உங்களை புரிந்து கொள்ளும் கணவர் இருந்தால் அனைத்தும் சாத்தியம்.. விஜே  பிரியங்கா சொல்ல வருவது என்ன?

பிரியங்கா என்றாலே தமிழகத்தில் யாருக்கும் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை தட்டிச் சென்றார். பிக்பாஸ் செல்வதற்கு முன், பிரியங்கா விஜய் டிவியில் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், காமெடி ராஜா, கலக்கல் ராணி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பிறகு, பிரியங்கா பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல, யாருமே எதிர்பாராதவிதமாக, மாகாபா … Read more

#BigBreaking || ஓபிஎஸ்-க்கு பதில் கடிதம் எழுதிய எடப்பாடி பழனிசாமி.! கடிதத்தில் அந்த ஒரு வார்த்தை… 

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடப்பதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் ஒரு பக்கமும், எடப்பாடி கே பழனிசாமி மறுபக்கமும் தங்களது ஆதரவாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், எடப்பாடி கே பழனிசாமி தான் அதிமுகவின் தலைமையாக வரவேண்டுமென்று, அதிமுகவின் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, … Read more

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை திரும்பப்பெறுக – உயர்நீதிமன்றம்

உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டர்லிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல். ஓராண்டு பயிற்சி முடித்து 45 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் காவலர்களை உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக பயன்படுத்துவது குற்றம். அர்டர்லிக்களை பயன்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஆர்டலிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். அரசியவாதிகளும், காவல்துறையும் கூட்டுசேர்ந்து செயல்படக்கூடாது, அழிவுக்கு கொண்டு செல்லும். அரசியல்வாதிகளுக்கு பூங்கொத்தும், பரிசும் கொடுப்பதும் தவறுதான். குற்றங்கள் அதிகரிக்கவே வாய்ப்பளிக்கும் … Read more

என்னம்மா ரோசா… மாரியம்மா கோவிலுக்கு வேண்டுதல் வச்சிருக்கியா… இன்றைய கலாய் மீம்ஸ்

Tamil Serial Memes : இணையளத்தில் மூழ்கியுள்ள இளைஞர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்’காக சின்னத்திரை சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பல்வேறு வகைளில் முயற்சி செய்கிறது. இதில் ஒரு சில சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும். இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக வரும் மீம்ஸ்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. உள்ளூர் நிகழ்ச்சிகள் முதல் உலகப்போர்கள் வரை அனைத்தையும் மீம்ஸாக பதிவிடும் நெட்டிசன்கள் தற்போது டிவி நிகிழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை. … Read more

#BREAKING || படைதிரட்டி வந்து ஆதரவை தெரிவித்த தமிழ்ச்செல்வன்… அடுத்தடுத்து அமர்க்களப்படும் ஆதரவாளர்கள்,!

வருகின்ற 23 ஆம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.  அதிமுகவின் ஒற்றை தலைமை விவகாரத்தில், ஓபிஎஸ் ஒரு பக்கம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பொதுக்குழு கூட்டத்திற்கான நாள் நெருங்க.. நெருங்க.. எடப்பாடி கே பழனிசாமியின் கை இமயம் போல் ஓங்கி வருவதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிமுகவின் ஒற்றை தலைமையாக எடப்பாடி பழனிசாமி வருவது காலத்தின் கட்டாயம் என்றும் கருத்துக்களை பதிவிட்டு … Read more

டீக்கடைக்கு சென்று கடைக்காரரை மிரட்டி சிகெரெட் வாங்கிய இளைஞர்கள்…. சிசிடிவி காட்சி

திண்டுக்கல்லில் மதுபோதையில் பட்டாக் கத்தியைக் காட்டி மிரட்டி ரகளையில் ஈடுபட்ட இளைஞர்கள், கத்தியால் வெட்டியதில் 2 பேர் காயமடைந்தனர். அதிகாலையில் கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற இளைஞர்கள், டீக்கடைக்காரரை மிரட்டி சிகிரெட் வாங்கியுள்ளனர். பின்னர் டீக்கடையில் பணிபுரிபவரை தாக்கி பணம் பறித்த இளைஞர்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ கண்ணாடியை அடித்து நொறுக்கியதோடு செய்தித்தாள் விநியோகம் செய்த நபரையும் கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. தகவலறிந்து வந்த போலீசார், வேல்முருகன் என்பவனை விரட்டிப் பிடித்தனர். பைக்கில் தப்பிச் … Read more

விரைவுப் பேருந்துகளில் எம்எல்ஏ-க்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கீடு

சென்னை: தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களுக்காக ஓரிரு இருக்கைகள் ஒதுக்கப்படும். அவர்கள் வராதபட்சத்தில் அந்த இருக்கைகள் மற்ற பயணிகளுக்கு ஒதுக்கப்படும். இந்நிலையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு பிரத்யேக படுக்கை ஒதுக்கி உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு விரைவுப் போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர், அனைத்து கிளை மேலாளர்கள், கோயம்பேடு பேருந்து நிலைய துணை மேலாளர், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள், அனைத்து பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு … Read more

குன்னூரை முழுவதுமாக மறைத்த 'மிஸ்ட்' – கடுமையான குளிரில் மக்கள்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றான டால்பினோஸ், லேம்ஸ்ராக் உள்ளிட்ட காட்சி முனைகளில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுவதால் சுற்றுதலங்களை காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மேலும் குன்னூர் நகரப் பகுதியில் காலை முதல் சாரல் மழைப் பெய்வதால் குளிர்ந்த கால நிலை நிலவுகிறது. நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான லேம்ஸ்ராக்,டால்பினோஸ் போன்ற காட்சிமுனைகளில் கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது, இதன் காரணமாக காட்சிமுனைகளை காண முடியாமல் சுற்றுலாப் பயணிகளில் ஏமாற்றத்துடன் … Read more

சென்னையில் பல இடங்களில் புதன்கிழமை (ஜூன்:22) மின்தடை.. எங்கெங்கே தெரியுமா?

பராமரிப்புப் பணிகளுக்காகப் பின்வரும் பகுதிகளில் புதன்கிழமை (22.06.2022) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முடிந்தால் மதியம் 02.00 மணிக்கு முன் விநியோகம் தொடங்கப்படும். சென்னையில் புதன்கிழமை (ஜூன்;22) காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில்? அண்ணாசாலை: பூதபெருமாள் கோயில் தெரு, … Read more