ஓபிஎஸ் புகைப்படத்தை பெயிண்டால் ஆக்ரோஷமாக அழித்த அதிமுகவினர்
விழுப்புரத்தில் கட்சி பேனர்கள், சுவர் விளம்பரங்களில் இடம்பெற்றிருந்த ஓ.பி.எஸ் பெயர் மற்றும் புகைப்படத்தை முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்தின் ஆதாரவாளர்கள் வெள்ளை நிற ஸ்பிரே பெயிண்ட் கொண்டு அழித்தனர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான சி.வி.சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்ஸின் பதவி காலாவதி ஆகிவிட்டதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் அதிமுக பேனர்களில் இருந்த ஓ.பி.எஸ் புகைப்படத்தை அழித்தனர். Source link