தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களில் ஒருசில இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் … Read more

“வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிமீ பயணிப்பது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனை” – ராமதாஸ்

சென்னை: “வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 50 கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்ய வேண்டும் என்பது நியாயமல்ல… அது மக்களுக்கு விதிக்கப்படும் தண்டனையாகவே பார்க்கப்படும். புதிய மாவட்டங்கள், வட்டங்கள் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழக புதிய மாவட்டங்கள், வட்டங்கள் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகள் தமிழக அரசால் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்த கோரிக்கைகளை … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து உயர்ந்து வருவதால் நீர்த்திறப்பு விநாடிக்கு 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 24 அடி நீர்மட்டம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் இன்று காலை நிலவரப்படி 23.60 அடியாக நீர் இருப்பு உயர்ந்தது. மேலும் ஏரிக்கு வினாடிக்கு 775 கனஅடி நீர்வரத்து உள்ளதால் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. ஏற்கனவே 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 250 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் அடையாறு ஆற்றின் … Read more

ஜெ. சமாதியில் அதிமுக பிரமுகர் தற்கொலை முயற்சி: ஓ.பி.எஸ் உருக்கமான வேண்டுகோள்

அதிமுகவில், ஒற்றை தலைமை விவகாரம் கடந்த ஒருவார காலமாக விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில். இந்த விவகாரத்தில் தொண்டர்கள் விபரீதமான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஒ.பன்னீர்செல்வம் தனது டவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்ததில் இருந்து அடுக்கடுக்கான பல பிரச்சனைகள் எழுந்து வருகிறது. சசிகலா பொதுச்செயலாளர் ஆனது, ஒபிஎஸ் ராஜினாமா மற்றும் தர்மபயுத்தம், இபிஎஸ் முதல்வரானது, ஒபிஎஸ் இபிஎஸ் கூட்டணி, சசிகலா சிறை தண்டனை உள்ளிட்ட பல நிகழ்வுகள் அரங்கேறியது. அந்த … Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யப் போகும் பகுதிகள்.!!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.06.2022, 26.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த … Read more

இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்பாதை ஆய்வாளர் வெட்டிக் கொலை

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் துணை மின் நிலையத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த மின்பாதை ஆய்வாளரை அலுவலகத்திற்குள் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கயத்தாறு பகுதியைச் சேர்ந்த ஆனந்த பாண்டி, கடந்த 5 ஆண்டுகளாக மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு வழக்கம் போல இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது, மர்ம கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. காலையில் பணிக்கு வந்த லைன் மேன் பூமிநாதன், … Read more

மேகதாது விவகாரத்தில் மீண்டும் ஒரு வெளிப்படையான விவாதம் வேண்டும்: தமிழிசை

புதுச்சேரி: “மேகதாது அணை கட்டுவது சம்பந்தமாக மீண்டும் வெளிப்படையான விவாதம் வேண்டும், அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி அரசு கடிதம் அனுப்பியுள்ளது” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு புதுச்சேரியில் 75 இடங்களில் சுத்தம் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டது. பெரிய மார்க்கெட் பகுதியில் நடந்த தூய்மைப் பணியை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை குப்பைகளை அள்ளி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை கூறியது: “அனைவரும் … Read more

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது – ஆவடி காவல் ஆணையரகம் பதில்

நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று ஆவடி காவல் ஆணையரகம் ஓ.பன்னீர் செல்வத்துக்கு பதிலளித்துள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. ஒற்றை தலைமை சர்ச்சைக்கு மத்தியில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதால் அது பெரும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால் பொதுக்குழுக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என்று ஓபிஎஸ் தரப்பில் ஆவடி காவல் ஆணையரகத்தில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக … Read more

இந்த காய்கறிகளை மட்டும் கண்டிப்பா சமைத்துதான் சாப்படணும்

நாம் உடல் எடையை குறைக்கும்போது பச்சை காய்கறிகளைத்தான் அதிகம் சாப்பிட வேண்டும் என்று அதிகம் பேர் கூறிவார்கள். சாலட் செய்து சாப்பிடுவதுதான் சரி என்று கூறினாலும் சில காய்கறி வகைகளை சமைத்து சாப்பிட்டால்தான் அதன் சத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த வகை காய்கறிகளை பச்சையாக சாப்பிடுவது எந்த பயனையும் பெரிதாக தராது. ஆனால் அதுவே சமைத்து சாப்பிட்டால்  அதிக நன்மைகள் தரும். கீரை வைகைகள் கீரையை பச்சையாக சாப்பிட்டால் அதில் ஆக்ஸாலிக் ஆசிட் இருக்கும் . … Read more

#BigBreaking || திடீர் திருப்பம்.. பேசி தீர்த்துக்கொள்ளலாம்… ஓபிஎஸ்.க்கு நேரடியாக அழைப்பை விடுத்தார் எடப்பாடி பழனிச்சாமி.! 

அதிமுக பொதுக்குழுவுக்கு வாருங்கள் என ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நாளை பங்கேற்க வேண்டுமென்று ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, எதிர்க்கட்சித் தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொதுக்குழுவில் பங்கேற்க வரவேண்டுமென்று ஓ பன்னீர்செல்வத்திற்கு, எடப்பாடி கே பழனிசாமி இந்த அழைப்பை விடுத்துள்ளார். மேலும் எந்த பிரச்சனையாக இருந்தாலும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் எடப்பாடி கே … Read more