தமிழகத்தில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருட்டு
தமிழ்நாட்டில் செயல்படாத 600 செல்போன் டவர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு மாவட்டம் சென்னிமலைப் பகுதியில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன் டவரை காணவில்லை என காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படாத அந்த டவர் கண்காணிப்பில் இல்லாதபோது திருடப்பட்டிருப்பதாக அதனை அமைத்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நடந்த விசாரணையில், டவர் அமைத்த நிறுவனத்திற்கு சொந்தமான 600 செல்போன் டவர்கள் இதேபோல் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. இந்நிலையில், டவர்கள் எவ்வாறு திருடப்பட்டது என்பது குறித்து … Read more