பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேசன்.. தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்.!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும்  குளிர்பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவனது தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு பரணி என்ற மனைவியும், இனியா என்ற மகள் மற்றும் பரணிதரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாய் பரணி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய மூவரும் வீட்டில் உணவு அருந்தி விட்டு உடனே பலாப்பழம் … Read more

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவ, மாணவிகளுடன் ஆளுநர் யோகாசனம்: பள்ளி, கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகங்களிலும் ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி, கல்லூரிமாணவர்களுடன் இணைந்து ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனங்கள் செய்தார். பல்வேறு மத்திய அரசு அலுவலகங்களில் நடந்த யோகா நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். தமிழகம் உட்பட நாடு முழுவதும் 8-வது சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ஆளுநர் மாளிகை வளாகத்தில் காலை 6.30 மணி அளவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். பல்வேறு ஆசனங்கள் செய்ய யோகா ஆசிரியர்கள் … Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் வெளியேற்றம் அதிகரிப்பு?

கன மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கப் போவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல். செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளான திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் பகுதிக்குடபட்ட பல்வேறு இடங்களில் நேற்று இரவு கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்படவுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இரவு பெய்த கன மழை காரணமாக வினாடிக்கு 775 கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு. … Read more

அழகிய பெரியவன் எழுதும் ஒவ்வொரு விரலிலும் உலகம் – 8

*அழகிய பெரியவன்*எல்லோரும் சமம் தானே டீச்சர்?*புகழ்ப்பெற்ற தெலுங்குக் கவிஞரும், இதழியலாளருமான சதிஷ் சந்தர் எழுதிய பஞ்சம வேதம் கவிதைத் தொகுதியில் ஒரு கவிதை உண்டு (தமிழில்: புதிய கையெழுத்து, விடியல் பதிப்பகம், 2003). ஓர் ஆசிரியர், கணக்குப் பாடத்தில் நூற்றுக்கு பதினேழு மதிப்பெண்களை மட்டுமே கொடுத்து தோர்ச்சியை வழங்காததாலும், வகுப்பறையில் ஓயாமல் சாதியைச் சொல்லி திட்டுவதாலும், ரேஷன் கடையில் வழங்கப்படும் மண்ணெண்ணையைக் கொண்டே, தற்கொலை செய்துகொள்ளும் ஒரு மாணவன் எழுதுவதைப் போன்ற நீண்ட கவிதை அது. “உங்கள் … Read more

மாணவர்களின் கவனத்திற்கு.. இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.!!

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் மாணவர்கள் சேர இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.  இதுகுறித்து உயர் கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை http://tngasa.in, http://tngasa.org என்ற இணையதள முகவரியில் வருகின்ற ஜூலை 7ஆம் தேதி வரை பதிவு செய்யலாம். ஆன்லைன் … Read more

மேகதாது அணை பிரச்சனை.. தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி பயணம்.!

மேகதாது அணை பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனைப்படி தமிழக சட்டமன்ற கட்சித் தலைவர்கள் குழு டெல்லி சென்றுள்ளது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் சென்றுள்ள அக்குழுவினர் இன்று மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்னை தொடர்பாக விவாதிக்கின்றனர். இதற்கிடையில் காவிரி நதிநீர் ஆணையத்தின் கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க இருப்பதாக தகவல் வெளியானதும் பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அதில் இதுதொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் அதன் மீதான … Read more

வீட்டு வேலைகள் செய்வதற்காக ஆர்டர்லி வைத்துக் கொள்ளும் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுவீட்டு வேலைகள்

சென்னை: தமிழக காவல் துறையை சேர்ந்த மாணிக்கவேல் என்பவர், தன்னை காவலர் குடியிருப்பில் இருந்து வெளியேற்ற பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸைஎதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாணிக்கவேல் மீதான நடவடிக்கை சரிதான் என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு கடந்த 14-ம் தேதி நீதிபதிஎஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில்தான் அந்த குடியிருப்பை மாணிக்கவேல் காலி செய்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி, … Read more

ஆந்திர பயணியிடம் ரூ.78 லட்சம் பறிமுதல்! ஹவாலா பணமா என விசாரணை!

கொல்கத்தா ரயிலில் வந்த ஆந்திர பயணியிடம் கணக்கில் வராத 78 லட்சம் ரூபாய் பறிமுதல். ஹவாலா பணமா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை. கொல்கத்தா ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரது கையில் … Read more

அதிமுகவில் திடீர் திருப்பம்.. ஓபிஎஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள்.!!

அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி (நாளை) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.  தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக நேற்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி … Read more

‘அவன் கவனிக்க மாட்டான்’.. 90 வயதிலும் பனை ஏறி பதநீர் இறக்கும் தாத்தா..! நம்பிக்கை மனிதரின் மறுபக்கம்..!

பெற்ற மகன் கவனிக்காமல் கைவிட்டு மும்பை சென்று விட்ட நிலையில் நெல்லையை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் , இந்த வயதிலும் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது மனைவியை காப்பாற்றி வருகின்றார். படிக்கவில்லையே என்று கண்ணீர் சிந்தும் நம்பிக்கை மனிதரின் மறுபக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… வயதோ 90… கண்ணில் கண்ணாடி இல்லை… கூன் போட்டு நடந்தாலும்… எவரிடமும் கும்பிடு போட்டு பிழைக்கவில்லை..! மன தைரியத்துடன் கற்பக விரூட்சமான பனை மரத்தில் … Read more