திருவாரூர்: தீக்குளித்த பெண் உயிரிழப்பு: வரதட்சணை கொடுமை என உறவினர்கள் போராட்டம்

வரதட்சணை கொடுமையால் தீக்குளித்த பெண் உயிரிழந்துள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி நீலாவதி நகரைச் சேர்ந்தவர்கள் சூரியா – காளியம்மாள் (25) தம்பதியர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காளியம்மாள் தீக்குளித்து தற்கொலை முயன்றுள்ளார். இதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை … Read more

ஐ போன், லேப்டாப் பறிகொடுத்த சாஸ்த்ரா மாணவர்கள்: எஃப்.ஐ.ஆர் போடாமல் நழுவும் வல்லம் போலீஸ்

Thanjavur Police dodge Andhra students without filing FIR: தனியார் விடுதி அறையில் வைக்கப்பட்டிருந்த ஆப்பிள் போன்கள், லேப்டாப்கள் என ரூ.3.85 லட்சம் பெறுமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் திருடுபோய்விட்டதாக பாதிக்கப்பட்ட ஆந்திர மாணவர்கள் புகார் அளித்து மூன்று நாட்கள் ஆகியும், இதுவரை எப்.ஐ.ஆர் போடாமல் அலைக்கழித்து வருகின்றனர் தஞ்சையை அடுத்துள்ள வல்லம் காவல் நிலைய போலீஸார். ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்கள் சாய் கிருஷ்ணா (20), சாய் வர்தன் (20) மற்றும் கணேஷ் (20). … Read more

தெரு தெருவாக போஸ்டர் ஒட்டி பெண் தேடும் இளைஞர்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.!

மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் உள்ள சுவர்களில் ஒட்டப்படும் அரசியல், சினிமா நடிகர்கள் குறித்தான விளம்பர சுவரொட்டிகள் எப்போதும் பேசு பொருளாகி, வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது, மணமகள் தேவை என இளைஞர் ஒருவர் ஒட்டியுள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.  90-களில் பிறந்த மதுரை வில்லாபுரம் அருகே மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதுடைய ஜெகன் என்ற இளைஞர், மாத வருமானமாக 40 ஆயிரம் … Read more

கடலூரில் ஆற்றங்கரையில் காலாவதியான திண்பண்டங்கள் கொட்டப்பட்டுள்ளதால் சிறுவர்கள் சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம்.!

கடலூரில் கெடிலம் ஆற்றங்கரையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான திண்பண்டங்களை சிறுவர்கள் யாரேனும் எடுத்து சாப்பிடுவதற்கு முன் விரைவில் அவற்றை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது. சில தினங்களுக்கு முன் தூய்மை படுத்தப்பட்ட கெடிலம் ஆற்றங்கரையில் மர்ம நபர்கள் சிலர் கடந்த ஆண்டே காலாவதியான ஏராளமான திண்பண்டங்களை கொட்டி விட்டு சென்றுள்ளனர். சிறுவர்கள் அவற்றை சாப்பிட்டால் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். Source link

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடையில்லை என்றும், திட்டமிட்ட பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் தொடர்ந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இந்த நிலையில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் … Read more

இதனால் தான் அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க முடியாது!.. நீதிமன்ற உத்தரவு சொல்வதென்ன?

சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் எவ்வித தடையுமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் என்பவர் சார்பில் பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அவ்வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் முறையீடு செய்தார். அப்போது அவர், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், எந்த செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கு … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை; உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு

Chennai civil court dismiss plea against to stop ADMK meeting: அதிமுகவுக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில், பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை என சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த அதிமுக உறுப்பினரான சி.பாலகிருஷ்ணன் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையும் படியுங்கள்: அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழிப்பு; வானகரத்தில் பரபரப்பு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், … Read more

#BigBreaking || அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை இல்லை.! சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய முக்கிய வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள இருபத்திமூன்று தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக ஓபிஎஸ் தகவல் தெரிவித்தார். இந்த இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர, வேறு எந்த ஒரு தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும், கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று, அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன் நீதிமன்றத்தில் உறுதியளித்தார். இதேபோல், … Read more

“மாணவர்களைக் கையாள்வது கத்தி மேல் நடப்பதுபோல் சவாலானது” – அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு

மதுரை: “மாணவர்களை கையாள்வது என்பது தற்போது கத்தி மேல் நடப்பதுபோல் இருக்கிறது. அதனால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் நண்பர்களாகவும், வழிகாட்டியாகவும், தாயாகவும் இருந்து வழிநடத்தினால்தான் மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியும்” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள பில்லர் மையத்தில் புதன்கிழமை பள்ளிக் கல்வித் துறை அலுவலர்களுக்கான நிர்வாகத்திறன் மேம்பாட்டு பயிற்சி ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு பள்ளிக் கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார் முன்னிலை வகித்தார். … Read more

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடரப்பட்ட இடைக்கால மனு தள்ளுபடி

அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இடைக்கால மனுவை சென்னை 23வது உதவி உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளர் சி.பாலகிருஷ்ணன் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ஒ.பி.எஸ். இ.பி.எஸ். தேர்வு செல்லாது எனவும், அந்த தேர்தல் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒப்புதல் அளிக்கும் வகையில் நடத்தப்படும் பொதுக்குழுவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டள்ளது. உறுப்பினர் பட்டியல் … Read more