கோவிலில் அரசு வேலைவாய்ப்பு.. உடனே அப்ளை பண்ணுங்க.!

கோவை பட்டீஸ்வரர் கோவில் அதிகாரபூர்வ இணையதளத்தில் கிளார்க், வாட்ச்மேன், ஸ்வீப்பர் காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக எஸ்.எஸ்.எல்.சி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக கோவை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.  நிறுவனம் : கோவை பட்டீஸ்வரர் கோவில் பணியின் பெயர் : கிளார்க், வாட்ச்மேன், ஸ்வீப்பர் கல்வித்தகுதி : எஸ்.எஸ்.எல்.சி பணியிடம் : கோவை … Read more

2030இல் ஒரு இலட்சம் கோடி டாலர் பொருளாதாரம் இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2030ஆம் ஆண்டில் ஒரு இலட்சம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புக்குத் தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர், தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி முறைக்கான திறன்மிகு மையம், திருப்பெரும்புதூர், ஓசூரில் 2 சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்தார். திருப்பூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைக்கப்படவுள்ள மினி டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய அளவில் இரண்டாவது … Read more

புதுச்சேரி ஜிப்மரில் ஏழைகளுக்கு மருந்துகளில்லை: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நாளை நேரடி விசாரணை

புதுச்சேரி: புதுச்சேரி பேரவைத் தலைவர் புகார் தெரிவித்தத அடுத்து, ஜிப்மர் மருத்துவமனையில் நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்த இருகிறார். புதுச்சேரியில் கோரிமேடு பகுதியில் அமைத்துள்ளது ஜிப்மர் மருத்துவமனை. மத்திய அரசின் கட்டுபாட்டில் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. கரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த இரு ஆண்டுகளாக வெளிப்புறச் சிகிச்சைகள் தொடர்ச்சியாக தரப்படாத சூழல் நிலவியது. தொலைப்பேசியில் முன்பதிவு செய்து அதன் பிறகே சிகிச்சைக்கு வரவேண்டிய நிலை இருந்தது. தற்போதுதான் நீண்ட மாதங்களுக்கு பிறகு … Read more

'எனக்கு அம்மா அப்பா இல்ல' ரயில் நிலைய கழிவறையில் இருந்து சிறுமி மீட்பு

கோவை ரயில் நிலைய கழிவறையில் தங்கியிருந்த 17 வயது சிறுமியை மீட்ட ரயில்வே காவல் துறையினர் அவரை குழந்தைகள் பாதுகாப்பு நல சங்கத்தினரிடம் ஒப்படைத்தனர். கோவை ரயில் நிலைய கழிவறையில், 17 வயது சிறுமி ஒருவர் தங்கி இருப்பதை ரயில்வே காவல்துறையினர் நேற்று கண்டனர். அவரிடம் விசாரித்தபோது, ஆந்திராவில் இருந்து வேலை தேடி வந்ததாகவும், கோவை ரயில் நிலையம் வந்ததும், தன்னை அழைத்து வந்த நபர், தனியாக விட்டுச் சென்று விட்டதாகவும் தெரிவித்தார். தனக்கு பெற்றோர் யாரும் … Read more

காட்டுக்குள் உதிர்ந்து கிடக்கும் இலைகள்… அதற்குள் ஒரு கொடூர பாம்பு… கண்டுபிடிங்க பார்க்கலாம்!

ஆப்டிகல் இல்யூஷன் தந்திரமானவை, அதிலும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் அவற்றை விட வித்தியாசமாக உணரப்படுகின்றன. illusion என்ற சொல் லத்தீன் வார்த்தையான illudere என்பதிலிருந்து வந்தது, அதாவது “கேலி செய்வது”. சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு புயல்போல தாக்கி வருகிறது. அதிலும் விலங்குகளைப் பற்றிய ஆப்டிகல் இல்யூஷன் படம் நெட்டிசன்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கு வேலை தருகிற ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக … Read more

இறந்த தாயின் உடலை வீட்டினுள் புதைத்த மகன்.. மயிலாடுதுறை அருகே நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

இறந்த தாயின் உடலை வீட்டிற்குள் புதைத்துவிட்டு மனநலம் பாதிக்கப்பட்ட மகன் அருகிலேயே இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம், புதுபட்டி பகுதியை சேர்ந்தவர் இந்திராணி.  இவரது மகன் பிரபாகரனுக்கு கடந்த 3 ஆண்டுகளாக மனம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள இந்திராணி நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது. அவர் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்பொழுது அங்கே … Read more

சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை.!

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று கரும்பு லாரியை வழிமறித்தது.  தாளவாடியில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த லாரியை காரப்பள்ளம் சோதனைச் சாவடி அருகே வழிமறித்த காட்டு யானை, தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்புகளை ருசிபார்க்கத் தொடங்கியது.  சற்று நேரத்திற்குப் பின் யானை வனப் பகுதிக்கு சென்றதால், அங்கு அணிவகுத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாகப் புறப்பட்டன.  Source link

மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் பெற்ற 28 மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

சென்னை: மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை பெற்ற 28 மாணவ, மாணவியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார். 2016-ஆம் ஆண்டு நீட் தேர்வு அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னர் மாநில பாடத்திட்டத்தின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு 2022-ஆம் ஆண்டு இளங்கலை மருத்துவப் படிப்பை நிறைவு செய்த தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேந்த 28 மாணவ, மாணவியர்கள் மருத்துவப் படிப்பில் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களைபெற்றுள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் … Read more

'என்ன ஒரு டேஸ்ட்' – லாரியை வழிமறித்து கரும்பை சுவைத்த ஒற்றை காட்டுயானை

சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியை வழிமறித்து கரும்பை எடுத்துத் தின்ற காட்டுயானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது தாளவாடி மலைப்பகுதியில் கரும்பு அறுவடை செய்யப்பட்டு லாரிகளில் பாரம் ஏற்றி அடர்ந்த வனப்பகுதி சாலை வழியாக சத்தியமங்கலம் … Read more

தமிழகம் முழுவதும் மதுபான விற்பனை குறைவு; இதுதான் காரணமா?

தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மூலம் விற்பனை செய்யப்படும் மதுபானத்தின்  விற்பனை 6 சதவிகிதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மதுபான விற்பனையிலிருந்து அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் மதுபானத்தின் விலை சற்று உயர்த்தப்பட்டதிலிருந்து விற்பனை குறைதுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 4 முதல் 6 % வரை மதுமான விற்பனை குறைந்துள்ளது. மீடியம் வகை மதுபானத்தை அதிகம் வாங்கிய மதுப்பிரியர்கள் தற்போது விலை உயர்வால், சாதாரண … Read more