சாமி என்ன மன்னிச்சிடு.. இதுக்கு மேல சோதனை வேண்டாம்.. சிவன் கோவிலில் திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட நபர்!

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டையில் உள்ள சிவன் கோவிலில் பணம் திருடிய நபர் ஒருவர்,  மன்னிப்பு கேட்டு மீண்டும் உண்டியலில் போட்டுள்ள விநோதம் நடந்துள்ளது. கடந்த 14 ஆம் தேதி பௌர்ணமி தினத்தன்று தாம் இந்த பணத்தை கோவிலில் இருந்து திருடியதாகவும், ஆனால் அதன்பிறகு தனது குடும்பத்திற்கு பல்வேறு இன்னல்கள் நேர்ந்ததாகவும் தனது மன்னிப்பு கடிதத்தில் அந்த நபர் குறிப்பிட்டுள்ளார். உண்டியலை வழக்கம் போல் திறந்து எண்ணிய போது இந்த மன்னிப்பு கோரும் கடிதத்தையும், அதனுடன் 10 ஆயிரம் … Read more

பொதுக்குழு சலசலப்புகளுக்கு இடையே அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு

சென்னை: ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உச்சகட்ட சலசலப்புகளுக்கு மத்தியில், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் இன்று கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இன்று நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், அவருக்கு கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன்பின்னர், அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் பேசியது: “கடந்த 1972-ம் ஆண்டு, எம்ஜிஆரை திராவிட இயக்கத்திலிருந்து நீக்கியபோது, நான் ஓட்டிவந்த பேருந்தை சாலையிலேயே … Read more

சுப்மான் கில் கவர் டிரைவ்: இங்கிலாந்தில் சாதகமாக இருக்குமா?

Shubman Gill Tamil News: இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி முதலில் லீசெஸ்டர்ஷைர் கிளப் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ வெளியிடப்பட்டது. அதன் ஒரு சிறிய வீடியோவில், சுப்மான் கில் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங் செய்வது காட்டப்பட்டது. எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் கேப்டன் ரோகித்துடன் பெரும்பாலும் ஓபன் செய்யவுள்ள கில், அவர் ஒரு டிரைவ் ஆடுவதை பிரமிப்புடன் பார்த்தார். அவர் … Read more

ஈரோட்டில் மொபட் மீது லாரி மோதி விபத்து.! பெண் ஒருவர் உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் மொபட் மீது லாரி மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டடிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு கணவர் சண்முகம் மொபட்டில் அழைத்து சென்றுள்ளார். பின்பு சிகிச்சை பெற்று கணவன்-மனைவி இருவரும் மீண்டும் வீட்டிற்கு மொபட்டில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சாந்தி தியேட்டர் பிரிவு அருகே ஈரோடு சத்தி மெயின் ரோட்டில் திடீரென பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக … Read more

சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயார் – வைத்தியலிங்கம்

தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதன் மூலம், பொதுக்குழுக் கூட்டமே செல்லாததாகி விட்டதாகவும், சுமூக பேச்சுவார்த்தைக்கு ஓ.பன்னீர்செல்வம் எப்போதும் தயாராக உள்ளதாகவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சென்னையில் பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்தியபின் பேட்டியளித்த அவர், அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் பொதுக்குழுவை கூட்ட அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தீர்மானங்கள் ரத்து செய்தது குறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர உள்ளதாகவும் வைத்தியலிங்கம் கூறினார். Source link

'அழைப்பு வந்தது, அதனால் செல்கிறேன்' – டெல்லி புறப்பட்டுச் சென்ற ஓபிஎஸ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். புதிய குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பாஜக கூட்டணயின் வேட்பாளராக திரவுபதி முர்மு போட்டியிடுகிறார். இவர் இன்று நாடாளுமன்ற மாநிலங்களவைச் செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். இந்நிலையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்லம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை தனித்தனியாக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, … Read more

எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் ஒரு நாளாவது அரியலூரில் இருந்து ரயில் ஏறுங்க!

அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான நடைமேடைகளில் மேற்கூரை அமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். தென் தமிழகத்துக்கு இயக்கும் ரயில்களில் பெரும்பாலானவை அரியலூர், திருச்சி, மதுரை வழியாக செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 4 நடைமேடைகளில் 4-வது நடைமேடை வழியாக சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. எஞ்சிய 3 நடைமேடைகளில், 1, 2 ஆகியவற்றில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில்களும், 3-ல் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. … Read more

#மதுரை || கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை.!

மதுரை மாவட்டத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் பால்பாண்டி(30). இவரது மனைவி அம்சவள்ளி(26). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சமயநல்லூரில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பால்பாண்டி தனது மனைவியுடன் சென்றுள்ளார். இதையடுத்து நிகழ்ச்சியில் பால்பாண்டி, அம்சவள்ளிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் தகராறு முற்றிய நிலையில் பால்பாண்டி மனைவியை … Read more

ஓங்கி அடிச்சா ஒன்றடன் வெயிட்ரா.. பாக்குறியா… பாருடா…! சண்டையில கிழியாத சட்டையில்ல குமாரு..!

மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடத்திய போராட்டத்தின் போது ரெயில் நிலையத்துக்குள் நுழையவிடாமல் தடுத்த ஆயுதப்படை ஏட்டுவை, மாவட்ட செயலாளர் , கன்னத்தில் பளார் என்று அறைந்த காட்சிகள் வெளியாகி உள்ளது… அக்னிபத் திட்டத்திற்கு எதிராக மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேரணியாக சென்று ரெயில் நிலைய முற்றுகை போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை ரெயில் நிலையத்துக்குள் நுழைய விடாமல் போலீசார் தடுத்து நிறுத்திய போது இரு தரப்புக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தோழர்கள் போலீசாரின் தடையை மீறி … Read more

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்தநாள் விழா: முதல்வர் வாழ்த்து

சென்னை: புதுக்கோட்டை சமஸ்தான மறைந்த மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாளையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் 100வது பிறந்த நாள் விழாவையோட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “புதுக்கோட்டை சமஸ்தானத்தின் மறைந்த மாமன்னர் ஸ்ரீ பிரகதாம்மாள் தாஸ் எச்.எச்.ராஜா ராஜகோபால தொண்டைமானின் 100-வது பிறந்த நாள் விழா கொண்டாடுவது அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் ஏறத்தாழ 300 ஆண்டுகள் (கி.பி. … Read more