ரீமேக் ஆகும் பெங்காலி சீரியல் : முக்கிய வேடத்தில் அபிதா, வனிதா விஜயகுமார்

சினிமாவில் ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வது சினிமாவின் ஆரம்ப காலத்தில் இருந்து வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்த வகையில் ரீமேக் செய்யப்பட்ட சில திரைப்படங்கள் வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட பெரும்பாலான படங்கள் மற்ற மொழிகளிலும் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளர். இந்த வழக்கத்தை தற்போது சின்னத்திரையும் கடைபிடித்து வருகிறது. மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற பல சீரியல்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றிகரமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த … Read more

கடைசி முயற்சியும் வீண்.. சங்கடத்தில் ஓபிஎஸ்.? அதிகாரத்தை கைப்பற்ற போகும் இபிஎஸ்..?

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என்ற ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வம் கடிதம் மூலம் … Read more

மருத்துவத் துறையில் காலியாக உள்ள 4 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: மருத்துவத் துறையில் காலியாக உள்ள 1,021 மருத்துவர்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் வரும் செப்டம்பருக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கெடமலை கிராமத்தைச் சேர்ந்த 75-வது லட்சம் பயனாளி நல்லம்மாள் என்பவருக்கு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருந்து பெட்டகத்தை வழங்கினார். … Read more

"தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும்…" – ஓபிஎஸ் திடீர் ட்வீட்

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதிமுகவுக்கு யார் தலைமை வகிப்பது என்பது தொடர்பான சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், ஓபிஎஸ் இவ்வாறு ட்வீட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தின், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என பெரும்பாலானோர் கோஷம் எழுப்பினர். அன்று முதலாகவே அதிமுகவில் பரபரப்பு ஏற்பட தொடங்கி விட்டது. ஓபிஎஸ், ஈபிஎஸ் … Read more

சென்னை சில பகுதிகளில் தண்ணீர் நிறுத்தம்: எங்கு தெரியுமா?

சென்னை  நெம்மேலியில் உள்ள கடல் நீரலை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் தென் சென்னையில் உள்ள பகுதிகளில் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்க நிலையத்தில் தண்ணீர் கசிவை சரி செய்யும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. இதனால்  தென் சென்னை பகுதிகளான அடையாறு, வேளச்சேரி, பெசன்ட் நகர், சோழிங்கநல்லூர், ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, கொட்டிவாக்கம், பெருங்குடி, பாலவாக்கம், திருவான்மியூர், மந்தவெளி, மயிலாப்பூர் ஆகிய … Read more

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு.. வெள்ள அபாய எச்சரிக்கை.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. இதனிடையே, செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை, வழுதியம்பேடு மற்றும் அடையாறு ஆற்றின் இருபுறமும் … Read more

“கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே”… வாசகத்துடன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர்!

கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்க்கு மதுரை விஜய் ரசிகர் மன்றத்தினர் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். நடிகர் விஜய் 48-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  Source link

அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு: சட்ட ரீதியாக பொதுக்குழு கூட்டத்தை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவரது தரப்பினர் இறங்கியுள்ளனர். கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எழுந்த பேச்சு தொடர்பான சர்ச்சை, முடிவின்றி தொடர்கிறது. சென்னை வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜெ. நினைவிடத்தில் ஒப்பாரி வைத்து தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றனர். அவர்கள் அனைவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி, ஜெயலலிதா நினைவிடத்தில் ஒப்பாரி வைத்தனர். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் … Read more

O Panneerselvam vs Edappadi Palanisamy Live : “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்”- ஓ.பி.எஸ் ட்வீட்

Go to Live Updates அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று  மனு அளித்தார். மேலும் சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள … Read more