நீச்சல் போட்டியில் மயங்கிய வீராங்கனை… துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய பயிற்சியாளர்!

World Aquatics Championships in Budapest  Tamil News: பெண்களுக்கான உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் கலந்து கொண்டு நீச்சல் போட்ட அமெரிக்க நீச்சல் வீராங்கனை அனிதா அல்வாரெஸ் (வயது 25) போட்டியின் பாதியில் நீச்சல் குளத்தில் மயங்கினார். போட்டி தொடங்கிய போது வேகமாக நீந்தி சென்ற அவர் குளத்தின் நடுப்பகுதியில் மயங்கிவிடுகிறார். அப்போது அவர் தனது சுயநினைவையும் இழந்து விடுகிறார். அந்த சமயத்தில் அவரின் போட்டியை கவனித்துக் கொண்டிருந்த … Read more

தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா.. மீண்டும் ஊரடங்கா.? அமைச்சர் மா சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்.!!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் மட்டும் 500 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

மதுபோதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய இளைஞர்கள்… சிசிடிவி காட்சிகள் வெளியீடு

விழுப்புரம் அருகே பெட்ரோல் நிரப்ப மதுபோதையில் வந்த இளைஞர்கள், ஊழியர்கள் மீது நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில், தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜானகிபுரத்தில் பெட்ரோல் நிரப்ப வந்த கண்டம்பாக்கம் பகுதியை சேர்ந்த 6 இளைஞர்கள், பெட்ரோல் நிரப்பியும் நீண்ட நேரமாக இருசக்கரவாகனத்தை நகர்த்தாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது, பங்க் மேலாளர் வாகனத்தை நகர்த்த கூறியதால் மதுபோதையில் இருந்த இளைஞர்கள், ஆத்திரமடைந்து அவரை தாக்கியதுடன் தடுக்க வந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.மேலும், பெட்ரோல் பங்கில் இருந்த … Read more

ஓபிஎஸ், இபிஎஸ்ஸுடன் அண்ணாமலை, சி.டி.ரவி சந்திப்பு: பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவு கோரினர்

சென்னை: பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளநிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களான ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் தேர்தல் மேலாண்மைக் குழு உறுப்பினர் சி.டி.ரவி ஆகியோர் நேற்று சந்தித்து ஆதரவு கோரினர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்கடந்த 2017 ஜூலை 25-ம் தேதி பதவியேற்றார். அவரது பதவிக் காலம் வரும் ஜூலை24-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை … Read more

குடும்ப பிரச்னை காரணமாக மாமாவை வெட்டிக்கொன்ற மச்சான்கள்

மானாமதுரையில் குடும்ப பிரச்னை காரணமாக அக்காளின் கணவரை தம்பிகளே குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மானாமதுரை ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்தவர் மெக்கானிக் சுரேஷ்குமார். இவருக்கும் இவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கலைச்செல்வியின் உடன்பிறந்த தம்பிகளான கணேசன், கார்த்திக் மற்றும் தாய்மாமன் ஆறுமுகம் ஆகிய மூவரும் சுரேஷ்குமாரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினர். … Read more

Tamil news today live : இந்தியா- 17 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

Go to Live Updates பெட்ரோல், டீசல் விலை சென்னையில் 33வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆசிரியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய  உத்தரவு அரசுப் பள்ளிகளில் 13 ஆயிரம் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டும் என்று  கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.  ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை … Read more

தமிழகத்தில் இங்கு மட்டும் இன்று முதல் முகக்கவசம் கட்டாயம்.. தமிழக அரசு அறிவிப்பு.!!

கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினமும் 771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதில் சென்னையில் மட்டும் 500 பேர் வரை புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்? கவியரசு கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள்.!

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த இவர்களைப் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக… பாசமலர் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற கேள்வி எழும்..கண்ணதாசன்- விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவானதுதான் மனதை உருக்கும் இந்தப் பாடல். இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடப்போருக்கு உத்வேகமாக இருப்பவை எம்.எஸ்.வி. இசையமைத்த … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் மேல்முறையீட்டு மனு: விடிய விடிய நடந்த விசாரணையால் திருப்பம்

சென்னை: அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விடிய விடிய விசாரித்த நீதிபதிகள்,‘‘பொதுக்குழு நடத்தலாம். புதிதாக தீர்மானம் நிறைவேற்ற கூடாது’’என்று உத்தரவிட்டனர். இதனால், புதிய தீர்மானம் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டத்துக்கு தடை விதிக்ககோரி, வழக்கறிஞர் பி.ராம்குமார் ஆதித்தன், கோவையை சேர்ந்த கே.சி.சுரேன் பழனிசாமி, தணிகாசலம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். 22-ம் தேதி (நேற்று முன்தினம்) இந்த வழக்கை தனி … Read more

சாலையை மறித்து நின்ற காட்டு யானைகள் – அச்சத்தில் வாகன ஓட்டிகள்

அஞ்செட்டி அருகே சாலையில் யானைகள் நின்றிருந்ததால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா வனச்சரகம் குந்துக்கோட்டை காப்புக்காட்டில் கடந்த சில நாட்களாக யானைகள் சுற்றி வருகிறது. இதில், தனியாக பிரிந்த ஒரு குட்டியனை உட்பட நான்கு யானைகள் இரவு நேரத்தில் உணவு தேடி காப்புக்காட்டை விட்டு வெளியேறி தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் வாகனத்தை சிறிது தூரத்தில் நிறுத்தி வைத்தனர், இந்நிலையில், குட்டியுடன் … Read more