பா.ஜ.க ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு: பழங்குடி சமூக பெண் திரவுபதி முர்மு

Draupadi Murmu named NDA’s candidate for Presidential polls: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரெளபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். திரௌபதி முர்மு குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடி குடியரசு தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசு தலைவராக ஆவார். ஜூன் 20, 1958 இல் பிறந்த திரெளபதி முர்மு 2015 முதல் 2021 வரை … Read more

மின்சாரம் தாக்கி ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர் பலி.. டிரான்ஸ்பார்மரை பழுது பார்க்கும் பணியின் போது நேர்ந்த சோகம்!

சென்னை நம்மாழ்வார்பேட்டையில், மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். மின்வாரியத்தில் லைன் இன்ஸ்பெக்டராக பணியாற்றி 5 ஆண்டுகளுக்கு முன் ஓய்வு பெற்ற ராதாகிருஷ்ணன் என்பவரை அவர் வசிக்கும் பகுதியில் மின் பழுது ஏற்படும் போது அதனை சரி செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ஏ.கே.சாமி தெருவில் மின்மாற்றியில் அவர் பழுது நீக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது மற்றொரு பகுதியில் இருந்த மின்மாற்றியை மின்வாரிய ஊழியர்கள் … Read more

தூய்மைப் பணியாளர்கள் இளைப்பாற வசதிகளை ஏற்படுத்துங்கள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் கடிதம்

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் அவ்வப்போது அமர்ந்து இளைப்பாறவும், மதிய வேளைகளில் அமர்ந்து உணவருந்தவும், நீர் பருகவும் போதுமான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு, மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் அனுப்பியுள்ளார். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: “அலுவலகங்களில் நாம் அமர்ந்து பணியாற்றும் அறைகளையும், உபயோகப்படுத்தும் ஓய்வறைகளையும் நாள்தோறும் தூய்மைப்படுத்தித் துலங்கச் செய்யும் தூய்மைப் பணியாளர்கள் அமர இடமின்றி அல்லாடுவதைப் பற்றி பலரும் என் கவனத்திற்கு கொண்டு வருகின்றனர். நீங்கள் இதில் … Read more

ஆர்டர்லிகளாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சி பெற்ற காவலர்களை திரும்பப்பெற வேண்டும் – நீதிமன்றம

காவலர் பயிற்சி பெற்றவகளை ஆர்டர்லிகளாக நியமிப்பது குற்றம் என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், அவர்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. காவல்துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 2014 ஆம் ஆண்டிலேயே இடத்தை காலி செய்யுமாறு காவல்துறை … Read more

3 பேர் இ.பி.எஸ் அணிக்கு தாவல்: ஓ.பி.எஸ் அணியில் எஞ்சிய 9 மாவட்டச் செயலாளர்கள் யார், யார்?

3 more ADMK district secretaries move from OPS to EPS: ஓ.பன்னீர்செல்வம் பக்கம் இருந்த 3 மாவட்டச் செயலாளர்கள், எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு தாவியதால், ஓ.பி.எஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை 9 ஆக குறைந்துள்ளது. அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்து நிலையில், ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். இதில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகளின் ஆதரவு இ.பி.எஸ்-க்கு இருப்பதாக கூறப்படுகிறது. மொத்தம் உள்ள … Read more

எங்களின் முழு ஆதரவு உங்களுக்குத்தான் – அறிவிப்பை வெளியிட்ட சீமான்.!

‘அக்னிபத்’ திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு தரும் என்று, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “அக்னிபத் திட்டத்துக்கெதிராக தமிழகத்தில் போராடி வரும் இளைஞர்களின் அறப்போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது.  அவர்களது போராட்டக்கோரிக்கை வெல்ல வாழ்த்துகிறேன்! அவர்களுக்குத் துணைநிற்கிறேன்! அதே கோரிக்கையை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியும் எழுச்சிமிகுப் போராட்டங்களை … Read more

தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருட்டு

தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படாத அந்த டவர் கண்காணிப்பில் இல்லாதபோது திருடப்பட்டிருப்பதாக அதனை அமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் இதேபோல் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், டவர்கள் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து … Read more

“நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: “நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீரிழிவு நோய் காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது. இந்நிலையில், விஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ” எனது அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்தேன். … Read more

”தொண்டர்கள் கொதித்து போயுள்ளார்கள்; அசம்பாவிதம் நடக்கும்” – ஓபிஎஸ் சார்பில் போலீசில் மனு

அதிமுக பொதுக்குழுவுக்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என காவல்துறையிடம் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.  சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களாக 2,500 பேர் கலந்து கொள்ள உள்ளதால் பொதுக்குழுவுக்கு பாதுகாப்பு வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சரும் திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், போலீஸ் பாதுகாப்பு கேட்டு மூன்று … Read more

அதிமுக பொதுக்குழு பாதுகாப்பு: போலீசாரின் 31 கேள்விகளுக்கு முன்னாள் அமைச்சர் பதில்

AIADMK General Committee meeting Tamil News: அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், வருகிற 23-ந்தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெற உள்ளது. இதனிடையே நடந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் “ஒற்றை தலைமை” என்கிற கோஷம் ஒலித்தது. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.-வில் ஒற்றை தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய வண்ணம் உள்ளனர். அ.தி.மு.க.-வில் … Read more