“ஆரோக்கிய உடலும், நிலையான மனமும் யோகாவின் சாராம்சம்” – மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி

சென்னை: “ஆரோக்கியமான உடல், நிலையான மனம், ஒருமித்த உணர்வு என்பவை யோகாவின் சாராம்சம்” என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணையமைச்சர் ஏ.நாராயணசாமி கூறியுள்ளார். சர்வதேச யோகா தினத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே நடைபெற்ற யோகா நிகழ்ச்சியை இன்று (ஜூன் 21) தொடங்கிவைத்து மத்திய இணையமைச்சர் ஏ.நாராயணசாமி பேசியது: ”தியானம், கர்மா, பக்தி ஆகியவற்றின் கலவையாக யோகா விளங்குகிறது. பிரதமர் மோடியின் மகத்தான முயற்சியால் இந்தியாவின் பெருமை மிகு பாரம்பரிய யோகா 2014 … Read more

எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உறவினர்களுக்கு ஏ.சி அரசுப் பேருந்துகளில் பெர்த் ஒதுக்கீடு!

எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அவர்களது மனைவிகளுக்கு, அரசு ஸ்லீப்பர் மற்றும் செமி ஸ்லீப்பர் பேருந்துகளில் (ஏ.சி மற்றும் ஏ.சி. அல்லாத) பெர்த்/ இருக்கைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தனது ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் உள்ள சிரமம் காரணமாக, தமிழகத்தில் பேருந்துகளுக்கான தேவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதில் விஐபி கோட்டா டிக்கெட்டுகளும் அடங்கும். தனியார் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பலர் அரசு ஸ்லீப்பர் பஸ்களில் பயணம் செய்கின்றனர். ஆனால், … Read more

வசமாக சிக்கிய ஓபிஎஸ் மகன் லண்டனில் இருந்து வந்த வீடியோ!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், டெல்டாவில் அதிமுகவின் முகமாக இருப்பவரும், எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏவுமான பாப்பா சுப்பிரமணியத்தின் மகன், லண்டன் வாழ் தமிழரான பாப்பா வெற்றி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்பிக்கு எதிராக சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். லண்டனில் இருந்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்திருப்பதாவது, “வணக்கம் திரு ரவீந்திரநாத் அவர்களே., தொண்டர்கள் சார்பாக நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க நினைக்கிறேன். நேற்று நீங்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தீர்கள். அதில், முதலமைச்சர் மு க … Read more

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2,426 கன அடி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணையில் இருந்து தென்பெண்ணை ஆற்றில் இன்று (21ம் தேதி) 2426 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளதால், 5 மாவட்டங்களில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பகுதிகளில் பெய்த கனமழையாலும், தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி, கெலவரப்பள்ளி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 40.51 அடியாக உள்ளதால், வந்து கொண்டிருக்கும் தண்ணீர் முழுவதும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. … Read more

முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து-ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் முதல்வர் குறித்து ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட ஜெராக்ஸ் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்த தக்கலை போலீசார் அவரை தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பத்மநாபபுரம் பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பள்ளிகள் திறப்பின் போது பள்ளி குழந்தைகளுடன் வகுப்பறையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் படத்தை பகிர்ந்து, முதலமைச்சர் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குறித்து ஆபாசமாக … Read more

தி.மு.க எம்பி கனிமொழிக்கு மீணடும் கொரோனா தொற்று

தூத்துக்குடி தொகுதி எம்பியும் திமுக மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், பிரபலங்கள் சிலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதில் ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் சோனியாக காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வரிசையில் தற்போது திமுக எம்பி கனிமொழி இணைந்துள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக … Read more

10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் 24ம் தேதி முதல் பெற்றுகொள்ளலாம்.. !

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிகல்விதுறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10,12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கானப் பொதுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. 3 லட்சத்து 84 ஆயிரத்து 655 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 21 ஆயிரத்து 622 பேர் மாணவிகள் என 8 லட்சம் பேர் பொது தேர்வை எழுதினர். அதில், 7 லட்சத்து 55 ஆயிரத்து 998 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதே 10ம் … Read more

அரியலூர் – திருமானூர் அருகே பிளஸ் 2 மாணவி தற்கொலை

அரியலூர்: அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே பிளஸ் 2 தேர்வில் பெற்ற மதிப்பெண்ணில் அதிருப்தி காரணமாக, மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்த விவசாயி சகாதேவன் – வனிதா தம்பதியினர். இவர்களது 17 வயது மகள் அபினா. இவர், திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்தார். நேற்று பொதுத் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அபினா 600-க்கு 397 மதிப்பெண் … Read more

மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு – காப்பாற்றச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில், அதை பார்க்க வந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா (56). இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் வெளியில் வந்து பார்த்தபோது அவரது பசு மாடு உயரிழந்தது தெரியவந்தது. அதனைக் கண்டு வசந்தா ஒடிச்சென்ற போது பசு கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில், வசந்தா மீது மின்சாரம் தாக்கி … Read more

கறந்த பால் அப்படியே மக்களுக்கு வழங்கப்படுகிறதா? அமைச்சர் நாசர் கூறுவது நிஜமா?

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தவறான தகவல்களை கூறுவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில்  உள்ள ஆவின் பால் பண்ணை, பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பாலகங்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த 18, 19, 20ம் தேதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வுகள் மேற்கொண்டார். ஜூன் … Read more