பிளஸ் 2 படித்த மாணவர்களின் உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

சென்னை: பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கு உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சியை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ் பிளஸ் 2 படித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ என்ற நிகழ்ச்சியை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 25-ம் தேதி (இன்று) காலை 9 மணிக்கு தொடங்கி வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள், அரசு … Read more

கோவில்பட்டி: ரயில் நிலையத்தில் சோதனை முறையில் கடலை மிட்டாய் விற்பனை துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில் கடலை மிட்டாய் விற்பனை துவங்கப்பட்டுள்ளது. சோதனை முறையில் 15 நாள்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்களிலும் அந்தந்த ஊர்களைச் சேர்ந்த பாரம்பரியமிக்க உணவு பண்டங்களை விற்பனை செய்வதற்கு, ‘ ஒன் ஸ்டேஷன் ஒன் புராடக்ட் ‘ எனும் திட்டத்தை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனில், புவிசார் குறியீடு பெற்ற கடலை மிட்டாயை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்தது. இதையடுத்து, கோவில்பட்டி … Read more

பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கம்.. இதுதான் காரணம்!

பிரபல பாடகி சின்மயி இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. கணவர் ராகுல், தனக்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளின் படங்களைப் பகிர்ந்த ஒரு நாள் கழித்து இது நிகழ்ந்தது. தென்னிந்திய சினிமாவில், பிரபல பாடகி சின்மயி. நடிகைகளுக்கும், குரல் கொடுத்து வருகிறார். சின்மயிக்கும், நடிகர் ராகுலுக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்தத் தம்பதிக்கு சமீபத்தில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. குழந்தைகளுக்கு திரிப்தா, ஷர்வாஸ் என பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் சின்மயி, … Read more

நடிகர் சூரியின் புதிய தொழிலை தொடங்கி வைத்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.!

நடிகர் சூரியின் உணவகத்தை நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்துவைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகில் நடிகர் சூரி குடும்பத்துக்கு சொந்தமான அம்மன் உணவகத்தை தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று திறந்து வைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 10 ஆண்டுகளாக இந்த உணவகம் மூலமாக மருத்துவமனைக்கு மாதம் 7000 வருமானம் வந்தது. தற்போது அது ஒரு லட்சமாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார். மேலும், குறைவான விலையில் … Read more

சென்னையில் மரம் சாய்ந்து கார் மீது விழுந்ததில் வங்கி பெண் மேலாளர் உயிரிழப்பு.!

சென்னையில் மரம் சாய்ந்து சாலையில் சென்ற கார் மீது விழுந்ததில் வங்கிப் பெண் மேலாளர்  உயிரிழந்தார். போரூரைச் சேர்ந்த வாணி கபிலன் என்பவர் கேகே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள வங்கியில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். வங்கிப் பணிகளை முடித்து விட்டு தனது சகோதரி எழிலரசியுடன் அவர் புறப்பட்டார். வங்கியில் இருந்து 100அடி தூரம் சென்ற நிலையில் சாலையின் இடதுபுறம் இருந்த பெரிய மரம் கார்மீது விழுந்ததில் வாணி சம்பவ இடத்திலேயே பலியானார். கார்ஓட்டுநரும், எழிலரசியும் மருத்துவமனையில் … Read more

மூத்த எழுத்தாளர் மாலன் மொழிபெயர்த்த நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு

சென்னை: மூத்த எழுத்தாளர் மாலன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த ‘ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்’ என்ற நாவலுக்கு 2021-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மொழிகள், ஆங்கிலத்தில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. பிற மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகும் படைப்புகளுக்கு சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கான விருதுகள் விவரம் … Read more

'பாஜகவின் லாஜிக்கில் அதிமுக பலி' – நாஞ்சில் சம்பத்

பாஜகவின் லாஜிக்கில் அதிமுக பலியாகியிருக்கிறது என பூந்தமல்லியில் நாஞ்சில் சம்பத் பேட்டியளித்தார். திருவள்ளூர் மாவட்ட திமுக, பூந்தமல்லி தொகுதி இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பட்டறை பூந்தமல்லியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் நாசர், திமுக நிர்வாகிகள் நாஞ்சில் சம்பத், தமிழன் பிரசன்னா ஆகியோர் கலந்து கொண்டு திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள். பின்னர் நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில்…: ஓபிஎஸ்ஸை ஓரம் கட்டுவதாகக் கருதி கொண்டிருக்கிறார்கள். ஒரு ஜனநாயக … Read more

ஆயுதப் பயிற்சி பெற்றவர்களை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் திட்டம்’: தஞ்சை விவசாய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தற்போது இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்று அறிவித்துள்ள ஓய்வூதியம் இல்லாத, ஒப்பந்த முறையில் இராணுவத்திற்கான ஆள் எடுக்கும் திட்டமான ‘அக்னி பாத்’ திட்டத்தைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்யுக்தா கிஷான் மோர்ச்சா அகில இந்திய அறைகூவலை ஏற்று தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஒருங்கிணைப்பாளர் வீர மோகன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளர் பழனிராஜன் தொடக்கி வைத்து பேசினார். … Read more

தமிழகத்தில் 2 மடங்காக உயர்ந்த கொரோனா பாதிப்பு.!

தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் நேற்று முன்பு 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளது. நேற்று 25 ஆயிரத்து 896 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், 1359 பேருக்கு கொரோனா … Read more

விருதுநகரில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து.!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்த நிலையில், விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. காரியாபட்டி-திருச்சுழி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளங்கோவன் என்பவர் மீது எதிர்திசையில் மதுரை நோக்கி அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் கவனக்குறைவால் பலமாக மோதியது. நேருக்கு நேர் மோதிய வேகத்தில் இரு வாகனங்களில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். தகவலறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த மூவரையும் மீட்டு … Read more