“தொடர்ந்து யோகா செய்தால் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” – மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி

கன்னியாகுமரி: “தொடர்ந்து யோகாசனம் செய்வதன் மூலம் நாம் மிகப் பெரிய பலத்தை பெற முடியும்” என்று மத்திய இணையமைச்சர் மீனாட்சி லேகி கூறியுள்ளார். நாடு சுதந்திரம் அடைந்த 75-வது ஆண்டினைக் கொண்டாடி வருவதால் நாடு முழுவதும் 75 ஐகானிக் இடங்களில் சர்வதேச யோகா தினம் இன்று (ஜூன்21) கொண்டாடப்பட்டது. இவற்றில் மத்திய அமைச்சர்கள் உட்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதன் ஒருபகுதியாக கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணை … Read more

மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்த்-ன் 3 கால்விரல்கள் அகற்றம்

விரல்கள் அகற்றப்பட்ட நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் தனியார் மருத்துவமனையில் கடந்த 18ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்துவந்தார். அவருக்கு, வலது காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்ற மருத்துவ காரணத்தினால், அங்கு தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதால், மருத்துவரின் பரிந்துரைபடி, வலது கால் கட்டை விரல் உள்பட அடுத்தடுத்து மூன்று விரல்கள் … Read more

ரத்த ஓட்டம் சீராக இல்லை; விஜயகாந்த் கால் விரல் அகற்றம்: மெடிக்கல் ரிப்போர்ட்

DMDK Leader Vijayakanth Medical Report : கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் விஜயகாந்த். தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து கேப்டன் என்ற அந்தஸ்துடன் திரைத்துறையில் வலம் வந்த விஜயகாந்த், அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை தொடங்கி அரசியலிலும் கால் பதித்தார் திரைத்துறையை போல் அரசியலில் வெற்றிகண்ட் விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் என்ற உயரிய … Read more

தூத்துகுடி || ரயில் பயணம் செய்த போது தவறி விழுந்த மூதாட்டி பரிதாப பலி..!

ரயிலியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துகுடி மாவட்டம், திருத்தணியில் இருந்து மின்சார புறநகர் ரெயில் ஒன்று திருவள்ளூர் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் படிகட்டில் நின்று கொண்டிருந்தார். எதிர்பாராத விதமாக அவர் ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில், அவருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து … Read more

ஜூன் 23ல் நடைபெற உள்ள அ.தி.மு.க. பொதுக்குழுவுக்காக வானகரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை அடுத்து வானகரத்தில் வரும் 23ஆம் தேதியன்று அ.தி.மு.க.வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கூட்டம் நடைபெற உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நுழைவு வாயில் முதல் உள்மண்டபம் வரை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மண்டபத்தில் அலங்கார வளைவுகளும், ஆயிரக்கணக்கானோர் அமரும் வகையிலான பந்தல்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. Source link

“ஒற்றைத் தலைமைக்கு இபிஎஸ் வருவதை தடுப்பதுதான் ஓபிஎஸ் நோக்கம்” – ஜெயக்குமார்

சென்னை: “தமிழகம் முழுவதும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி உள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கு ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என்ற எழுச்சி உள்ளது. இந்தச் சூழ்நிலையில், இதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதும், இதை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான்” என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “பொதுக்குழு … Read more

தன்னை வெட்டவந்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை.. சொத்துத் தகராறில் விபரீதம்

தூத்துக்குடியில் சொத்துப் பிரச்னை காரணமாக தந்தையை வெட்ட வந்த மகன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்தவர் தமிழ் அழகன். இவருக்கும் இவரது மகன் காசிராஜனுக்கும் ஏற்கனவே சொத்துப் பிரச்னை காரணமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து காசிராஜன், தனது தந்தை மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஆஜராவதற்காக இன்று காலை தமிழ் அழகன் மற்றும் அவரது தம்பி கடல் ராஜா மற்றும் அவரது … Read more

குவியும் புகார்கள்… சிதம்பரம் தீட்சிதர்களுக்கு அறநிலையத் துறை ‘செக்’!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகின்றது. புகழ்மிக்க இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பக்தர்கள் கனக சபையின் … Read more

#ஈரோடு || கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி.!

ஈரோடு மாவட்டத்தில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கங்காபுரம் ஆட்டையாம்பாளையம் கிழக்குவீதி பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று செங்கப்பள்ளியிலிருந்து பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது பல்லகவுண்டன்பாளையம் பகுதி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கந்தவேல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து … Read more

சொத்து பிரச்சனையால் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்.. அரிவாளை பறித்து சரமாரியாக வெட்டிய தந்தையின் கூட்டாளிகள்..!

தூத்துக்குடி நீதிமன்றம் முன் தந்தையை வெட்டி கொலை செய்ய முயன்ற மகனை அவரது தந்தையின் கூட்டாளிகள் அங்கேயே வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிராஜன் என்பவர் சொத்து பிரச்சனையால் தொடர்ந்த வழக்கில் அவரது தந்தை தமிழ் அழகன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தமிழ் அழகனை அவரது மகன் காசி ராஜன் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், அவரது … Read more