முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்.. வெளியான அறிவிப்பு.!!

தமிழகத்தில் ஜூன் 27ஆம் தேதி முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது.  வருகின்ற ஜூன் 27ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  மேலும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக … Read more

திருச்சியில் நூடுல்ஸ் சாப்பிட்ட 2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம்.?

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நூடுல்ஸ் சாப்பிட்ட  2 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. தாளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த  சேகர் – மகாலெட்சுமி தம்பதியினரின் 2வயது மகன் சாய் தருண் கடந்த சனிக்கிழமை காலை நூடுல்ஸ் சாப்பிட்ட பின்னர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளான். இதுகுறித்து தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் சிறுவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக … Read more

தனி நபராக 1001 வகை யோகாசனங்கள் மூலம் உலக சாதனை புரிந்த உடுமலை யோகா ஆசிரியர்

உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை முக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் வி.குணசேகரன் (48). யோகா ஆசிரியர். இவரது மனைவிசத்தியபாமா, மகள் அக்னி மரகதவர்ஷினி. குணசேகரன் யோகாசனம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 1001 வகையான ஆசனங்களை பானை, நாற்காலி, ஏணி, மேஜை உள்ளிட்ட பல வகையான பொருள்களை பயன்படுத்தி செய்து, உலக சாதனை செய்துள்ளார். ‘அபூர்வ சகோதரர்கள்’ திரைப்படத்தில் கமல்ஹாசன் குள்ளமானவராக நடித்ததுபோல, குணசேகரனும் 2018-ல் கால்களை கட்டிக்கொண்டு 40 நிமிடங்களில் 3,320 காலடி நடைபயிற்சி செய்தது உலக … Read more

ரேசன் பொருட்கள் கடத்தல் – 7 நாட்களில் 171 பேர் கைது

ரேசன் தொடர்பான பொருட்களை கடத்தியதாக 7 நாட்களில் நடந்த சோதனையில் 171 பேரை கைது செய்துள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. ரேஷன் பொருட்கள் கடத்தலை தடுக்க தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு ரேசன் பொருட்கள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அண்மைக்காலமாக பல இடங்களில் கடத்தல் ரேசன் பொருட்களை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பலர் கைது … Read more

திருப்பத்தூர், தூத்துக்குடி… மாவட்டம் வாரியாக இ.பி.எஸ்-க்கு ஆதரவாக தீர்மானம்!

Many districts of ADMK units took resolution to support EPS: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், ஒவ்வொரு மாவட்ட அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி வருகிறார்கள். வருகின்ற ஜூன் 23 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடுபிடித்துள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என அதிமுக நிர்வாகிகள் … Read more

மாணவிகளுக்கு மாதம் ரூ.1000… தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு.!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் மூலம் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்த திட்டம் ஜூலை 15ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.  இதற்காக அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் தற்போது உயர்கல்வி தொடரும் மாணவிகளின் விவரங்களை அந்தந்த கல்வி நிர்வாகம் மூலம் சேகரிக்கப்பட்டு வருகிறது. மாணவிகளின் கல்லூரி அடையாள அட்டை, … Read more

திருச்சியில் வாகன சோதனையின் போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக 7 பேர் கைது.!

திருச்சி மாவட்டத்தில் வாகன சோதனையின் போது அச்சுறுத்தும் வகையில் ஆயுதங்கள் வைத்திருந்ததாக  7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி – புதுக்கோட்டை சாலையில் வாகன சோதனையின் போது நிற்காமல் சென்ற காரை போலீசார் மடக்கி பிடித்தனர். காரை சோதனையிட்ட போது வீச்சறிவாள், கத்தி மற்றும் நாட்டு வெடிகுண்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. காரிலிருந்தவர்களிடம் நடத்திய விசாரணையில்,  தற்காப்பிற்காக ஆயுதங்களை வைத்திருந்ததாக தெரிவித்த நிலையில், போலீசார் ஏழு பேர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர். Source link

தமிழக பள்ளிக்கல்வி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது – பிளஸ் 2-வில் 93.7%, பத்தாம் வகுப்பில் 90% தேர்ச்சி

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்பில் 90 சதவீதம் பேரும், பிளஸ் 2-வில் 93.76 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதத்தை பொறுத்தவரை பிளஸ் 2-வில் பெரம்பலூர் மாவட்டமும், பத்தாம் வகுப்பில் கன்னியாகுமரி மாவட்டமும் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளன. தமிழக பள்ளிக்கல்வியில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஆண்டுதோறும் மார்ச் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். கரோனா வைரஸ் தொற்று பரவலால் கடந்த 2020-ம் … Read more

சொட்டு எண்ணெய் இல்லாமல் சாஃப்ட் சப்பாத்தி: இப்படி ட்ரை பண்ணுங்க!

சிறுவயதில் கிச்சன் ஸ்லாப்பில் அமர்ந்து அம்மா சமைப்பதைப் பார்த்தது நினைவிருக்கிறதா? நம்மில் பெரும்பாலோர் சமையல் கற்றுக்கொண்டது அப்படித்தான். இன்று, நாம் அதை வெவ்வேறு நவீன வழிகளில் கற்றுக்கொள்ள முயற்சிக்கிறோம். அதில் ஆண், பெண் இரு பாலருக்கும் மிகவும் உதவியாக இருப்பது யூடியூப் தான். அதில் My Country Foods யூடியூப் சேனல் இணையத்தில் மிகவும் பிரபலம். இந்த சேனலில், வாழைப்பழமும், கோதுமை மாவும் வைத்து எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி எப்படி செய்வது என்பது குறித்த,சமையல் வீடியோ நிறைய … Read more

திமுக உட்கட்சித் தேர்தல்.. துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு.. உற்சாகத்தில் நிர்வாகிகள்.!!

திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மூன்றாம் கட்ட தேர்தல் குறித்த அறிவிப்பை அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவில் ஒன்றிய பொறுப்புகளுக்கு மாவட்ட திமுக அலுவலகங்களில் ஜூன் 24 ஆம் தேதிக்குள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.   3வது கட்டமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், நாகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. போட்டியிருந்தால் ஜூன் 25-27 ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் … Read more