செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து கொண்டே உள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவு 24 அடியாகும். இன்று காலை நிலவரப்படி ஏரியில் தண்ணீர் இருப்பு 23.48 அடியாக உள்ளது. எனவே செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான … Read more

ஓபிஎஸ் பலம் குறைகிறதா? எத்தனை மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு?

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருந்த மாவட்டச் செயலாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. அவருக்கு ஆதரவாக இருந்த 2 மாவட்டச் செயலாளர்கள் திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதால் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 10-ஆக குறைந்துள்ளது. அதிமுகவில் ஒற்றை தலைமை கோஷம் மீண்டும் எழுந்ததை அடுத்து, கட்சிக்கு ஓ. பன்னீர்செல்வம் தான் தலைமை வகிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்களும், இதற்கு பதிலடியாக, எடப்பாடி பழனிசாமிதான் தலைமை பதவிக்கு வர வேண்டும் என … Read more

O Panneerselvam vs Edappadi Palanisamy LIVE: ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை சிறப்பாக வழிநடத்தியவர் இ.பி.எஸ்- தச்சை கணேச ராஜா!

Go to Live Updates அதிமுக செயற்குழு, பொதுக் குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கட்சியில் தற்போது வெடித்துள்ள ஒற்றை தலைமை என்ற விவகாரம் நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டு போகிறது. இந்த விவரகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக தொடர்ந்து 8 வது நாளாக ஆலோசனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை வேண்டும் என்று தான் சொல்கிறோம். யார் … Read more

பரிதவிக்கும் ஓபிஎஸ்.. திடீரென இபிஎஸ் பக்கம் தாவிய முக்கிய நிர்வாகிகள்.!!

அதிமுகவில் வருகின்ற 23-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், ஒன்றை தலைமை விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைமையை கைப்பற்ற ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடிபழனிசாமி இடையே உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.  தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனிடையே 8-வது நாளாக இன்றும் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  … Read more

ஈரோடு அரசு மருத்துவர்கள் இருவர் சஸ்பெண்ட்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நாமக்கல்: ஈரோடு அரசு மருத்துவமனையில் பணி நேரத்தின்போது பணியில்லாத மருத்துவர் மற்றும் மகனை மருத்துவ சிகிச்சை அளிக்க அனுமதித்த மருத்துவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே போதைமலைக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருந்துப் பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார். … Read more

முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை – 27 ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை

தமிழக அமைச்சரவைக்கூட்டம் வரும் ஜூன் 27ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் நடைப்பெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், நடைப்பெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டத்தில், இதில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. குறிப்பாக, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், … Read more

யோகா உடலுக்கு மனதுக்கு நல்லது :மத்திய இணை அமைச்சர் கருத்து

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூரணி தேவி தலைமையில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எட்டாவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தஞ்சை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் யோகா நிகழ்ச்சிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் அன்னபூரணி தேவி உள்ளிட்டோர் … Read more

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை என்பது அவசியம்.. நயினார் நாகேந்திரன்.!!

அதிமுக ஒற்றை தலைமை பூதாகரமாக வெடித்து உள்ள நிலையில், தலைமையை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். ஓ பன்னீர்செல்வம் இரட்டைத் தலைமையே  தொடர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் 8-வது நாளாக ஓபிஎஸ் – இபிஎஸ் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர்.  இதனிடையே ஓ பன்னீர்செல்வத்தை அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது கட்சியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் மூத்த … Read more

நோயாளிகளுக்கு மகன் சிகிச்சை.. நீச்சல் குளத்தில் நர்சுகளுடன்.. லூட்டி அடித்த அரசு டாக்டர்..!

ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி அரசுமருத்துவமனையின் தலைமை மருத்துவர் தன் மகனை மருத்துவம் பார்க்க சொல்லி விட்டு செவிலியர்களுடன் நீச்சல்குளத்தில் கும்மாளமிட்ட சம்பவம் புகாருக்குள்ளான நிலையில், மருத்துவர் மீது நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.. கோபிச்செட்டிப்பாளையம் அடுத்த கவுந்தப்படி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவரான தினகர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு விடுப்பு போட்டு விட்டு தனக்கு பதிலாக தகனது மகன் அஸ்வினை நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வைத்ததாக கூறப்படுகிறது. தலைமை மருத்துவர் தினகர் மருத்துவமனையில் இல்லாததோடு அங்குள்ள செவியர்களை அழைத்துக் … Read more

'குழந்தைகளுக்கு தோல்வியை பழக்கப்படுத்த வேண்டும்' – விழுப்புரம் மனநல மருத்துவர் 

விழுப்புரம்: குழந்தைகள் கேட்டவுடன் பெற்றோர்கள் எதையும் உடனடியாக வாங்கிக் கொடுக்கக்கூடாது, ஒருமுறைக்கு பலமுறை கேட்ட பின்பு வாங்கிக் கொடுக்க வேண்டும், அப்படி வாங்கிக்கொடுக்க எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தது என்பதை சொல்லித் தர வேண்டும் அப்போது தான் தோல்வி பழகும் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வெளியிடப்பட்ட ப்ளஸ் டூ, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்குப் பின் 2 மாணவிகள், 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மேலும் 5 மாணவ, … Read more