தண்டவாளத்தை கடக்க முயன்ற இளைஞருக்கு நிகழ்ந்த விபரீதம்… திருவள்ளூர் அருகே சோகம்..!

இருசக்கர வாகனம் மீது ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் திருவள்ளூர் மாவட்டம், அரிசந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேலாயுதம்.இவர் ரெயில்வே துறையில் வேலை செய்து வருகிறார்.  சம்பவதன்று திருவாலாங்காடு ரெயில் நிலையம் அருகே தனது இருசக்கர வாகனத்தில் அவரது நண்பர் பாலகிருஷ்ணனுடன் வந்து கொண்டிருந்தார். அப்போது, ரெயில்வே கேட்டை கடக்க முயன்றுள்ளார். அங்கு வந்த சரக்கு ரயில் மோதியது. இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில், வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். … Read more

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக திட்டியதால் மனமுடைந்து மாணவி தற்கொலை.. துக்கம் தாளாமல் தற்கொலைக்கு முயன்ற தாய்..!

திருச்சியில்,12ம் வகுப்பு பொதுத் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதாக தாய் திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், மகள் இறந்த துக்கம் தாளாமல் தாயும் தற்கொலைக்கு முயன்றார். கலிங்க முடையான்பட்டியைச் சேர்ந்த மூக்கன் – அனுராதா தம்பதியின் மகள் அனுசுயா, பொதுத்தேர்வில் 600க்கு 383 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மதிப்பெண் குறைவாக இருப்பதாகக் கூறி தாய் அனுராதா, அனுசியாவை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவி நேற்றிரவு அனைவரும் உறங்கிய நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு … Read more

“அரசியல் காரணங்களுக்காக தற்கொலையைப் போற்றுவோரின் கருத்தை பின் தள்ளுங்கள்” – அண்ணாமலை

சென்னை: “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், “அரசியல் காரணங்களுக்காகத் தற்கொலையைப் போற்றும் சிலரின் கருத்தை பின் தள்ளுங்கள்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” … Read more

அரியவகை நோய்: குழந்தையை காப்பாற்ற அரசின் உதவியை கோரும் தாய்

நித்திரவிளை அருகே அரிய வகை நோய் பாதிப்பால் அவதியுறும் குழந்தையின் உயிரை காக்கும் மருந்து வாங்க அரசு உதவிட வேண்டுமென் தாய் கோரிக்கை வைத்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் ஹெலன் அக்சிலியா (33). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவருடன் கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணமாகி உள்ளது. கணவருடன் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஹெலன் அக்சிலியா 5 … Read more

இந்த படத்தில் 3வது உயிரினம் இருக்கு; உங்க கண்ணுக்கும் மூளைக்கும் சவால்… கண்டுபிடிங்க

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற குழப்பமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. இந்த படத்தில் டால்ஃபின், மீன் மட்டுமல்ல 3வது ஒரு உயிரினம் இருக்கிறது. அது என்ன என்று கண்டுபிடிங்க… 1% கூர்மையான பார்வையும் அறிவுத்திறனும் மிக்கவர்களின் வரிசையில் இடம்பிடியுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் முதல் பார்வையில் குழப்பமடையச் செய்பவை. உற்று கவனித்தால் தெளிவு கிடைத்துவிடும். உங்கள் மூளையை ஆக்டிவாக வைத்துக்கொள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவுகிறது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் … Read more

லாரி டயரில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு.!

திருவண்ணாமலையில் லாரி டயரில் சிக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் மேல் அத்திப்பட்டு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மகன் சக்திவேல்(21). இவர் நேற்று காலை அவரது நண்பரான நெல்லிமரத்துரை  சேர்ந்த ஏழுமலை என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அத்திப்பட்டு கிராமத்திலிருந்து ஜமுனாமரத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது முன்பாக சென்று கொண்டிருந்த லாரியை அவர்கள் முந்திச் செல்ல முயன்ற போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பக்க டயரில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சக்திவேல் லாரி டயரில் சிக்கி … Read more

உள்நோக்கத்துடன் ஓபிஎஸ் செயல்படுகிறார் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திட்டமிட்டப்படி பொதுக்குழு நடைபெறும் – ஜெயக்குமார் வழக்கத்திற்கு மாறாக கடிதம் எழுதியுள்ளார் ஓபிஎஸ் ஓபிஎஸ் கடிதம் ஊடகங்களில் வெளியானது எப்படி? உள்நோக்கத்துடன் செயல்படுகிறார் ஓபிஎஸ் – ஜெயக்குமார் உறுப்பினருக்கு ஒரு சட்டம், ஒருங்கிணைப்பாளருக்கு ஒரு சட்டமா? கட்சியில் இருந்து நீக்கப்பட்டவரை ஓபிஎஸ் சந்தித்தது ஏன்? ஒருங்கிணைப்பாளருக்கு கட்சியின் சட்டம் பொருந்தாதா? திட்டமிட்டப்படி 23-ந் தேதியன்று அதிமுக பொதுக்குழு நடைபெறும் – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒட்டுமொத்த தொண்டர்களின் ஒரே விருப்பம் ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதுதான் – … Read more

“தொடர்ந்து யோகா செய்தால் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” – மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி

கன்னியாகுமரி: “தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” என்று மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டினைக் கொண்டாடி வருவதால் நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21) கொண்டாடப்பட்டது. இவற்றில் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை … Read more

மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்த்-ன் 3 கால்விரல்கள் அகற்றம்

விரல்கள் அகற்றப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்தார். அவருக்கு, வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற மருத்துவ காரணத்தினால், அங்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், மருத்துவரின் பரிந்துரைபடி, வலது கால் கட்டை விரல் உள்பட அடுத்தடுத்து மூன்று விரல்கள் … Read more

ரத்த ஓட்டம் சீராக இல்லை; விஜயகாந்த் கால் விரல் அகற்றம்: மெடிக்கல் ரிப்போர்ட்

DMDK Leader Vijayakanth Medical Report : கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து கேப்டன் என்ற அந்தஸ்துடன் திரைத்துறையில் வலம் வந்த விஜயகாந்த், அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் கால் பதித்தார் திரைத்துறையை போல் அரசியலில் வெற்றிகண்ட் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் என்ற உயரிய … Read more