`அதிமுக ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?’- ஜெயக்குமார் பதில்

ஒற்றைத்தலைமை குறித்து பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு சென்று விட்டு வெளியே வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் இன்று எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினர். அந்த சந்திப்பின்போது தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளருக்கு … Read more

முகத்திற்கு நேராக ஓ.பி.எஸ்-ஐ நோகடித்த சீனியர்கள்: அ.தி.மு.க பொதுக் குழு ஹைலைட்ஸ்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூறாவளியாக வீசிவரும் நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம், உயர் நீதிமன்ற உத்தரவு, மேல்முறையீடு உத்தரவுகளுக்கு பிறகு நடைபெற்றுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், பரபரப்பாக நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்-ஐ சீனியர்கள் பலரும் நோகடித்த சம்பவம் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் உள்ளனர். கடந்த ஜூன் 14 ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற அதிமுக தலைமைக் … Read more

தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்திற்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

கோவில் திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் உள்ளிட்ட முக்கிய தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடியில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிமின் அடக்க தலம் உள்ளது. இங்கு முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். … Read more

மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்பு.. சக நண்பர்களே கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் அம்பலம்

தேனியில், மாயமான பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில், நண்பர்களே கொலை செய்து கிணற்றில் வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. உத்தமபாளையத்தைச் சேர்ந்த 16 வயதான மாதவன் என்ற மாணவன், கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் விளையாட சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மாணவனை தேடி வந்த போலீசார், பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்டனர். சந்தேகத்தின் பேரில் மாணவனின் நண்பர்களான, 17 வயது சிறுவர்கள் இருவரையும், அல்லா பிச்சை என்ற இளைஞரையும் … Read more

‘பன்னீர்’ ரோஜா மாலையால் கொதித்த இபிஎஸ் முதல் வீரமணியின் ‘சாவு மணி’ சிற்றுரை வரை – அதிமுக பொதுக்குழு ‘சம்பவங்கள்’

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கொண்டுவரப்பட்ட 23 தீர்மானங்களையும் பொதுக்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டதால், வரும் ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை நடந்த முக்கிய ‘சம்பவங்கள்’: > அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கோயம்பேட்டை அடுத்துள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. > பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கிரீன்வேஸ் … Read more

அதிமுக பொதுக்குழுவில் காலையிலிருந்து நடந்தது என்ன? – டைம்லைன்

அதிமுகவில் மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் காலையிலிருந்து நடந்தது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.  காலை 5 மணி: பொதுக்குழு கூட்டத்திற்கு காலை 5 மணி முதலே பொதுக்குழு உறுப்பினர்கள் வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திற்கு வரத்தொடங்கினர். காலை 7 மணி காலை 7 மணியளவில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரத்தொடங்கி, பொதுக்குழு கூட்ட அரங்கிற்கு வந்தனர். காலை 8 மணி அதன் பின்னர் காலை 8.40 மணியளவில் … Read more

ஜூலை 11-ல் மீண்டும் அ.தி.மு.க பொதுக் குழு: ஒற்றைத் தலைமை உறுதி என அறிவிப்பு!

அதிமுக பொதுக்குழு கூட்டம், ஜூலை 11ஆம் தேதி மீண்டும் கூடும் என்று அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார். அதிமுக பொதுக் குழுக் கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் இன்று காலை 11.30 மணிக்குத் தொடங்கியது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வந்த நிலையில், பொதுக்குழு கூடியது. அப்போது, மேடைக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அனைத்து தீர்மானங்களையும் நிராகரிப்பதாகக் கூறினார். பிறகு பேசிய கே.பி. முனுசாமி, அனைத்துத் … Read more

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழப்பு.!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி குப்புசாமி நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகள் கோபிகா ஸ்ரீ(5). இவர் ஆட்டிசம் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி சிறுமி ஆவார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் தனது தந்தையுடன் உறங்கிக் கொண்டிருந்த சிறுமி திடீரென படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வந்துள்ளார். இதையடுத்து அங்கிருந்த தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாளியில் தவறி விழுந்துள்ளார். சிறிது … Read more

அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக அறிவிப்பு.!

பெரும் எதிர்ப்பார்புகளுக்கு இடையே நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜுலை 11ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.  ஒற்றைத் தலைமை விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு இடையே நடந்த சட்டப் போராட்டம், கருத்து மோதல்களுக்கு மத்தியில் சென்னை அடுத்த வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் திரண்டு … Read more

கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கடலூர் வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடலூர் மத்திய சிறை அருகில் எம்.புதூர் பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடலூர் மாவட்டம், எம்.புதூர் கிராமத்தில் உள்ள … Read more