தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி: 10 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்ற தமிழக அணி

தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டியில் தமிழக வீரர்கள் 10 தங்கம் உட்பட 22 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளனர். தேசிய அளவிலான தேக்வாண்டோ போட்டி கடந்த 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் சேலத்தில் இருந்து 25 வீரர் வீராங்கனைகள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் … Read more

பொதுக்குழுவை பாதியில் புறக்கணித்த ஓ.பி.எஸ்- வைத்திலிங்கம்

சட்டத்திற்கு புறம்பாக நடக்கும்  பொதுக்குழுவை எதிர்ப்பதாக ஓ பன்னீர் செல்வம் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோர் தெரிவித்துவிட்டு பாதியிலேயே பொதுக்குழு கூட்டத்தைவிட்டு கிளம்பிச் சென்றனர். அதிமுக பொதுக்குழு கூட்டம் இப்போது விறுவிறுப்பக்க நடந்து முடிந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் அதிமுக அவைத் தலைவராக தமிழ் மகன் உசேன் தொடர வேண்டிய தீர்மானத்தை திண்டுக்கல் சீனிவாசன் முன்மொழிந்தார் . இந்த தீர்மானத்தை ஜெயக்குமார் வழிமொழிந்தார். இதையடுத்து தமிழ் மகன் உசேன் அதிமுகவின் அவை தலைவராக தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். … Read more

#BREAKING || கடலூர் : பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 3 பேர் உயிரிழப்பு.. 2 பேர் படுகாயம்.!

கடலூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்து 3 உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் எம்.புதூர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான சிறிய அளவிலான பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. அதில் இன்று வழக்கம்போல ஊழியர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வானவேடிக்கை பட்டாசுகள் வெடித்து சிதறியுள்ளது. இதனால் பட்டாசு ஆலை உருகுலைந்த நிலையில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும்,  இருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். … Read more

தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவுகிறது: மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் பிஏ4, பிஏ5 வகை கரோனா வேகமாக பரவி வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரித்துள்ளார். சென்னை அடையாறு கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசிகையில், “உலகம் முழுவதும் தினசரி 10 … Read more

“சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு” என முழக்கமிட்டு வெளியேறினார் ஓபிஎஸ்

ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் எழுந்துள்ள சூழலில் அதிமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு நடைபெறுகின்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் வெளியூரில் இருந்து வாகனங்கள் மூலம் வானகரத்தில் குவிந்தனர். கடும் போக்குவரத்து நெரிசலை கடந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பொதுக்குழு நடக்கும் மண்டபத்திற்கு வந்தடைந்தனர். … Read more

நண்பனுக்கு நேரில் பிறந்த நாள் வாழ்த்து… இணையத்தை கலக்கும் தோனியின் வீடியோ!

MS Dhoni Tamil News: இந்திய மண்ணில் நடைபெற்ற 15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 29ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதன் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – ராஜாதான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இந்தாண்டு நடந்த மெகா ஏலத்திற்கு பிறகு அணியை மறுகட்டமைத்த நடப்பு சாம்பியானான சென்னை சூப்பர் கிங்ஸ் 4 தொடர் தோல்விகளால் துவண்டது. மேலும், லீக்கில் நடந்த 14 ஆட்டங்களில் 4ல் … Read more

அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு.. கோபத்தில் மேடையில் இருந்து வெளியேறிய ஓபிஎஸ்.. அரங்கம் பரபரப்பு.! 

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தொடக்கி நடந்து வருகிறது. 2,665 பேர் பங்கேற்கும் இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு எடப்பாடி கே பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தனர். அப்போது இரட்டை தலைமை வேண்டாம்… ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இந்நிலையில், 23 தீர்மானங்களையும் கழக செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுடைய பார்வைக்கு வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுக்குழு உறுப்பினர்கள், நிராகரிக்கிறோம்.. நிராகரிக்கிறோம்.. என்று எதிர்த்தனர். அப்போது ஆவேசமாக எழுந்துவந்து முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், … Read more

ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்க ஜூலை 11-ம் தேதி மீண்டும் கூடும் அதிமுக பொதுக்குழு

சென்னை: ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுக் குழுவில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜூலை 11-ம் தேதி அடுத்த பொதுக்குழு மற்றும் செயற்குழு நடைபெறும் என்று அறிவித்தார். அதிமுக பொதுக் குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் இன்று காலை நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் 2100 பொதுக்குழு மற்றும் செயற்குழு சார்பில் அவைத் தலைவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்கிறோம் என்று கூறி மனு ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து … Read more

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அதிமுக பொதுக்குழு கூட்டங்கள்… ஒரு பார்வை

அதிமுக வரலாற்றில் இதுவரை நடைபெற்ற சில பொதுக்குழுக்கூட்டங்கள் பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.அவை எப்போது நடந்தன? அவற்றில் எடுக்கப்பட்ட முடிவுகள் என்னென்ன? முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பரில் மறைந்த பின்னர், அதே மாதக் கடைசியில் அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழு சென்னை வானகரத்தில் கூடியது. சுமார் 2 ஆயிரத்து 100 பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். ஆனால், சசிகலா  உடன் ஏற்பட்ட மோதல் … Read more

பொதுக் குழுவில் ஓ.பி.எஸ்- இ.பி.எஸ் பங்கேற்பு: வருகை பதிவேட்டில் உறுப்பினர்கள் கையெழுத்து இடாத மர்மம்

பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று கூறியுள்ள நிலையில். கூட்டத்திற்கு வந்த பெரும்பாலான உறுப்பினர்கள் வருகைப்பதிவேட்டில் கையெடுத்திடவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் கடந்த வாரம நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், இந்த கோரிக்கையை ஏற்று்ககொண்ட கட்சி நிர்வாகிகள் கட்சியில் ஒற்றை தலைமை குறித்து யோசிக்க தொடங்கினா. இதனிடையே கட்சி யாருடைய தலைமையில் இயங்கும் என்பது குறித்து இபிஎஸ் ஒபிஎஸ் … Read more