‘இந்த திட்டம் நல்லாயிருக்கே..மாநில முழுசும் கொண்டுவாங்க’-டாஸ்மாக்கிற்கு நீதிமன்றம் அட்வைஸ்

நீலகிரியை தொடர்ந்து டாஸ்மாக் பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை, மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து, ஜூலை 15-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வனபாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக 10 ரூபாய்க்கு விற்று விட்டு, பின் பாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அத்தொகையை திரும்ப வழங்கலாம் என யோசனை தெரிவித்தது. காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் … Read more

திருச்சியில் மெட்ரோ ரயில்: முதற்கட்ட ஆலோசனையில் சென்னை அதிகாரிகள்

க.சண்முகவடிவேல் திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி பகுதியில் பெருந்திறள்( மெட்ரோ) துரித போக்குவரத்து தொடர்பான முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆர்.வைத்திநாதன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் மேலாண்மை இயக்குநரும், முதன்மை செயலாளருமான எம்.ஏ.சித்திக் தெரிவித்ததாவது:- தற்போது சென்னையில் மெட்ரோ ரயில் துரித போக்குவரத்து சேவையை மக்களுக்கு வழங்கி … Read more

#BreakingNews: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்.!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.  நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அண்மையில் கால் விரல்கள் அகற்றப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நலனை பலரும் விசாரித்து வருகின்றனர்.  மருத்துவர்கள் கண்காணிப்பில் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்தின் உடல்நலம் குறித்து அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று நலம் விசாரித்தார். ஏற்கெனவே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட … Read more

காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

நீலகிரியை தொடர்ந்து காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்தும் வகையில் திட்டம் வகுத்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. வன பாதுகாப்பு தொடர்பான வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 29 லட்சம் பாட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டதாகவும், அதில் 18 லட்சத்து 50 ஆயிரம் காலி மது பாட்டில்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மது பாட்டில்களை திரும்ப … Read more

புதிய வட்டம்: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய மக்களின் கோரிக்கையை நிறைவெற்ற சீமான் வலியுறுத்தல்

சென்னை: “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு புதிய மாநகராட்சிகள், மாவட்டங்கள் மற்றும் வட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டபோதும், கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது உறுதியளித்தப்படி ரிஷிவந்தியம் வட்டம் உருவாக்குவதற்கான அறிவிப்பை மட்டும் இதுவரை வெளியிடாதது அப்பகுதி மக்களை மிகுந்த ஏமாற்றமடையச் செய்துள்ளது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என்று கால் நூற்றாண்டிற்கும் … Read more

5 மணி நேரம் தனியாக பேசிவிட்டு சென்ற மணமகன்.. திருமணம் நிச்சயமான பெண் எடுத்த விபரீத முடிவு

தாராபுரம் அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகக் கூறி உறவினர்கள் அரசு மருத்துவமனை முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பெல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் ரம்யா (23) தனியார் பனியன் கம்பெனியில் வேலைசெய்து வருகிறார். இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சார்ந்த பணப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சின்ராசு(25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு வருகின்ற 29ஆம் தேதி திருமணம் … Read more

‘ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பதவிகள் காலாவதி ஆகிவிட்டன’: சி.வி சண்முகம் அதிரடி

AIADMK General Council Meeting: CV Shanmugam  press meet Tamil News: அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று சென்னையில் உள்ள வனகரத்தில் நடைபெற்றது. இதில் பொதுக்குழு உறுப்பினர்களால் நிரந்தர அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பேசிய அவர் வருகிற ஜூலை 11 ஆம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு நடைபெறும் என்று அறிவித்தார். ஆனால், இது சட்ட விரோதமானது என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு கூறி இருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் … Read more

இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்.. தமிழகத்தில் அதிரடி உத்தரவு.!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.  அதனால் அனைத்து மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் முககவசம் கட்டாயம் என்ற ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் … Read more

இரவில் பொருட்கள் வாங்குவது போல் வந்து 5 பவுன் தங்கச்சங்கிலி பறிப்பு.!

ஈரோடு மாவட்டம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு நேற்றிரவு பொருட்கள் வாங்குவது போல் சென்ற ஒருவன் உரிமையாளரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன. உரிமையாளர் குல்ஜர் அளித்த புகாரின் அடிப்படையில் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றவனை சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர் Source link

மதுரை அரசு மருத்துவமனையில் நடிகர் சூரியின் உணவகம் திறப்பு: டெண்டர் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். சூரி குடும்பத்திற்கு எப்படி, எதற்காக மருத்துவமனை வளாகத்தில் அந்த உணவகம் நடத்துவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது பற்றி அமைச்சர் விளக்கம் அளித்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடிகர் சூரி குடும்பத்திற்கு சொந்தமான அம்மன் உணவகத்தை நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் … Read more