடைக்கானல்: கொடைக்கானலில் நள்ளிரவு குளிரில் (14 டிகிரி செல்சியஸ்) புத்தாண்டை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குவிந்து வருகின்றனர். தனியார் ஹோட்டல்கள் புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளன. கொடைக்கானலுக்கு கோடை சீசன் மட்டுமல்லாது வார விடுமுறை நாட்கள், தொடர் விடுமுறை காலங்களில் சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படும். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை என்பதால் பலரும் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். புதன்கிழமை புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில், புத்தாண்டு … Read more

டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி மேலூர் அருகே பெண்கள் நூதனப் போராட்டம்

மதுரை: டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி மேலூர் அருகே பெண்கள் குலவையிட்டும், கிராமிய பாடல்களை பாடியும் போராட்டம் செய்தனர். மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் போராட்டங்களை நடத்துகின்றனர். இதன் தொடர்ச்சியாக கொட்டாம்பட்டி அருகே கேசம்பட்டி மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் ஒன்று கூடினர். சுமார் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் டங்ஸ்டன் திட்டத்தை முழுவதுமாக மத்திய அரசு ரத்து … Read more

திமுக கூட்டணியை விரும்பும் ராமதாஸ், எதிர்க்கும் அன்புமணி…! மோதல் பின்னணி இதுதான்

Ramadoss | ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின்னணியில் பல காரணங்கள் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

‘திருக்குறள் துணையோடு எதேச்சதிகாரத்தை வெல்வோம்’ – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: “திருக்குறளில் உள்ள அதிகாரங்களைத் துணையாகக் கொண்டு எதேச்சதிகாரத்தை வெல்வோம். வள்ளுவம் போற்றி வாழ்க்கை சிறந்திட அனைவருக்கும் 2025 புத்தாண்டு நல்வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டு திமுக தொண்டர்களுக்கு அக்கட்சித் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கன்னியாகுமரியில் டிசம்பர் 30, 31, மற்றும் ஜனவரி 1 ஆகிய நாட்களில் திருவள்ளுவர் சிலையின் வெள்ளிவிழா நடைபெறவிருப்பதை ஒட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு: உலகப் பொது மறையாம் திருக்குறளை வழங்கிய திருவள்ளுவர் தமிழர்களின் … Read more

Ration card | ஆன்லைன் ரேஷன் கார்டு விண்ணப்பங்களை கண்டு கொள்ளாத தமிழ்நாடு அரசு..!

Ration card | தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு கேட்டு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்காமல் காலதாமதம் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இ சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்கலாம்: ஓய்வூதியர்களுக்கு போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தல்

சென்னை: இ சேவை மையம் மூலம் வாழ்நாள் சான்று சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியவர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் ஓய்வூதிய விதிகளின்படி, கடந்த 1998-ம் ஆண்டு செப்.1-ம் தேதி முதல் பணியில் இருந்து ஓய்வு பெற்ற, விருப்ப ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள் மற்றும் இறந்த பணியாளர்களின் வாரிசுதாரர் ஒவ்வொருவரும் ஆயுள் சான்றிதழை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் … Read more