#BigBreaking || ஓபிஎஸ்-க்கு பின்னடைவு.. வழக்கை தள்ளுபடி செய்த உதவி உரிமையியல் நீதிமன்றம்.!

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று, சென்னை அல்லிகுளம் இருபத்தி மூன்றாவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து, அந்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சி பாலகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கை தரும் வழக்கு தற்போது தடை செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அதிமுகவின் பொதுகுழுவு கூட்டத்திற்கு தடை கோரிய முக்கிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில்இன்னும் உத்தரவு வழங்கவில்லை. இந்த விசாரணை விவரம் : ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக பொதுக்குழுவில் … Read more

வானகரத்தில் களை கட்டும் பொதுக்குழு ஏற்பாடுகள்..!

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் தரப்பில் இருந்து இபிஎஸ் தரப்பிற்கு ஆதரவாளர்கள் மாறிய வண்ணம் உள்ளனர். இதனால் ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. மறுபுறம் பொதுக்குழுவை நாளை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இபிஎஸ் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஒற்றை தலைமை விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வானகரத்தில் நாளை பொதுக்குழுவை நடத்துவதற்கான ஏற்பாடுகளும் களைகட்டி வருகின்றன. பொதுக்குழு நடைபெறும் தனியார் மண்டபத்தில் … Read more

அக்னி பாதை திட்ட எதிர்ப்பு: கோவையில் இந்திய ஜனநாயக மாணவ சங்கத்தினர் போராட்டம்

கோவை: அக்னி பாதை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் (டிஒய்எஃப்ஐ) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் அக்னி பாதை திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் … Read more

குஜராத், அசாமில் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் தஞ்சம்.. தப்புமா உத்தவ் தாக்கரே அரசு?

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசு பெரும் சிக்கலில் தத்தளிக்கிறது. தன்னுடன் 46 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளதாகவும் பெரும்பாலான சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களின தன்னை ஆதரிப்பதாகவும் கிளர்ச்சி குழுவின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மும்பையில் உள்ள ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், காணொளி மூலம் தனக்குள்ள சட்டமன்ற … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி வழக்கு; நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பு பரபரப்பு வாதம்

அதிமுகவுக்கு பொதுக்குழுவுக்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் பரபரப்பான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே, அதிமுகவின் ஒற்றைத் தலைமை தொடர்பாக மோதல் நடந்துவருகிறது. இதையடுத்து, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி, சண்முகம் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பொதுக்குழு அலுவல் நிகழ்வு குறித்து … Read more

சென்னை : மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு தடை.!

அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் புயலை கிளப்பிய நிலையில், இந்த விவகாரத்தில் கடும் அதிருப்தியில் உள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தொடர்ந்து தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  அதேவேளை அவரை சமாதானப்படுத்த அக்கட்சி முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால், பாதுகாப்பு கருதி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் போலீசார் தீவிர … Read more

நடைமேடைகளில் மேற்கூரை இல்லாத அரியலூர் ரயில் நிலையம்: வெயில், மழை நேரங்களில் அவதிக்குள்ளாகும் பயணிகள்

அரியலூர்: அரியலூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கான நடைமேடைகளில் மேற்கூரைஅமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. தென் தமிழகத்துக்கு இயக்கும் ரயில்களில் பெரும்பாலானவை அரியலூர், திருச்சி,மதுரை வழியாக செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் மொத்தமுள்ள 4 நடைமேடைகளில் 4-வது நடைமேடை வழியாக சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. எஞ்சிய3 நடைமேடைகளில், 1, 2 ஆகியவற்றில் சென்னையிலிருந்து திருச்சி செல்லும் ரயில்களும், 3-ல் திருச்சியிலிருந்து சென்னை செல்லும் ரயில்களும் நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. அரியலூர் ரயில் நிலையத்தில் இருந்து தினமும் … Read more

விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ், பிடிவாதம் காட்டிய இபிஎஸ்.. என்ன நடந்தது நீதிமன்றத்தில்?

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்… கடும் வாக்குவாதம், ஆலோசனை, சந்திப்பு, போஸ்டர் யுத்தம், அணி தாவல் இவைகளுக்கு மத்தியில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது அந்த நீதிமன்ற காட்சி உங்கள் கண்முன்னே… நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் என்ன? … Read more

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பாடம் எடுக்கத் தொடங்கிய தமிழக அரசு!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகின்றது. ஆனால் இக்கோயிலில் எப்போதும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் நடராஜர் கோயிலின் நிர்வாகம் அங்குள்ள பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதுதான். தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்களுக்கு அவர்கள் கட்டுப்பாடுகளை விதிப்பதும், கோயில் வழிபாட்டு முறைகளில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களைச் செய்வதும் பக்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் மோதல்கள் நடைபெறுகின்றன. இதனால் நடராஜர் கோயில் … Read more

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிறுவனம், தமிழக அரசு பள்ளி மாணவர்க்கு பயிற்சி – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கொள்கையில்  தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை … Read more