’பொதுக்குழுவில் ஓபிஎஸ் தரப்பினர் பங்கேற்பார்களா?’ – வைத்திலிங்கம் விளக்கம்

அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து ஒபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பிறகு முடிவு செய்யப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு நாளை நடைபெற உள்ள நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுக்குழுவை ஏன் புறக்கணிக்க வேண்டும், இன்று மாலை ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பிறகு பொதுக் குழுவில் பங்கேற்பது குறித்து முடிவெடுக்கப்படும் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் … Read more

TNEA 2022: தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை; A-Z தகவல்கள்

Tamilnadu Engineering Admission 2022 online application and counselling details: தமிழகத்தில் பொறியியல் படிப்புகள் சேர்க்கைக்கான விண்ணப்பச் செயல்முறை தொடங்கியுள்ளது. பொறியியல் படிப்புகளுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? கலந்தாய்வு நடைமுறை என்ன? உள்ளிட்ட முக்கிய தகவல்களை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை அமைப்பு நடத்தி வருகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி, மதிப்பெண் விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொறியியல் படிப்புகளின் … Read more

நாளை அது நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம்… உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ்-க்கு அதிர்ச்சி கொடுத்த எடப்பாடி பழனிச்சாமி.!

அதிமுகவின் பொது குழுவுக்கு தடை கோரிய வழக்கு விசாரணை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கு விசாரணையின், அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட உள்ள இருபத்திமூன்று தீர்மங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், இந்த இருபத்தி மூன்று தீர்மானங்களை தவிர, வேறு எந்த ஒரு தீர்மானத்தையும் அனுமதிக்க முடியாது என்றும் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சி விதிகளுக்கு முரணாக ஓபிஎஸ் செயல்பட மாட்டார் என்று, … Read more

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு 2-வது கட்டமாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு.!

தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு இரண்டாவது கட்டமாகத் 15,000 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு கடந்த மாதம் தமிழ்நாடு அரசு சார்பில் 33 கோடி ரூபாய் மதிப்பில் 9,100 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டன. தற்போது இரண்டாவது கட்டமாக, 14,700 டன் அரிசி, 250 டன் ஆவின் பால் பவுடர், 50 டன் மருந்து பொருட்கள் என அறுபத்தி ஏழே முக்கால் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி … Read more

சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தேவாரம், திருவாசகம் பாடினர்

கடலூர்: இந்து சமய அறநிலையத் துறையின் உத்தரவின்படி சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர், சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடினர். சிதம்பரம் நடராஜர் கோயில் ஒவ்வொரு காலபூஜையின் போதும் கனகசபையில் ஏறி 30 நிமிடம் தேவாரம், திருவாசகம் பாடிட இந்து அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் நேற்று (ஜூன்.21) உத்தரவிட்டார். மேலும், அந்த உத்தரவில் கோயில் நிர்வாகத்தினரிடம் முன்கூட்டியே தகவல் தெரிவித்த பின்பு இதர பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் கட்டணம் எதுவும் … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகள் இன்று பிற்பகல் விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்குகளை இன்று பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் எனவும், கட்சி விதிகளில் திருத்தம் செய்ய தடை விதிக்கவேண்டும் எனவும் இருவர் சார்பிலும் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதேபோல தணிகாச்சலம் என்பவரும் பொதுக்குழுவுக்கு … Read more

சென்னை சில பகுதிகளில் தண்ணீர் நிறுத்தம்: எங்கு தெரியுமா?

சென்னை  நெம்மேலியில் உள்ள கடல் நீரலை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தென் சென்னையில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்க நிலையத்தில் தண்ணீர் கசிவை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதனால்  தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், திருவான்மியூர், மந்தவெளி, மயிலாப்பூர் ஆகிய … Read more

#BigBreaking || ஓபிஎஸ் முடிவு என்ன? சற்றுமுன் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

அதிமுகவில் சுமார் 2600 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் எடப்பாடி கே பழனிசாமி க்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், ஓ பன்னீர்செல்வம் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என்று தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயத்தில், நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நாளை பங்கேற்க வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more

“வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிமீ பயணிப்பது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனை” – ராமதாஸ்

சென்னை: “வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்ல… அது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படும். புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை … Read more