புதுச்சேரியில் நூறு நாள் பணியில் ஈடுபட்ட 30 பெண்களைக் கொட்டிய விஷக் குளவிகள்: 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
புதுச்சேரி: புதுச்சேரியில் 100 நாள் வேலை திட்டப் பணியில் தூர்வாரும் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்களை விஷக் குளவிகள் கொட்டியதில் 30-க்கும் மேற்பட்டோர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். புதுச்சேரி நெட்டப்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஏரிப்பாக்கம் நத்தமேட்டில் காளி கோயில் அருகே உள்ள குளத்தை 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணி இன்று நடைபெற்றது. இப்பணியில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் ஈடுபட்டு இருந்தனர். ஏரி மற்றும் … Read more