அ.தி.மு.க கதை முடியும் தருவாயில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்திய இ.பி.எஸ்

Arun Janardhanan  EPS vanquishes OPS as an ADMK story nears end; P.S.: Two alike is a crowd: அதிகாலையில் நீதிமன்றத் தலையீட்டில் இருந்து அதன் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரை முழுவதுமாக மக்கள் பார்வையில் சிதைப்பது வரை, அதிமுக தலைமைக்கான நாடகம் வியாழன் அன்று எதிர்பார்க்கப்பட்ட சுவாரஸ்யத்தை முழுமையாக நிறைவேற்றியது. புழுதி படிந்தபடி நிமிர்ந்து நின்றவர் எடப்பாடி கே.பழனிசாமி; மொத்தத்தில் தோல்வியை சந்தித்தவர் போட்டியாளர் ஓ.பன்னீர்செல்வம். கடைசி வரை, 71 வயதான ஓ.பி.எஸ், … Read more

ஒரே நாளில் இரு சம்பவம்… நேரம் வரட்டும்… முதல்வர்கள் ஸ்டாலின், மம்தாவுக்கு செய்தி அனுப்பிய அண்ணாமலை.!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் திரு பழனி கனகராஜ் அவர்களின் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக. இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது … Read more

குடியரசுத் தலைவர் தேர்தல் | “வாய்ச்சொல்லில் மட்டுமே திமுக, விசிக, காங். கட்சிகளின் சமூக நீதி” – அண்ணாமலை

சென்னை: “இந்திய குடியரசுத் தலைவராக ஒரு பழங்குடியினத்தவர் வருவதை எதிர்த்து உயர்சாதி வகுப்பினரை வேட்பாளராக நிறுத்தும் திமுக, திருமா, காங்கிரஸ் கட்சிகளின் சமூக நீதி என்பது வாய்ச்சொல்லில்தான் இருக்கிறது” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை, “பாஜக சார்பில், இந்திய வரலாற்றில் முதன்முறையாக ஒடிசா மாநிலத்தின் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு பெண்மணிக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக ஏற்படுத்தி உள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவராக … Read more

வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறினால் நடவடிக்கை – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

மாநகராட்சியின் வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறும் வாகன உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி வாகன நிறுத்த இடங்களில் விதி மீறும் வாகன உரிமையாளர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. வாகன நிறுத்த இடங்களில் விதிகளை மீறி வாகனங்களை நிறுத்தவது மற்றும் கட்டணம் செலுத்தாமல் செல்வோர் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து முடிவு செய்துள்ளது. மொத்தமாக … Read more

திருச்சி சிவா மகன் திடீர் கைது: பா.ஜ.க ஷாக்

BJP Annamalai condemns Trichy Surya Siva arrest: தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளருமான சூர்யாசிவா திருச்சி போலீசாரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யா தன் தந்தை மீதுள்ள கருத்து வேறுபாட்டால் தி.மு.க.,வில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார்.  அங்கு அவருக்கு மாநில சிறுபான்மை பிரிவு செயலாளராக கடந்த வாரம் பதவி அளிக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 11 ம் தேதியன்று, உளுந்தூர் … Read more

திருமாவளவனை சுத்துப்போட்ட அதிமுகவினர்.! இது எப்போ நடந்துச்சு… சொல்லவே இல்லை.!

சென்னை, வானகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தனது தாயைக் காண்பதற்காக சென்ற திருமாவளவனை, அங்கு பொதுக்குழு கூட்டத்திற்காக வந்த அதிமுகவினர் சுத்துப்போட்டு, திருமாவளவனின் கையை பிடித்து குலுக்கி உள்ளனர். சென்னை வானகரத்தில் இன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக வானகரம் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்த பகுதி முழுவதும் அதிமுகவினர் திரளாக கூடி இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த திருமாவளவனை அதிமுகவின் சூழ்ந்துகொண்டு கை குலுக்கியதாக … Read more

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1063 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழகத்தில் நேற்று 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது நோய் தொற்றில் இருந்து 567 பேர் குணமடைந்தனர் – சுகாதாரத்துறை 5174 பேர் சிகிச்சையில் இருப்பதாக சுகாதாரத்துறை அறிவிப்பு Source link

புதிய கல்விக் கொள்கையில் பல நன்மைகள்: அனைத்து மாநிலங்களும் பின்பற்ற தமிழிசை அறிவுறுத்தல்

புதுச்சேரி: பல நன்மைகள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ”ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் இந்தியாவில் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. அதனால்தான் பிரதமர் எப்போதும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். புதிய கல்வி கொள்கை குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை வலியுறுத்துகிறது. இதுவே, பிரதமரின் தொலைநோக்கு பார்வை. … Read more

கொரோனா கால செலவுகளின் தாக்கம் -அரசு நிகழ்வுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

கொரோனா கால செலவுகளை முன்னிட்டு அரசு நிகழ்வுகளுக்கு முன்பு விதிக்கப்பட்டிருந்த பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொருளாதார நிலை இதுகுறித்து நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்ட அரசாணையில், கொரோனா பரவலைத் தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட செலவுகளை முன்னிட்டு, அரசுக்கு ஏற்படும் மற்ற பல்வேறு செலவீனங்களை குறைக்கும் வகையில், தமிழக அரசு கடந்த 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் தடை உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகங்கள், … Read more

இ.பி.எஸ் அணி ஆவேச முழக்கம்; ஓ.பி.எஸ் வெளிநடப்பு… அ.தி.மு.க பொதுக் குழு வீடியோ- படங்கள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் சூறாவளியாக சுழன்று வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்துள்ளது. பொதுகுழு கூட்டத்தில் இ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஆவேசமாக முழக்கமிட ஓ.பி.எஸ் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்த நிகழ்வுகளின் வீடியோ, படங்களை இங்கே காணலாம். அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை விவகாரத்தால், ஒற்றைத் தலைமை யார் என்று ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் எழுந்தது. இதில் இ.பி.எஸ் கை ஓங்கிய நிலையில், ஓ.பி.எஸ் உயர் … Read more