மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு – காப்பாற்றச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில், அதை பார்க்க வந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா (56). இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் வெளியில் வந்து பார்த்தபோது அவரது பசு மாடு உயரிழந்தது தெரியவந்தது. அதனைக் கண்டு வசந்தா ஒடிச்சென்ற போது பசு கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில், வசந்தா மீது மின்சாரம் தாக்கி … Read more

கறந்த பால் அப்படியே மக்களுக்கு வழங்கப்படுகிறதா? அமைச்சர் நாசர் கூறுவது நிஜமா?

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவின் நிறுவனம் சார்பில் சுமார் 152 வகையான பால் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தவறான தகவல்களை கூறுவதாக பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு; நாமக்கல், கோவை, நீலகிரி மாவட்டங்களில்  உள்ள ஆவின் பால் பண்ணை, பால் கொள்முதல் நிலையங்கள் மற்றும் பாலகங்களின் செயல்பாடுகள் குறித்து கடந்த 18, 19, 20ம் தேதிகளில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆய்வுகள் மேற்கொண்டார். ஜூன் … Read more

லிப்ட் கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த மர்ம நபர்கள்..!

லிப்ட் கொடுப்பது போல நடித்து மூதாட்டியிடம் நகை பறித்த இளைஞரை  காவதுறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் நெம்பர் 1 டோல்கேட், உத்தமர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நளினி (73). தனியே வசித்து வந்த அவர் பழுதடைந்த மிக்சியை சரிசெய்வதற்காக கடைக்கு சென்றுள்ளார்.அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பதாக அழைத்து சென்றுள்ளார். சிறிது தூரத்தில், இன்னொரு நபர் அந்த வண்டியில் ஏறியுள்ளார். அப்போது, அந்த மூதாட்டியை கடத்தி சென்று மூதாட்டி கழுத்தில் … Read more

தேசிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய வழக்கில், “தற்போதைய கல்வி முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ள தேசிய கல்விக் கொள்கையால் இடைநிற்றல் அதிகரிக்கும்” என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அர்ஜுனன் இளையராஜா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. … Read more

’’இறந்துபோன நபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை’’ – விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்

நடிகர் விஜய்யின் பனையூர் அலுவலகத்தில் இறந்துபோனதாகக் கூறப்படும் நபருக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.  சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் அலுவலகத்தின் உட்பகுதிகள் புதுமைபடுத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. அங்கு வேலை செய்து வந்ததாகக் கூறப்பட்ட பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பெயிண்டரான பிரபாகரன்(34) என்பவர் கடந்த 17ஆம் தேதி அலுவலகத்தின் உட்புறமாக கையிலும் வாயிலும் பரோட்டாவுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த கானத்தூர் போலீசார் … Read more

‘பிங்க்’ பறவைகளுக்கு இடையே மறைந்திருக்கும் டான்சர் பெண்; சவாலான புதிர் கண்டுபிடிங்க!

சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தையும் சமூக ஊடகங்களையும் ஒரு புயல்போல தாக்கி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற ஒரு சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல் ஆளுமையை வெளிப்படுத்துபவை என்பதால் நெட்டிசன்கள் பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதே நேரத்தில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எல்லாமே ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல. ஆனால், விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்பது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்ப்பது என்பது நெட்டிசன்கள் மத்தியில் ஒரு அடிக்‌ஷனாக … Read more

திருச்சி.! 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை.!

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி மாவட்டம் கலிங்க முடையான்பட்டியை சேர்ந்த முருகன்-அனுராதா தம்பதியரின் மகள் அனுஷ்யா. இவர் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். ஆனால் மதிப்பெண் குறைவாக இருப்பதாக கூறி தாய், அனுசுயாவை திட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த அனுசியா நேற்று இரவு வீட்டில் அனைவரும் உறங்கிய போது, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் … Read more

விஜயகாந்த் வலது காலில் 3 விரல்களை அகற்றியது ஏன்..?

தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு சர்க்கரையின் அளவு அதிகமாகி அவரது வலது காலில் இருந்து 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. கேப்டன் பிரபாகரன் படத்தில் நடிகர் விஜயாகாந்தின் காவல் நிலைய சண்டைக் காட்சியில் அவர் தனது கால்களால் சும்மா புகுந்து விளையாடி இருப்பார்..! அதனை தொடர்ந்து பல படங்களிலும் சண்டைக்காட்சி என்றால் அடி ஒன்றும் இடி போல இருக்க வேண்டும் என்பதற்காக டூப் போடாமல் சண்டைகாட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்ததால் ரசிகர்களால் கேப்டன் என்று … Read more

சிறைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்வி: மதுரை அமைப்பு முயற்சியால் பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி

மதுரை: தண்டனைக் கைதிகளின் பிள்ளைகளுக்கு கல்விச் சேவை அளிக்கும் கூட்டமைப்பு முயற்சியினால் இவ்வாண்டு பொதுத்தேர்வில் 39 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் குடும்பத் தகராறு போன்ற சில பிரச்சினைகளில் மனைவிகளைக் கொன்றது மற்றும் எதிர்பாராத வகையில் பிற கொலைச் சம்பவங்களில் சிக்கிய சிலர் ஆயுள் தண்டனை கைதிகளாக மத்திய சிறைகளில் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, உயர் கல்வி வரை படிக்க வைத்து முன்னேற்ற பாதைக்கு அனுப்பும் பணியை மதுரையில் செயல்படும் … Read more

'நாங்கள்தான் உண்மையான அதிமுக' – தேர்தல் ஆணையத்தை நாட ஓபிஎஸ் தரப்பு முடிவு?

தாங்கள்தான் உண்மையான அதிமுக என தேர்தல் ஆணையத்திடம் ஓ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதிமுகவின் ஒற்றைத் தலைமைக்கு ஓபிஎஸ் வரவேண்டும் என்றும் தேனி உத்தமபாளையத்தில் அதிமுக ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நாளை மறுநாள் சென்னை வானகரத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் இரட்டை தலைமையை ஒழித்துவிட்டு, சிறப்பு … Read more