விட்டுக் கொடுக்காத ஓபிஎஸ், பிடிவாதம் காட்டிய இபிஎஸ்.. என்ன நடந்தது நீதிமன்றத்தில்?

நாளை பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா? நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதுகுறித்து இங்கு விரிவாக பார்க்கலாம்… கடும் வாக்குவாதம், ஆலோசனை, சந்திப்பு, போஸ்டர் யுத்தம், அணி தாவல் இவைகளுக்கு மத்தியில் நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது அந்த நீதிமன்ற காட்சி உங்கள் கண்முன்னே… நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட ஓபிஎஸ் தரப்பு வாதங்கள் என்ன? … Read more

சிதம்பரம் தீட்சிதர்களுக்கு பாடம் எடுக்கத் தொடங்கிய தமிழக அரசு!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகின்றது. ஆனால் இக்கோயிலில் எப்போதும் சர்ச்சைகளுக்கு குறைவில்லை. இதற்கு காரணம் நடராஜர் கோயிலின் நிர்வாகம் அங்குள்ள பொது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து வருவதுதான். தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் பக்தர்களுக்கு அவர்கள் கட்டுப்பாடுகளை விதிப்பதும், கோயில் வழிபாட்டு முறைகளில் தங்கள் இஷ்டத்திற்கு மாற்றங்களைச் செய்வதும் பக்தர்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போய் மோதல்கள் நடைபெறுகின்றன. இதனால் நடராஜர் கோயில் … Read more

புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவான நிறுவனம், தமிழக அரசு பள்ளி மாணவர்க்கு பயிற்சி – மருத்துவர் அன்புமணி இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அறிவியல் சார்ந்த பயிற்சி வகுப்புகளை நடத்த அகஸ்தியா பன்னாட்டு அறக்கட்டளைக்கு நடப்பாண்டிலும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; அதன் பணிகளை விரிவுபடுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. கல்விக்கொள்கையில்  தமிழக அரசுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிறுவனத்திற்கு தொடர் சலுகைகள் வழங்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக, பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை … Read more

திண்டுக்கல்லில் ஆட்சியர் அலுவலகம் அருகே பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.. ஒருவர் உடல் கருகி பலி.!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே செயல்பட்டு வந்த பட்டாசுக்கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். பட்டாசுகடையில், விற்பனைக்காக வாங்கி வரப்பட்ட வெடிகளை பணியாளர்கள் இறக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தகவலின் பேரில் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கடந்த 4 வருடங்களுக்கு முன் இந்த கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை இக்கடை செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. Source … Read more

மூத்த பத்திரிகையாளர் பிரியா கல்யாணராமன் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சென்னை: குமுதம் வார இதழின் ஆசிரியர் ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: “மூத்த ஊடகவியலாளரும் குமுதம் வார இதழின் ஆசிரியருமான ப்ரியா கல்யாணராமன் என்கிற க.ராமச்சந்திரன் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். முப்பதாண்டுகளாக குமுதம் இதழில் பணியாற்றி வரும் அவர் பல நூல்களை எழுதியிருப்பதுடன், பல எழுத்தாளர்களையும் ஊக்குவித்தவர் என்பதை ஊடக உலகினர் நன்கறிவார்கள். குமுதம் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம்: இப்போதே குவிந்த போலீசார்.. கட்டுப்பாடுகள் என்னென்ன?

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள திருமண மண்டபம் போலீசாரின் கட்டுப்பாட்டில் வந்துள்ள நிலையில், பாதுகாப்பு பணியில் 2,000 போலீசார் ஈடுபடுகின்றனர். பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை காலை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பொதுக் குழுவிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. … Read more

செலவை குறைக்கும் கிரிடிக்கல் இல்னஸ் பாலிசி… என்னென்ன பயன்கள் பாருங்க!

Critical Illness Policy benefits in tamil: ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மக்கள் தொகை எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறது என்பதைப் பொறுத்தது. சுகாதாரப் பாதுகாப்பு முறையின் மோசமான நிலை மற்றும் உடல்நலக் காப்பீடு பற்றிய விழிப்புணர்வு இல்லாதது இந்தியாவில் காப்பீட்டின் ஊடுருவலைக் குறைக்க வழிவகுத்தது. இப்போதும் சுமார் 70-75 சதவீத இந்தியர்கள் மருத்துவச் சேவைகளுக்கு தங்கள் பாக்கெட்டில் இருந்து பணம் செலுத்துகிறார்கள். ப்ரோபஸ் இன்சூரன்ஸ் ப்ரோக்கரின் இயக்குனர் ராகேஷ் கோயல் கூறும்போது, ​​“அத்தகைய … Read more

அதி வேகமாக வந்த கார் மோதியதில் டெலிவரி ஊழியர் உயிரிழப்பு.!

அதி வேகமாக வந்த கார் மோதியதில் டெலிவரி ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டம் ஆலந்துறை சேர்ந்தவர் சபரிநாதன்(21). இவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று பொருட்களை டெலிவரி செய்வதற்காக சபரிநாதன் சென்றுள்ளார். அப்போது சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தபோது பின்னால் அதி வேகமாக வந்த கார் சபரிநாதன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட சபரிநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக … Read more

டெலிவரி ஊழியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து.. சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழப்பு.!

கோவையில், சாலையோரமாக இருசக்கர வாகனத்தில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த டெலிவரி ஊழியர் மீது அதிவேகமாக வந்த கார் மோதிய விபத்தின் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. ஆலந்துறையைச் சேர்ந்த சபரிநாதன் என்ற 21 வயதான இளைஞர், தனியார் நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்தார். நேற்று பொருட்களை டெலிவரி செய்வதற்காக சென்ற சபரிநாதன், சிறுவாணி சாலையில் சாலையோரம் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது, பின்னால் அதிவேகமாக வந்த கார் சபரிநாதன் மீது மோதிவிட்டு நிற்காமல் … Read more

‘பிகில்’ படத்துக்கு ரூ.113 கூடுதல் கட்டணம்: பாதிக்கப்பட்டவருக்கு ரூ.7,000 வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

சென்னை: நடிகர் விஜய் நடித்த ‘பிகில்’படத்துக்கு தமிழக அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்த திரையரங்கிற்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் மற்றும் ரூ.7 ஆயிரம் வழங்க சென்னை மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவர், நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘பிகில்’ திரைப்படத்தைப் பார்ப்பதற்காக கடந்த 18.10.2019 அன்று ஆன்லனைில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். சென்னை அயனாவரம் பகுதியில் கோபிகிருஷ்ணா திரையரங்கில் திரைப்படத்தைப் பார்ப்பதற்காக … Read more