ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்கள்?

கவியரசு கண்ணதாசன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இருவருக்கும் இன்று பிறந்தநாள். 30 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழ்த் திரையுலகை ஆளுமை செய்த இவர்களைப் பற்றிய செய்தித் தொகுப்பு உங்களுக்காக… பாசமலர் படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைக் கேட்போருக்கு, இசையைக் கவிதை அலங்கரிக்கிறதா, கவிதையை இசை அலங்கரிக்கிறதா என்ற கேள்வி எழும்..கண்ணதாசன்- விஸ்வநாதன் ராமமூர்த்தி கூட்டணியில் உருவானதுதான் மனதை உருக்கும் இந்தப் பாடல். இன்றைக்கும் பலருக்குத் தாலாட்டாக, துன்பங்களுக்கு ஆறுதலாக, மனம் தொய்ந்து கிடப்போருக்கு உத்வேகமாக இருப்பவை எம்.எஸ்.வி. இசையமைத்த … Read more

பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு, ஓபிஎஸ் மீது பாட்டில் வீச்சு… – 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நடந்தது என்ன?

சென்னை: நீதிமன்ற உத்தரவால் அதிமுக பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஏற்கெனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கூட்டத்தில் இருந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பாதியில் வெளியேறினர். அவர்கள் மீது தண்ணீர் பாட்டில், காகிதம் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் அண்மையில் உள்கட்சித் தேர்தல் நடத்தப்பட்டு புதிய … Read more

விருதுநகர்: சாதி மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வாங்கிய சிவகாசி தம்பதியர்

விருதுநகர் மாவட்டத்தில் முதல் முறையாக சாதி மதம் அற்றவர்கள் என தம்பதியர் சான்றிதழ் வாங்கியுள்ளனர். சிவகாசி அருகே உள்ள தேவர்குளம் பஞ்சாயத்து பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (35). பட்டதாரி இளைஞரான இவர்ணு, கணினி பயிற்சி மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி தாலுகா அலுவலகத்தில் தனக்கும், தனது மனைவி சர்மிளாவுக்கும் சாதி, மதம் அற்றவர்கள் என சான்றிதழ் வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார். இதையடுத்து விண்ணப்பத்தை பெற்ற அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். … Read more

ஓ.பி.எஸ் அடுத்த ‘மூவ்’: ஆதரவு தலைவர்களுடன் டெல்லி பயணம்

OPS next move and reason for Delhi visit: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்புகளுக்குப் பிறகு, டெல்லி செல்கிறார் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். சென்னை வானரகத்தில் இன்று காலை நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் அல்லது எந்த முடிவும் எடுக்கப்படாமல் சலசலப்புடன் முடிந்தது. இந்த கூட்டத்தில் அ.தி.மு.க-வின் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஜூலை 11-ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு மீண்டும் கூடும் என புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.,வின் தற்காலிக அவைத்தலைவர் தமிழ் … Read more

பாலிடெக்னிக் மாணவர்கள் கவனத்திற்கு.. இன்று முதல் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.!

பாலிடெக்னிக் முடித்தவ மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல்கல்லுரிகளில் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் நேரடி 2 ஆம் ஆண்டு பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனவும் உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில்:”தகுதி வாய்ந்த டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் பிஎஸ்சி பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்று முடித்த மாணாக்கர்கள் நேரடி … Read more

5ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை… ஆசிரியர் மீது போலீசில் பெற்றோர் புகார்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே  5 ஆம் வகுப்பு சிறுமிக்கு  பாலியல் தொல்லை அளித்த புகாரின் பேரில் தொடர்புடைய ஆசிரியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் இயங்கி வரும் அரசு  தொடக்கப்பள்ளியில் படித்து வரும் 5ஆம் வகுப்பு மாணவி நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டுக்கு  சென்றவுடன் தாம் இனி பள்ளிக்கு செல்லமாட்டேன் என அழுதவாறு பெற்றோரிடம் கூறியுள்ளார். விசார்ரணையில் செந்தாரப்பட்டியை சேர்ந்த  அகஸ்டின்  தங்கையா என்ற பள்ளி ஆசிரியர் தமக்கு … Read more

விஜயகாந்த் உடல்நலம் குறித்து பிரதமர் நலம் விசாரிப்பு – விரைவில் குணமடைய வாழ்த்து

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விஜயகாந்த், உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார். தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் விலகி இருக்கிறார். இதனால் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவரது தம்பி சுதிஷ் ஆகியோர் கட்சிப் பணிகளை கவனித்து வருகின்றனர். இதற்கிடையே, விஜயகாந்த் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி அனுமதிக்கப் பட்டார். இந்நிலையில், நீண்ட காலமாக … Read more

கூட்டுக் கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார் பாஜக பிரமுகர் சூர்யா

பேருந்து உரிமையாளரிடம் பணம் கேட்டு பேருந்தை கடத்தியதாக பாஜக பிரமுகர் சூர்யா கூட்டுக் கொள்ளை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை கெடிலம் அருகே சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த தனியார் பேருந்தும், டெம்போ டிராவலர் வாகனமும், காரும் அடுத்தடுத்து மோதிக் கொண்டதில் சூர்யாவுக்கு சொந்தமான காரின் இடது புறத்தில் சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து விக்கிரவாண்டியில் இருந்த பேருந்தின் உரிமையாளர் அண்ணாமலையிடம், சூரியா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். காரில் ஏற்பட்ட சேதத்தை சரி செய்வதற்கு … Read more

எலும்பை வலுவாக்கும் உளுந்தங்களி ரெசிபி.. எப்படி செய்றதுனு பாருங்க!

உளுந்தில் நம் உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, வைட்டமின் B மற்றும் கார்போஹைடிரேட் சத்துக்கள் அதிகம் உள்ளன. இது வளர் இளம் பெண்களுக்கு ஏற்ற உணவாகும். இதை களி செய்து உண்பதால் மாதவிடாய் பிரச்சனைகள் தீரும். இதில் உள்ள இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவை, பெண்களின் இடுப்பு எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. உளுந்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நரம்பு மண்டலம் வலிமை பெற உதவுகிறது. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த உளுந்தங்களி எப்படி செய்வது … Read more

எம்.புதூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு.!!

கடலூர் மாவட்டம் எம் புதூர் பகுதியில் வானவேடிக்கை தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது.  இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.  இதையடுத்து,  எம் புதூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் … Read more