குவியும் புகார்கள்… சிதம்பரம் தீட்சிதர்களுக்கு அறநிலையத் துறை ‘செக்’!

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வராலும் தேவாரப் பாடல் பெற்ற தலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் விளங்குகின்றது. புகழ்மிக்க இந்த சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனகசபையில் ஏறி தரிசனம் செய்ய கோயில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கனகசபையில் ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதன்படி பக்தர்கள் கனக சபையின் … Read more

#ஈரோடு || கார் மீது இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் பலி.!

ஈரோடு மாவட்டத்தில் கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். ஈரோடு மாவட்டம் கங்காபுரம் ஆட்டையாம்பாளையம் கிழக்குவீதி பகுதியை சேர்ந்தவர் கந்தவேல்(30). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று செங்கப்பள்ளியிலிருந்து பெருந்துறை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்பொழுது பல்லகவுண்டன்பாளையம் பகுதி அருகே கார் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த கந்தவேல் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து … Read more

சொத்து பிரச்சனையால் தந்தையை கொலை செய்ய முயன்ற மகன்.. அரிவாளை பறித்து சரமாரியாக வெட்டிய தந்தையின் கூட்டாளிகள்..!

தூத்துக்குடி நீதிமன்றம் முன் தந்தையை வெட்டி கொலை செய்ய முயன்ற மகனை அவரது தந்தையின் கூட்டாளிகள் அங்கேயே வெட்டி படுகொலை செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். காசிராஜன் என்பவர் சொத்து பிரச்சனையால் தொடர்ந்த வழக்கில் அவரது தந்தை தமிழ் அழகன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேருடன் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். வழக்கு விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தமிழ் அழகனை அவரது மகன் காசி ராஜன் அரிவாளால் வெட்ட முயன்றதாகவும், அவரது … Read more

“மூன்று நாட்களில் 21 நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன்” – புதுச்சேரி எம்.பி. தொகுதி பாஜக பொறுப்பாளர் எல்.முருகன்

புதுச்சேரி: “நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கொள்ளும் வகையில் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் கட்சியை வலுப்படுத்தும் பணிகளை தொடங்குகிறோம்” என்று புதுச்சேரி எம்.பி தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். புதுச்சேரி உட்பட 144 எம்.பி தொகுதிகளில் தேர்தல் பணிகளை பாஜக தொடங்குகிறது. இவை அனைத்தும் தென்னிந்தியாவில் உள்ளன. புதுவையில் நடந்த யோகா விழாவில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”நாடாளுமன்றத் … Read more

தஞ்சாவூர்: மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

ரயில்முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ சமூக வளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரம் ரயில் நிலையத்தில், இன்று காலை திருச்சியில் இருந்து மயிலாடுத்துறை சென்ற ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அங்கு வந்த ரயில் இருப்பு காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையின் நடத்திய முதற்கட்ட விசாரனையில் தற்கொலை செய்து கொண்ட … Read more

அரசு கலை & அறிவியல் கல்லூரி சேர்க்கை; விண்ணப்பம் செய்வது எப்படி?

Tamilnadu Arts and Science college admission 2022 online application starts: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கான விண்ணப்பச் செயல்முறை நாளை (ஜூன் 22) முதல் ஆன்லைனில் தொடங்குகிறது. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று (ஜூன் 20) வெளியான நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன படிக்கலாம் என திட்டமிட்டு வருகின்றனர். மருத்துவம், பொறியியல், வேளாண்மை போன்ற படிப்புகளைப் போலவே, கலை மற்றும் அறிவியல் … Read more

பொதுக்குழு கூட்டம் நடக்குமா? காவல்துறையை அணுகும் ஒரு தரப்பு.. உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.! 

அதிமுகவின் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அதில், “வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், அதிமுக பொதுக்குழுவில் அனைத்து தரப்புக்கும் பாதுகாப்பு அளித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என்று காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், … Read more

விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றம்..!

விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றம் நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலதுகாலில் விரல் அகற்றப்பட்டது சிகிச்சை முடிந்து விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தலைமை அறிக்கை உடல்நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக தலைமை கோரிக்கை Source link

மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு: எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஆவணங்களை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கில், முந்தைய ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்புக்கு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறி, முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யக் கோரி அறப்போர் இயக்கம் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி … Read more

திமுக எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று

திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மகளிரணி செயலாளர் கனிமொழிக்கு இரண்டாம் முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் பரப்புரையின்போது கொரோனா தொற்று ஏற்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்ட போதும் கவச உடை அணிந்து தனது வாக்கை, சென்னை மயிலாப்பூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து செலுத்யியிருந்தார். தொடர்ந்து சுற்றுப்பயணம், நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு வந்த கனிமொழிக்கு காய்ச்சல் ஏற்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் … Read more