ஓபிஎஸ் குரூப் திமுகவின் 'பி' டீம்… ஆதாரத்தோடு சற்றுமுன் பக்கத்துக்கு மாநிலத்தை சேர்ந்த முக்கியப்புள்ளி பேட்டி.! 

புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன், இன்று எடப்பாடி கே பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவிக்கையில், “இன்றுவரை மரியாதைக்குரிய ஓபிஎஸ் அவர்கள்தான் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை சந்தித்துப் பேசுவது தவறான ஒன்று. இது கட்சியினுடைய விதிகளுக்கு புறம்பானது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கூட கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி என்பவரை ஓபிஎஸ் அவர்கள் வீட்டில் சந்தித்து பேசியது தவறு. புகழேந்தி … Read more

பல்வேறு கொலை வழக்குகளில் தேடப்பட்ட நபர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரண்.!

திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கு உள்பட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய சபாரத்தினம் என்பவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மதுரை மாவட்டம் கீழ அனுப்பானடியைச் சேர்ந்த சபாரத்தினம் என்பவரை பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் போலீசார் தேடி வந்தனர். தன் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாகவும், என்கவுண்டரில் கொலை செய்ய போலிசார் திட்டமிட்டுள்ளதாகவும் கூறி நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை வரும் 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி … Read more

'அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண்வளம் முற்றிலும் அழிந்துவிடும்' – 'மண் காப்போம்' விழாவில் ராஜ்நாத் சிங் கருத்து

கோவை: மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உலக நாடுகள் முழுவதும் 30,000 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை தமிழகம் திருப்பிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு உலக அளவில் … Read more

காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை – 7 பேருக்கு ஆயுள் தண்டணை

ஆனாங்கூர் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு காதல் விவகாரத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி விழுப்புரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விழுப்புரம் அடுத்த ஆனாங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி. இவருடைய மகள் காதல் விவகாரத்தை தட்டிக் கேட்டது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் கலியமூர்த்தியின் உறவினர் கோபி (17) என்ற சிறுவனை அதே ஊரைச் சேர்ந்தவர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டில் இந்த கொலை … Read more

அரசு பொதுத் தேர்வில் ‘மார்க்’களை அள்ளிக் குவித்த தியா: சூர்யா- ஜோதிகா குஷி

Surya-Jyothika daughter Diya got good marks in SSLC exam: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான சூர்யா – ஜோதிகாவுக்கு, தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். இவர்களில் தியா தற்போது 10 ஆம் வகுப்பு தேர்வில் 500க்கு 487 மதிப்பெண்கள் எடுத்து, சூர்யா-ஜோதிகாவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதையும் படியுங்கள்: உதயநிதி இப்படி செய்யலாமா? விஜய் … Read more

மது போதையில் தகராறில் ஈடுப்பட்ட இளைஞர்களுக்கு வலைவீச்சு..!

மதுபோதையில் ரகளையில் ஈடுப்பட்ட இளைஞர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கோவிந்தாபுரம் பகுதியில் டீக்கடை உள்ளது. அங்கு வந்த இளைஞர்கள் சிலர் அவரை மிரட்டி சிகிரெட் வாங்கியுள்ளனர். பின்னர், அங்கு பணிபுரியும் நபரை தாக்கியுள்ளனர். அவரிடம் இருந்து பணத்தை பறித்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட ஆட்டோக்களின் கண்ணாடியை உடைத்தனர். மேலும், அங்கிருந்தவர்களையும் கத்தியால் தாக்கியுள்ளனர். இதனை அடுத்து, இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவால்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு … Read more

நிற்காமல் சென்ற சரக்கு வாகனத்தை மடக்கி பிடித்த அதிகாரிகள்.. பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்!

மதுரையில் வாகன தணிக்கையின்போது நிற்காமல் சென்ற சரக்கு வாகனம், மடக்கிப் பிடிக்கப்பட்டு அதிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வண்டியூர் சோதனைச் சாவடி அருகே வணிக வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த டாடா ஏஸ் வாகனம் அவர்களை கண்டபின் நிற்காமல் சென்றது. அதனை பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற அதிகாரிகள், மடக்கிப்பிடித்து சோதனையிட்டபோது அதில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பண்டல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, … Read more

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன முறைகேடுகளை கண்டறிய குழு: கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

சென்னை: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிய குழு அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்க வலியுறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் “தனிநாயகம் அடிகள் , பேரறிஞர் அண்ணா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டு கருணாநிதியால் வளர்த்தெடுக்கப்பட்டது உலக தமிழ் … Read more

மூன்றாவது நாளாக இன்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை குளிர்வித்த மழை

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழையை காண முடிந்தது. குறிப்பாக அடையாறு, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, புறநகர் பகுதிகளான மதுரவாயல், வானகரம், திருவேற்காடு, பூவிருந்தவல்லி, மேடவாக்கம் ஆகிய இடங்களில் சுமார் ஒரு மணிநேரம் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. செம்பரம்பாக்கம் ஏரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் … Read more

#BigBreaking || பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அதிகாரபூர்வமாக அறிவிப்பு.! யாரும் எதிர்ப்பாராத பெண் வேட்பாளர்.!

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவருக்கான வேட்பாளரை தேர்ந்தெடுப்பதில் அரசியல் கட்சிகள் ஆலோசனை செய்து வரும் நிலையில், இன்று மதியம் குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சியின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லியில் சரத்பவார் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் எதிர்க்கட்சிகள் சார்பாக குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளது.  பழங்குடியின பெண்ணும், முன்னாள் … Read more