அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் பழனிசாமிக்கு பெருகும் ஆதரவு: சட்ட ரீதியாக பொதுக்குழு கூட்டத்தை தடுக்க ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை

சென்னை: அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழுவை நடத்தி ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் அவரது தரப்பினர் இறங்கியுள்ளனர். கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சட்ட ரீதியிலான முயற்சியில் இறங்கியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்து கடந்த 14-ம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கூட்டத்தில் எழுந்த பேச்சு தொடர்பான சர்ச்சை, முடிவின்றி தொடர்கிறது. சென்னை வானகரம் வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் … Read more

ஓபிஎஸ்க்கு ஆதரவாக ஜெ. நினைவிடத்தில் ஒப்பாரி வைத்து தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர்!

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதிமுக தொண்டர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்றனர். அவர்கள் அனைவரும் காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி, ஜெயலலிதா நினைவிடத்தில் ஒப்பாரி வைத்தனர். அப்போது அங்கிருந்த தொண்டர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அப்போது பாதுகாப்பு பணியில் … Read more

O Panneerselvam vs Edappadi Palanisamy Live : “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்”- ஓ.பி.எஸ் ட்வீட்

Go to Live Updates அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடக்கலாம் என்பதால், கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது என ஓ.பி.எஸ் ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று  மனு அளித்தார். மேலும் சென்னையில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள … Read more

10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை.!

பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால் விரக்தியடைந்த மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில் நகரைச் சேர்ந்த செல்வி என்பவரின் மகன் முகேஷ்(15). இவர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 10ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் முகேஷ் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அதிர்ச்சியில், விரக்தியடைந்த முகேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் முக்கேஷை … Read more

களரி பயிற்சியில் வாந்தி எடுத்து உயிரிழந்த மாஸ்டர்..! அதீத உடற்பயிற்சி வினையானதா?

சென்னை ஆலப்பாக்கத்தில் தங்கி களரி பயிற்சி அளித்து அதனை யூடியூப்பில் வீடியோவாக பதிவிட்டு வந்த ஆஜானுபாகுவான மாஸ்டர் கிரிதரன் களரி பயிற்சியின் போது ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் உடற்பயிற்சி பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. கட்டுமஸ்தான உடல் வைத்திருந்தால் நோயின்றி நீடித்த ஆயுளுடன் வாழலாம் என்று யூடியூப்பில் உடல் பயிற்சி வீடியோக்களை வெளியிட்டு வந்த மாஸ்டர் கிரிதரன் என்பவர் தான் 29 வயதில் உயிரிழந்த வீரர்..! தோற்றத்தில் கே.ஜி.எப் பின் ராக்கி பாய் போல ஆஜானுபாகுவாக … Read more

ஒற்றைத் தலைமை சர்ச்சை | மீண்டும் தர்மம் வெல்லும்; ஓபிஎஸ் ட்வீட்

சென்னை: “தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்” என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என்று ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “மாபெரும் மக்கள் இயக்கமாம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தற்போது நிலவிவரும் சர்வாதிகார மற்றும் அராஜகப் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மகளிர் அணியினர் மாண்புமிகு அம்மா அவர்களின் நினைவிடத்திற்கு சென்றபோது தேனாம்பேட்டை, வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவரும், தென்சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக … Read more

அ.தி.மு.க பொதுக்குழு நடத்த அனுமதி அளிக்கக் கூடாது – ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் மனு

OPS files petition to stop ADMK general committee meeting in Avadi commissioner officer: அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையரகத்தில் ஓ.பி.எஸ் தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதில் பெரும்பாலான கட்சி நிர்வாகிகள் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவளித்து வருகின்றனர். இதனிடையே பொதுக்குழுவை தள்ளி வைக்க கோரி இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் எதுவும் கிடைக்கப்பெறாத … Read more

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பும் நிலையில் உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், … Read more

பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேசன்.. தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்.!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகள் மற்றும் பரணிதரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாய் பரணி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் உணவு அருந்தி விட்டு உடனே பலாப்பழம் … Read more

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் யோகாசனம்: பள்ளி, கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகங்களிலும் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனங்கள் செய்தார். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் 8-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் காலை 6.30 மணி அளவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பல்வேறு ஆசனங்கள் செய்ய யோகா ஆசிரியர்கள் … Read more