சாதிச்சுட்ட என அம்மா சொன்ன தருணம்… எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி வீடியோ

SA Chandrasekar talks about his first car in Youtube video: எங்க அம்மா என்னிடம் நீ சாதிச்சுட்ட என்று சொன்னது எனக்கு பெருமையா இருந்தது, நம்ம மனசு, நடத்தை தான் நம்மை உயர்த்துது என எஸ்.ஏ.சந்திரசேகர் பழைய நினைவுகளை பகிர்ந்து வீடியோ வெளியிட்டுள்ளார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை தனது யூடியூப் பக்கம் மூலமாக வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், தான் முதல் கார் … Read more

தேர்வு முடிவு பயத்தால் 12ஆம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை.!

தேர்வு முடிவு பயத்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் கொல்லக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் அறிவழகன். இவரது மகன் ஷீபாஸ்ரீ(வயது17). இவர் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருந்த நிலையில் வீட்டில் பெற்றோர்களிடம் தேர்வு சரியாக எழுதவில்லை என்றும் மதிப்பெண் குறைவாக வரும் என்றும் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார். இதையடுத்து நேற்று மாலையிலிருந்து ஷீபாஸ்ரீயை காணவில்லை என்று பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை வீட்டின் அருகில் … Read more

எம்ஜிஎம் குழுமம் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

எம்ஜிஎம் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் 400 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் சென்னை, விழுப்புரம், கோவை, புதுச்சேரியில் அந்த குழுமத்திற்கு சொந்தமான 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. Source link

டெல்டாவில் 8 மணல் குவாரிகளுக்கு அனுமதி: திமுக அரசு மீது அண்ணாமலை தாக்கு

சென்னை: டெல்டாவில் புதிதாக அனுமதி அளிக்கப்பட்டுள்ள 8 மணல் குவாரிகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். டெல்டா பகுதிகளில் புதிதாக 8 மணல் குவாரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் “காவிரி டெல்டா பகுதியில் 8 புதிய மணல் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது திமுக அரசு. தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திலேயே இந்த நிலைமை. இப்படி இயற்கை வளங்களை சூறையாடுவது தான் … Read more

கோர்ட் படியேறிய ஓ.பி.எஸ்; பொதுக் குழுவுக்கு தடையா? லேட்டஸ்ட் நகர்வுகள்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டுமென ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதிய கடிதத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். கடந்த 14 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று வலியுறுத்தியதில் இருந்தே அதிமுகவில் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் இடையே மோதல் வெடித்து … Read more

எருமப்பட்டி அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழப்பு.!

எருமப்பட்டி அருகே வாகனம் மோதி கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே வரதராஜபுரத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முத்தையா(53). இவர் சொந்த வேலை காரணமாக கஞ்சம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத வாகனம் முத்தையா மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த முத்தையாவை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு … Read more

பொதுக்குழுவை தள்ளி வைக்கவேண்டும்… இல்லை… பொதுக்குழு நிச்சயம் நடக்கும்…. பரபரப்புக்கு பஞ்சம் இல்லை..

அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், ஓபிஎஸ் தரப்பிலும், இபிஎஸ் தரப்பிலும் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுகவில் ஒற்றை தலைமை கோரிக்கை வலுத்துவரும் நிலையில், இன்றும், 7 வது நாளாக ஓபிஎஸ் தரப்பும், இபிஎஸ் தரப்பும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டன. பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை விடுத்துள்ள கடிதத்தை வைத்திலிங்கம் வெளியிட்டார். இபிஎஸ் தரப்பிலிருந்து சாதகமான பதில் வராவிட்டால் நீதிமன்றத்தையும் ,தேர்தல் ஆணையத்தையும் நாட முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் … Read more

புதுச்சேரி 10, +2 முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி: அமைச்சர் தகவல்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் 10, 12 தேர்வு முடிவுகளில் கிராமப்புற மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். தமிழகம் மற்றும் புதுவையில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை. தொற்று பரவல் குறைந்ததையடுத்து 2021-22ம் கல்வி ஆண்டில் பள்ளிகள் காலதாமதமாக திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்றன. இதையடுத்து, கடந்த மே 6ம் தேதி தொடங்கி 30ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வு முடிவு இன்று காலை … Read more

தமிழகத்தில் இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு ஆந்திரா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். அதன்படி தமிழகத்தில் 11 மாவட்டங்களில் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

10th, 12th தேர்வில் 100% தேர்ச்சி: தடைகளைக் கடந்து சாதிக்கும் தஞ்சை பார்வையற்றோர் பள்ளி

100% result by visually challenged students in class X and XII Exams: தஞ்சாவூர் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால், இப் பள்ளியில் கடந்த சில ஆண்டுகளாக கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை. ஏனைய … Read more