அதிமுகவின் ஒற்றைத் தலைமை எடப்பாடி? தற்போது ஓபிஎஸ்-ன் கருத்து என்ன…? அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!

அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடந்து முடிந்துள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றபடி அதிமுகவின் இந்த பொதுக்குழு கூட்டத்தில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. மேலும் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் இடம், பொதுக்குழு உறுப்பினர்கள் சார்பாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ‘உடனடியாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும். அதற்கான தேதியை இப்போதே நீங்கள் அறிவிக்க வேண்டும். அந்த பொதுக்குழு கூட்டத்தில் … Read more

அண்மையில் பாஜகவில் இணைந்த திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது..!

பணம் கேட்டு மிரட்டிய புகாரில், திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 11ஆம் தேதி உளுந்தூர்பேட்டை அருகே தனியார் ஆம்னி பேருந்து மோதியதில் சூர்யாவின் கார் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, தனது காரில் ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த பேருந்து நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து ஒன்றை சூர்யா எடுத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியதாக புகாரளிக்கப்பட்டது. பேருந்தின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் சூர்யாவை திருச்சி … Read more

புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம்: தமிழிசை தொடக்கிவைத்தார்

புதுச்சேரி: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி அன்னபூர்ணா அறக்கட்டளை சார்பில், தினசரி காலை ஊட்டச்சத்து பானம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு குழந்தைகளுக்கு தரப்படும். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்வில் துணை நிலை ஆளுநர் தமிழிசை இத்திட்டத்தை துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி முன்னிலை வகித்தார். கல்வியமைச்சர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை கூறியது: “நான் சத்யசாய் பக்தை. … Read more

ஏடிஎம்-ல் பணத்தை தவறவிட்ட நபர்! முறையாக ஒப்படைத்த கூலித்தொழிலாளிகளுக்கு குவியும் பாராட்டு

மதுரையில் வங்கி ஏடிஎம்மில் பெட்ரோல் பங்க் மேலாளரொருவர் தவறவிட்ட 40 ஆயிரம் ரூபாய் பணத்தை நேர்மையோடு ஒப்படைத்த இளைஞர்களுக்கு காவல்துறையினர் நேரில் பாராட்டு தெரிவித்துள்ளனர். மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் அப்பகுதியில் பெட்டோல் நிலைய மேலாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் காமராஜர் சாலை பகுதியில் இருந்த இந்தியன் வங்கி ஏடிஎம் மையத்தில், சரவணன் 40 ஆயிரம் ரூபாய் பணத்தினை டெபாசிட் செய்துள்ளார். டெபாசிட் செய்து விட்டு சரவணன் … Read more

எகிறும் விமான டிக்கெட் விலை: சென்னை- துபாய் கட்டணம் இவ்வளவா?

Chennai  – Doha Air ticket price become costlier Tamil News: இந்தியாவில் உள்நாட்டு விமான கட்டணம் உயர்த்தப்பட்டு வரும் நிலையில், நாட்டில் இருந்து வளைகுடா நாடுகளான துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் விமான டிக்கெட்டின் விலை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து துபாய், தோகா உள்ளிட்ட நாடுகளுக்கு குறைவான நேரடி விமானங்கள் மற்றும் போக்குவரத்துப் பயணிகளின் அதிக தேவை காரணமாக டிக்கெட் விலை உயர்த்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது. வளைகுடா நாடுகளில் உள்ள … Read more

இன்று பொதுக்குழு கூட்டத்தில்… ''அண்ணன் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்'' – எடப்பாடி கே பழனிச்சாமியின் அந்த உரை.! 

இன்று காலை தொடங்கிய அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தற்காலிக அவைத்தலைவர் செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு தலைமை ஏற்க அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அவரின் அந்த உரையில், ‘காலம் எல்லாம் ஏழை எளிய மக்கள் மீது அன்பும், பண்பும், பாசமும் கொண்ட நல்லாட்சி நடத்திய புரட்சித்தலைவர், புரட்சித்தலைவியை வணங்கி, தற்காலிக கழக அவைத் தலைவரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய முன்னாள் தலைவருமான டாக்டர் தமிழ்மகன் உசேன் அவர்களை கழக செயற்குழு, … Read more

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் பலி.. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு

கடலூர் மாவட்டம் எம்.புதூர் கிராமத்தில் பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். வனிதா என்பவருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது மருந்து உராய்வினால் திடீரென வெடி விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. அதில், சிக்கி 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணையில், இந்த பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த ஆண்டு முடிவடைந்தது, மீண்டும் உரிமத்திற்காக விண்ணப்பித்து இருப்பதும் தெரியவந்தது. … Read more

சென்னை பெரும்பாக்கத்தில் குப்பை மேடாக மாறிவரும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம்

சென்னை: சென்னை பெரும்பாக்கத்தில் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட இடம் இப்போது குப்பை மேடாக மாறி வருகிறது. சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டுவததை தவிர்க்க மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தி குப்பை தரம் பிரித்து அளிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இதன்படி, கடந்த மே 27-ம் தேதி முதல் ஜூன் 10-ம் … Read more

சூர்யா சிவாவை விடுவிக்க கோரி திருச்சியில் பாஜக பிரமுகர்கள் சாலை மறியல்

பாஜகவின் OBC பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா திருச்சியில் இன்று மாலை கைது செய்யப்பட்டார். அவர் மீது கூட்டுக் கொள்ளை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் திருச்சி கண்டோன்மெண்ட் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரை விடுதலை செய்ய வலியுறுத்தி பாஜகவினர் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்திலும், பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக-வினருக்கும், போராட்டத்தை கலைக்க முயன்ற போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் … Read more

அறுவை சிகிச்சை செய்த அழகி மரணம்; அச்சுறுத்தும் குரங்கு அம்மை… உலகச் செய்திகள்

Brazil model dead, monkey box, Sri lanka crisis today world news: உலக நாடுகளில் நடைபெற்ற முக்கியமான, சுவையான செய்திகளின் தொகுப்பை இப்போது பார்ப்போம். குளத்தில் மூழ்கிய நீச்சல் வீராங்கனையை மீட்ட பயிற்சியாளர் அமெரிக்காவின் நீச்சல் வீராங்கனையான அனிதா அல்வாரெஸ், புடாபெஸ்டில் 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற FINA உலக நீர்வாழ் சாம்பியன்ஷிப் போட்டியில் சிங்கிள்ஸ் இறுதிப் போட்டியில் மயங்கி விழுந்ததையடுத்து, உடனடியாக அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபியூன்டெஸால் குளத்தின் அடிப்பகுதியில் இருந்து அவரை … Read more