#BigBreaking || அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க இது கட்டாயம் – சற்றுமுன் வெளியான அறிவிப்பு.! 

அதிமுகவின் பொதுக்குழுவில் பங்கேற்க ஆதார் அட்டை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், இன்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் பன்னீர்செல்வம், எடப்பாடி கே பழனிசாமி தனித்தனியாக நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பில் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அதேசமயத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இந்த பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு உண்டான வேலைகளை, ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், நாளை நடைபெற உள்ள அதிமுகவின் பொதுக்குழுவில் … Read more

தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் ஒரே மாதத்தில் பி.ஏ.5 வகை தொற்று 21 சதவீதம் அதிகரித்து உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை தடுக்க தமிழக அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. குறிப்பாக சோதனைகளை அதிகரிப்பது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எந்த வகையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை ஆய்வு செய்ய மரபனு பரிசோதனை … Read more

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் – ஓ.பன்னீர்செல்வம் முன் உள்ள கூடிய வாய்ப்புகள் என்ன?

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம். அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அவரை சமாதானப்படுத்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றன. கட்சியின் மூத்த நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் மாறிமாறி சமரசத்தில் ஈடுபட்டனர் அதுவும் கைகொடுக்கவில்லை. 12 மாவட்ட செயலாளர்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக களம் இறங்கினர். ஆனால் தற்போது 7 மாவட்ட செயலாளர் மட்டுமே அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இந்தநிலையில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு ஒத்திவைக்க கடிதம் எழுதினார். … Read more

ஊற வைத்து அரைக்க வேண்டாம்.. 10 நிமிடத்தில் அரிசி மாவு வடை இப்படி செஞ்சு பாருங்க

மாலையில் நாம் டீ குடிக்கும்போது , சூடாக மொறு மொறுனு வடை சாப்பிடலாம் என்று தோன்றும். ஆனால் வடை செய்வது அவ்வளவு எளிது அல்ல அதற்கே பல பக்குவம் பார்க்க வேண்டுமே என்ற சலிப்பு உங்களுக்கு ஏற்படும். ஆனால் எந்த மாவையும் அறைக்காமல் கிரிஸ்பியான அரிசி மாவு வடை எப்படி தயாரிக்கலாம் என்பதை தெரிந்துகொள்வோம் தேவையான பொருட்கள் அரிசி மாவு – 1 கப், பெரிய வெங்காயம் – 2 பச்சைமிளகாய் – 2  சீரகம் – … Read more

#மதுரை || ஏ.எடி. எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறித்த இளம்பெண்..!

ஏ.டி.எம் மையத்திற்கு வரும் வயதானவர்களை ஏமாற்றி பணம் பறித்து வந்த இளம்பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். மதுரை, அண்ணாநகர், கே.கே.நகர், தல்லாகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏ.டி.எம் மையங்களில் முதியவர்களை ஏமாற்றி பணம் பறிப்பதாக காவல்துறயினருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள ஏ.டி.எம் மையங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் உள்ளவர்களை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் முதியவர்களிடம் இருந்து நூதனமான முறையில் தேனி மாவட்டத்ட்தை சேர்ந்த மணிமேகாலை (24) என்பவரை காவல்துறையினர் கைது … Read more

கட்சித் தொண்டர்கள் அமைதியான முறையில் இருந்து வருகின்றனர்: ஓபிஎஸ்-க்கு வளர்மதி பதில்

சென்னை: “ஒற்றைத் தலைமை வேண்டும். பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும், சிறப்பான முறையில் இந்த பொதுக்குழு நடக்க வேண்டும் என்று தங்களது ஆர்வத்தை கூறிவிட்டுச் செல்கின்றனர். இது எப்படி அராஜகமான முறையாகும் என்று எனக்கு தெரியவில்லை” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கூறியுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழுவிற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சேர்ந்துதான் அழைப்பு விடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 3 ஆயிரத்துக்குட்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், செயற்குழு … Read more

வந்து இறங்கியதும் திரும்பிய ஆயுதப்படை…! அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக வந்த ஆயுதப்படை வீரர்கள், அங்கு இறங்கிய வேகத்தில் திரும்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, அக்கூட்டம் நடைபெறும் வானகரம் திருமண மண்டபத்திற்கு போலீஸ் பாதுகாப்பு கோரி முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார். ஒற்றை தலைமை குறித்தான விவாதம் எழுந்த நாளில் இருந்து, அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு தொண்டர்கள் … Read more

ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் : முக்கிய வேடத்தில் அபிதா, வனிதா விஜயகுமார்

சினிமாவில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ரீமேக் செய்யப்பட்ட சில திரைப்படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பெரும்பாலான படங்கள் மற்ற மொழிகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளர். இந்த வழக்கத்தை தற்போது சின்னத்திரையும் கடைபிடித்து வருகிறது. மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற பல சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த … Read more

கடைசி முயற்சியும் வீண்.. சங்கடத்தில் ஓபிஎஸ்.? அதிகாரத்தை கைப்பற்ற போகும் இபிஎஸ்..?

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் கடிதம் மூலம் … Read more

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெடமலை கிராமத்தைச் சேர்ந்த 75-வது லட்சம் பயனாளி நல்லம்மாள் என்பவருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தை வழங்கினார். … Read more