பூப்போல மனசு.. ஏறாத வயது… தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். தமிழ் சினிமாவின் அடையாளமாக திகழும் தளபதி விஜய் கடந்த 1992-ம் ஆண்டு வெளியான நாளை தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ்’ ஆபீஸ் வசூல் நாயனாக வலம் வருகிறார். இன்று தளபதி விஜயின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் பலரும் … Read more

பொதுக்குழு நடக்கும் இடம் நோக்கி பேரணியாக சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்களால் பரபரப்பு.! 

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள, சென்னை வானகரத்தில் அமைந்துள்ள திருமண மண்டபத்தை நோக்கி, ஓபிஎஸ் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் பேரணியாக வந்தனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், இத்தனை பேர் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவித்தனர். மேலும் அவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.  அப்போது ஓபிஎஸ் தரப்பில் வந்த ஆதரவாளர்கள், நாங்களும் கட்சியின் நிர்வாகிகள் தான். நாளை நடக்கவுள்ள ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்திற்கு ஏற்பாடுகள் எப்படி நடந்து இருக்கிறது? ஓபிஎஸ்-க்கு எதிராக ஏதேனும் பேனர்கள் … Read more

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி..!

சென்னையை அடுத்த வானகரத்தில் நாளை அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம் – சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தை திட்டமிட்ட படி நடத்தலாம் என அனுமதி அளித்தது சென்னை உயர்நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தை தடை செய்யக்கோரி தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவு தீர்மானம் தொடர்பாக எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி தீர்மானம் நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்கள் கொண்டு வரவோ தடை இல்லை – நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பொதுக்குழுவுக்கு … Read more

அறந்தாங்கி பேருந்து நிலையம் மேம்படுத்தப்படுமா?

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டைக்கு அடுத்தபடியாக நகராட்சியாகவும், மக்கள்அதிகம் கூடும் இடமாகவும் இருப்பது அறந்தாங்கி. இது பேரூராட்சியாக இருந்தபோது, 1971-ல் கலைஞர் கருணாநிதி பெயரில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. தொடக்கத்தில் இங்கிருந்து குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர், நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு அறந்தாங்கியில் இருந்து சென்னை, மதுரை, கோவை, திருப்பூர், சிதம்பரம், திருச்செந்தூர், … Read more

பேசித் தீர்த்துக்கொள்ளலாம்… பொதுக்குழுவுக்கு வாருங்கள்; ஓ.பி.எஸ்-க்கு இ.பி.எஸ் அழைப்பு

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், இருவரும் தங்கள் ஆதரவாளர்களை சந்தித்து வருகின்றனர். இதில் இ.பி.எஸ்-சின் கை ஓங்கியுள்ளதாகவே தெரிகிறது. அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருதரப்பு வாதங்களும் நடந்து வருகிறது. ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் திரண்டு இ.பி.எஸ்-க்கு … Read more

#சற்றுமுன் || ஆட்டத்தை ஆரம்பித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள்., கொந்தளிப்பில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள்… பரபரப்பு சம்பவம்.!

சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை எடப்பாடிபழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதே சமயத்தில் இந்த பொதுக்குழு கூட்டம் நடைபெற கூடாது என்ற நோக்கத்தோடு ஓபிஎஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகார் நிராகரிக்கப்பட்டது.  அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வழக்கு தொடர்ந்து உள்ளனர். … Read more

நெல்லையில் 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.!

நெல்லை மாவட்டம் அம்பை அருகே, 7 மாத பெண் குழந்தையை கடத்தி விற்க முயன்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கீழ பாப்பாகுடியை சேர்ந்த இசக்கியம்மாள், கடந்த 19-ம் தேதி இரவு தனது குழந்தையுடன் வீட்டில் உறங்கிய நிலையில், அதிகாலை குழந்தை காணாமல் போனதாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், செல்போன் சிக்னல், சிசிடிவி காட்சி அடிப்படையில், ஆலங்குளத்தில் குழந்தையை விற்க முயன்றவர்களை கைது செய்தனர். Source link

புதுச்சேரியில் நூறு நாள் பணியில் ஈடுபட்ட 30 பெண்களைக் கொட்டிய விஷக் குளவிகள்: 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களை விஷக் குளவிகள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம் நத்தமேட்டில் காளி கோயில் அருகே உள்ள குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏரி மற்றும் … Read more

’ஓபிஎஸ்ஸை ஏற்காவிட்டால் ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும்’ – மர்மநபர் மிரட்டல்

அதிமுகவின் ஒற்றை தலைமையாக ஓ. பன்னீர்செல்வம் ஏற்கப்படாவிட்டால் சேலம், தாம்பரம் ரயில் நிலையங்களில் குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்த நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சேலம் மற்றும் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைகளுக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார். இதையடுத்து இரண்டு ரயில் நிலையங்களில் காவல்துறையினர் நடத்திய சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த … Read more

5 கிலோ நகை கொள்ளைச் சம்பவம்: மகாராஷ்டிராவைச் சேர்ந்த 2 கொள்ளையர்கள் கைது!

சென்னையைச் சேர்ந்த நகைக்கடை ஊழியரிடம் தஞ்சாவூரில் 5 கிலோ தங்கம் மற்றும் ரூ.14 லட்சம் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 2 கொள்ளையர்களை எல்லை தாண்டி சென்று கைது செய்துள்ளனர் தனிப்படை போலீஸார். ஆனால் களவுபோன நகை எதுவும் இதுவரை கைப்பற்றப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை தெற்கு வீதியை சேர்ந்தவர் மணி (56). தற்போது சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்துவரும் மணி சென்னை என்.எஸ்.பி சாலையில் உள்ள நகை மொத்த வியாபாரிகள் செய்து கொடுக்கும் நகைகளை … Read more