அலங்கார மின் விளக்குகளால் ஜொலிக்கப்போகும் திருச்சி மாநகராட்சி சாலைகள்

திருச்சி: திருச்சி மாநகராட்சி பகுதிகளிலுள்ள 2,302 தெருவிளக்குகளில் அதிக திறன்கொண்ட மின் விளக்குகள் ரூ.7.1 கோடி செலவில் பொருத்தப்பட உள்ளன. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மண் சாலைகள் என 715 கி.மீ தொலைவுக்கு மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளும், 95.2 கி.மீ தொலைவுக்கு தேசிய, மாநில நெடுஞ்சாலைத் துறைகளுக்குச் சொந்தமான சாலைகளும் உள்ளன. இவற்றில் இரவு நேரங்களில் அச்சமின்றி மக்கள் பயணிப்பதற்காக எல்இடி, சோடியம், ஹாலஜன், மெர்க்குரி தெருவிளக்குகள் மற்றும் முக்கிய சந்திப்புகளில் … Read more

மதுரை: 4 வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

கொட்டாம்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், சொந்த வேலை காரணமாக தனது காரில் மணப்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கொட்டாம்பட்டி அருகே கருங்காலக்குடி நான்கு வழிச்சாலையில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார். அப்போது திடீரென கார் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்துள்ளது.இதனை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் குடத்தில் தண்ணீர் கொண்டுவந்த … Read more

தீவிர இலக்கியத்திற்காக தனி செயலி; எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனின் புதிய முயற்சி

கவிஞர்களின் வார்த்தைகளும் எழுத்தாளர்களின் ஒரு நல்ல கட்டுரைக்கான கச்சா வரிகளும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பதிவுகளாக இழிந்துகொண்டிருக்கும் சூழ்நிலையில், இருந்து வாசகர்களையும் எழுத்தாளர்களையும் தீவிர இலக்கியத்தை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் ஒரு புதிய முயற்சியை எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன் முன்னெடுத்திருக்கிறார். தமிழ் இலக்கிய உலகில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளை முன்னெடுத்து வரும் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன், தீவிர இலக்கியத்திற்காக ‘ஆலா’ (Aalaa) என்ற ஒரு தனி செயலியைத் தொடங்கியுள்ளார். இதில் இலக்கியம், இலக்கியம் மட்டுமே … Read more

மனைவிக்கு கொரோனா தொற்று.. வீட்டில் தனிமைப்படுத்தப்படுத்தி கொண்ட எடப்பாடி பழனிச்சாமி.!

மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமி தனிமைப்படுத்தி கொண்டார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மனைவி ராதாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராதா கிரீன்வேஸ் சாலை இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்காரணமாக, சென்னையில் உள்ள தனது இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியும் … Read more

#BIG BREAKING :- நடிகை மீனா கணவர் மரணம்..!!

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரைப்படங்களில் நடித்து பின்னர் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்கள் நடித்துள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி … Read more

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கான ரூ.200 கட்டணம் ரத்து – பள்ளிக்கல்வித்துறை

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாக பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் 200 ரூபாய் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1999ஆம் ஆண்டுக்கு பின் 200 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 2022- 2023 ஆம் கல்வியாண்டிலிருந்து அக்கட்டணம் பெறப்படாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஒரு கல்வி ஆண்டிற்கு 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Source link

“மக்கள் பிரச்சினைகளில் திமுக ஆட்சி என்றாலும் எதிர்த்து நிற்போம்” – கே.பாலகிருஷ்ணன்

ராமநாதபுரம்: “மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு, திமுக ஆட்சி என்றாலும், பாஜக ஆட்சி என்றாலும் நாங்கள் எதிர்த்து நிற்போம்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது, ”மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கண்டன குரல் எழுப்பி வருகிறோம். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் இப்போதே வெற்றி பெற்றுவிட்டார் எனச் சொல்வது பொறுத்தமற்றது, வெற்றி என்பது எளிதல்ல. ஆர்.எஸ்.எஸ் தலைமை தாங்கும் பாஜக ஆட்சி யாரை நிறுத்தினாலும் … Read more

மேயருக்கான ஆடையிலேயே உதயநிதி காலில் விழுந்த தஞ்சை மேயர்!

மேயர் ஆடையில் இருந்தநிலையில், திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் காலில் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன் விழுந்து வணங்கிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சை மாநகராட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அப்போது மேயர் உடையில் வணக்கத்திற்குரிய மேயர், உதயநிதி ஸ்டாலின் காலில் விழுந்து வணங்கினார். இதனை உதயநிதி ஸ்டாலின் சற்றும் எதிர்பார்க்கவில்லை.  இந்த காட்சி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. உதயநிதி ஸ்டாலின் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சையான செய்திகள் அடுத்தடுத்து வெளியான … Read more

கொடூர கொலை சம்பவத்தால் ராஜஸ்தானில் பதற்றம்… 144 தடை உத்தரவு.!

நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகப் பதிவைப் பகிர்ந்ததால், உதய்பூரில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டார்; பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வீடியோவை தாக்குபவர்கள் வெளியிட்டுள்ளனர் ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரின் மால்தாஸ் தெரு பகுதியில் இன்று கன்னையா என்ற நபர் இருவரால் தலை துண்டித்து கொலைசெய்யப்பட்டார். அவர் சில நாட்களுக்கு முன்பு நூபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக ஒரு சமூக ஊடக பதிவு ஒன்றையும் பகிந்துள்ளார்.  கொலையாளிகள் இருவரும் தலை துண்டிக்கப்பட்டதை பெருமைப்படுத்தும் வீடியோவை ஒன்றை வெளியிட்டு, பிரதமர் மோடியின் உயிருக்கும் … Read more

தொழிற்பயிற்சி முடித்த திருநங்கையர்: சான்றிதழ் வழங்கிய திருச்சி ஆட்சியர்

க. சண்முகவடிவேல், திருச்சி நபார்டு திட்டத்தின் கீழ் திருநங்கைகளை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட உணவு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்ட திருநங்கைகளுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் மா. பிரதீப் குமார் சான்றிதழ்களை வழங்கினார். திருச்சி நாவலுர்குட்டப்பட்டு அன்பில் தர்மலிங்கம் வேளாண்மைக் கல்லூரி வளாகத்தில் இன்று (28.6.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், நபார்டு திட்டத்தின் கீழ் திருநங்கைகளை தொழில் முனைவோராக உருவாக்கும் வகையில், மதிப்பு கூட்டப்பட்ட உணவு தயாரித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு அவர்களுக்குச் சான்றிதழ்களை … Read more