ஆந்திர பயணியிடம் ரூ.78 லட்சம் பறிமுதல்! ஹவாலா பணமா என விசாரணை!

கொல்கத்தா ரயிலில் வந்த ஆந்திர பயணியிடம் கணக்கில் வராத 78 லட்சம் ரூபாய் பறிமுதல். ஹவாலா பணமா என ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை. கொல்கத்தா ஷாலிமரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது அந்த ரயிலில் இருந்து சந்தேகத்திற்கிடமாக வந்த பயணி ஒருவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரது கையில் … Read more

அதிமுகவில் திடீர் திருப்பம்.. ஓபிஎஸ்-க்கு காத்திருந்த அதிர்ச்சி.. அடுத்தடுத்து நடக்கும் மாற்றங்கள்.!!

அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி (நாளை) பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.  தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக நேற்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி … Read more

‘அவன் கவனிக்க மாட்டான்’.. 90 வயதிலும் பனை ஏறி பதநீர் இறக்கும் தாத்தா..! நம்பிக்கை மனிதரின் மறுபக்கம்..!

பெற்ற மகன் கவனிக்காமல் கைவிட்டு மும்பை சென்று விட்ட நிலையில் நெல்லையை சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் , இந்த வயதிலும் பனைமரத்தில் ஏறி பதநீர் இறக்கி தனது மனைவியை காப்பாற்றி வருகின்றார். படிக்கவில்லையே என்று கண்ணீர் சிந்தும் நம்பிக்கை மனிதரின் மறுபக்கம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… வயதோ 90… கண்ணில் கண்ணாடி இல்லை… கூன் போட்டு நடந்தாலும்… எவரிடமும் கும்பிடு போட்டு பிழைக்கவில்லை..! மன தைரியத்துடன் கற்பக விரூட்சமான பனை மரத்தில் … Read more

தமிழகத்தின் ஒருசில இடங்களில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

சென்னை: சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, 22 முதல் 25-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல்மிதமான மழை பெய்யக் கூடும். சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 21-ம் தேதி காலை 8.30 மணியுடன் … Read more

முதல்வர் தலைமையில் ஜூன் 27-ல் அமைச்சரவை கூட்டம் – ஆன்லைன் ரம்மி தடை அவசரச் சட்டம் குறித்து முக்கிய முடிவு

சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதில், ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டம் உள்ளிட்டவை குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு முடிந்துள்ள நிலையில், புதிய தொழில் திட்டங்கள் மூலம் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. தொழில் தொடங்க வருவோருக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்குதல், பல்வேறு … Read more

அதிமுக – தமிழகத்துக்கு ஏன் தேவைப்படுகிறது?

இந்திய அரசியலில் காங்கிரஸ் எந்த அளவுக்கு அவசியமோ, அதற்கு சற்றும் குறையாமல் தமிழக அரசியலில் அதிமுக மிகவும் தேவை. நமது நாட்டில் சிறிதும் பெரிதுமாய் நூற்றுக்கணக்கான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. சுதந்திரா கட்சி – தொலைநோக்கு கொள்கைகளை முன்வைத்து, இந்தியாவுக்கு முற்றிலும் புதிய தளத்தில் செயல்பட்ட கட்சி. ஒருசில ஆண்டுகளுக்கு, ஓரிரு மாநிலங்களில் மட்டும் சற்றே செல்வாக்குடன் இருந்து, பிறகு சிறிது சிறிதாகக் கரைந்து காணாமல் போனது. ஆரோக்கியமான அரசியலை … Read more

#BigBreaking || குடியரசுத் தலைவர் வேட்பாளர் அறிவிப்பு.!

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.   Source link

“ஆரோக்கிய உடலும், நிலையான மனமும் யோகாவின் சாராம்சம்” – மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி

சென்னை: “ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒருமித்த உணர்வு என்பவை யோகாவின் சாராம்சம்” என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இன்று (ஜூன் 21) தொடங்கிவைத்து மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி பேசியது: ”தியானம், கர்மா, பக்தி ஆகியவற்றின் கலவையாக யோகா விளங்குகிறது. பிரதமர் மோடியின் மகத்தான முயற்சியால் இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரிய யோகா 2014 … Read more

எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்களுக்கு ஏ.சி அரசுப் பேருந்துகளில் பெர்த் ஒதுக்கீடு!

எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அவர்களது மனைவிகளுக்கு, அரசு ஸ்லீப்பர் மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் (ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத) பெர்த்/ இருக்கைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள சிரமம் காரணமாக, தமிழகத்தில் பேருந்துகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் விஐபி கோட்டா டிக்கெட்டுகளும் அடங்கும். தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலர் அரசு ஸ்லீப்பர் பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், … Read more

வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் லண்டனில் இருந்து வந்த வீடியோ!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்டாவில் அதிமுகவின் முகமாக இருப்பவரும், எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏவுமான பாப்பா சுப்பிரமணியத்தின் மகன், லண்டன் வாழ் தமிழரான பாப்பா வெற்றி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். லண்டனில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, “வணக்கம் திரு ரவீந்திரநாத் அவர்களே., தொண்டர்கள் சார்பாக நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க நினைக்கிறேன். நேற்று நீங்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தீர்கள். அதில், முதலமைச்சர் மு க … Read more