மாஃபாய், மைத்ரேயன்… இ.பி.எஸ் நோக்கி அணிவகுக்கும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள்!

OPS supporters Mafa Pandiyarajan and Maitreyan meet EPS: ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான மாஃபாய் பாண்டியராஜன் மற்றும் முன்னாள் எம்.பி மைத்ரேயன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை கோரிக்கை வலுத்து வருகிறது. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இ.பி.எஸ்-க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓ.பி.எஸ் பக்கம் இருந்த மாவட்டச் செயலாளர்கள் அடுத்தடுத்த நாட்களில் இ.பி.எஸ் அணிக்கு மாறியுள்ளனர். இதில் உச்சகட்டமாக ஓ.பி.எஸ் தர்மயுத்தம் … Read more

7 மாத குழந்தை கடத்தல்.. அதிரடி நடவடிக்கை எடுத்த போலீசார்.!

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே கீழ பாப்பாகுடி காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்த கார்த்திக், இசக்கியம்மாள் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு பிரியங்கா என்னும் 7 மாத பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு வீட்டில் இசக்கியம்மாள் தனது குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்தார். ஆனால் 20 ஆம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தபோது குழந்தை காணாமல் போனது தெரிய வந்துள்ளது.  இதனையடுத்து குழந்தையின் பெற்றோர் பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக … Read more

பெல்ட்டால் கழுத்தை நெறித்து தம்பியை கொலை செய்த அண்ணன் கைது.!

சென்னை முகப்பேரில் மது போதையில் தகராறு செய்த தம்பியை பெல்ட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு தகராறு செய்து வந்த சந்திரன் என்பவர், செவ்வாய்கிழமை இரவு மது போதையில் அண்ணன் மகளின் செல்போனை பறித்து போட்டு தகராறு செய்துள்ளார். ஆத்திரமடைந்த அவரது அண்ணன் ராசு, சந்திரனை அடித்ததுடன், பெல்ட்டால் கழுத்தை இறுக்கி உள்ளார். மயக்கமடைந்த சந்திரனை 108 ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்து … Read more

இலங்கை நபர்கள் இருவரின் தண்டனைக் காலம் குறைப்பு: இந்தியாவை விட்டு வெளியேறவும் உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: தமிழகத்தில் விடுதலை புலிகள் இயக்கத்தை மறுகட்டமைக்க முயன்றதாக கைதான இலங்கை நபர்களின் தண்டனை குறைக்கப்பட்டு, சிறையிலிருந்து விடுதலையானதும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. இலங்கையை சேர்ந்தவர்கள் சுபாஷ்கரன், கிருஷ்ணகுமார். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள். இவர்களை 2015-ல் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே கியூ பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். அப்போது இருவரிடம் இருந்து சயனைட் குப்பிகள், சேட்டிலைட் போன், செல்போன், சிம்கார்டுகள், இந்திய பணம், … Read more

திருவாரூர்: தீக்குளித்த பெண் உயிரிழப்பு: வரதட்சணை கொடுமை என உறவினர்கள் போராட்டம்

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரைச் சேர்ந்தவர்கள் சூரியா – காளியம்மாள் (25) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காளியம்மாள் தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை … Read more

ஐ போன், லேப்டாப் பறிகொடுத்த சாஸ்த்ரா மாணவர்கள்: எஃப்.ஐ.ஆர் போடாமல் நழுவும் வல்லம் போலீஸ்

Thanjavur Police dodge Andhra students without filing FIR: தனியார் விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப்கள் என ரூ.3.85 லட்சம் பெறுமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடுபோய்விட்டதாக பாதிக்கப்பட்ட ஆந்திர மாணவர்கள் புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் அலைக்கழித்து வருகின்றனர் தஞ்சையை அடுத்துள்ள வல்லம் காவல் நிலைய போலீஸார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்கள் சாய் கிருஷ்ணா (20), சாய் வர்தன் (20) மற்றும் கணேஷ் (20). … Read more

தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி பெண் தேடும் இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசு பொருளாகி, வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.  90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற இளைஞர், மாத வருமானமாக 40 ஆயிரம் … Read more

கடலூரில் ஆற்றங்கரையில் காலாவதியான திண்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளதால் சிறுவர்கள் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்.!

கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான திண்பண்டங்களை சிறுவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடுவதற்கு முன் விரைவில் அவற்றை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் தூய்மை படுத்தப்பட்ட கெடிலம் ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் கடந்த ஆண்டே காலாவதியான ஏராளமான திண்பண்டங்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர். சிறுவர்கள் அவற்றை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். Source link

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்றும், திட்டமிட்ட பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் … Read more

இதனால் தான் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது!.. நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன?

சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் எவ்வித தடையுமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு … Read more