முதல் முறையாக தமிழில் 100க்கு 100 மதிப்பெண்.. சாதித்த திருச்செந்தூர் பள்ளி மாணவி!

தமிழகத்தில் முதல் முறையாக தமிழ் மொழி பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்து திருச்செந்தூர் பள்ளி மாணவி சாதனை. தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் நடைபெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. அதில் தமிழ் பாடத்தில் முதல் முறையாக ஒரு நூற்றுக்கு நூறு முழு மதிப்பெண் எடுத்து திருச்செந்தூரைச் சேர்ந்த மெட்ரிக் பள்ளி மாணவி சாதனைப்படைத்துள்ளார். ஆறுமுகநேரி தலைமை காவல் அதிகாரி செல்வ குமாரின் மகளான மாணவி துர்கா திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீ சங்கரா அகாடமி மெட்ரிக் … Read more

‘ராதிகா எனக்கு அம்மா இல்லை; ஆன்டி’: வரலட்சுமி சரத்குமார் அதிரடி

Varalaxmi Sarathkumar opens up relationship between Radhika: ராதிகா எனக்கு அம்மா இல்லை, அவர் என் அப்பாவின் இரண்டாவது மனைவி என வரலட்சுமி சரத்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார். நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். திரையில் சவாலான கேரக்டர்களை ஏற்று தைரியமாக நடித்து வரும் வரலட்சுமி, நிஜத்திலும் தைரியமான, வெளிப்படையான பெண்ணாக இருந்து வருகிறார். இதையும் படியுங்கள்: சாதிச்சுட்ட என அம்மா சொன்ன தருணம்… எஸ்.ஏ.சந்திரசேகர் நெகிழ்ச்சி வீடியோ … Read more

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழை.. சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.  இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்தில் 28 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி … Read more

அ.தி.மு.க.வில் வலுத்துள்ள ஒற்றைத் தலைமை முழக்கம்.. பல மாவட்டங்களில் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக அ.தி.மு.க.வினர் தீர்மானம் நிறைவேற்றம்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கம் வலுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக மாவட்டச் செயலாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாகையில், அதிமுக மாவட்ட செயலாளர் ஓ.எஸ்.மணியன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல், கட்சியை வலுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒற்றை தலைமை வேண்டும் என வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் வாணியம்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை அடுத்து பேட்டியளித்த அவர், … Read more

"அக்னி பாதைக்கு எதிராக விவரம் தெரியாதவர்களே போராடுகிறார்கள்" – மன்னார்குடி ஜீயர்

சேலம்: மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்து விவரம் தெரியாதவர்களே அதை எதிர்த்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். ராணுவ அதிகாரிகளோ, முன்னாள் ராணுவ வீரர்களோ இதுவரை அக்னி பாதை திட்டத்துக்கு எதிரான கருத்துகளை சொல்லவில்லை என்று மன்னார்குடி ஜீயர் தெரிவித்தார். சேலம், சின்னகடை வீதியில் உள்ள வேணுகோபாலசாமி கோயிலுக்கு வருகை புரிந்த மன்னார்குடி செண்டலங்கார சென்பக மன்னார் ராமானுஜ ஜீயர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “மத்திய அரசின் அக்னி பாதை திட்டம் குறித்த விவரம் … Read more

கைகள் இல்லை… தன்னம்பிக்’கை’ மட்டும்தான் – +2 தேர்வில் தேர்ச்சிபெற்ற கைவிடப்பட்ட மாணவி!

இரண்டு கைகள் இல்லாத போதும் தன்னம்பிக்கையுடன் படித்த மயிலாடுதுறையைச் சேர்ந்த  மாணவி 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார்.  பிறக்கும் போதே, இரண்டு கைகளும் இல்லாத குழந்தையான லட்சுமியை அவரது பெற்றோர் புறக்கணித்துள்ளனர். பின்னர் ஆதரவற்றோர் காப்பகத்தில் அவர் வளர்ந்துள்ளார்.  கைகள் இல்லாத போதிலும், மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் படித்துவந்த லட்சுமி தற்போது 12 ஆம் வகுப்பு தேர்வில் 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். அவரை காப்பக நிர்வாகிகள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி இனிப்பு … Read more

ஏன்… மெயின் ரோடு பக்கமா ஒதுங்கிட்டீங்களோ..?!

சமூக ஊடகங்களின் காலத்தில், அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்கு எதிர்வினையாற்றுபவர்கள் என்றால் மீம்ஸ் கிரியேட்டர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். அரசியல் மீம்ஸ்கள் நகரிகமான மொழியில் நகைச்சுவையாக அரசியல் அங்கதமாக இருந்தால் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, இபிஎஸ் பக்கமும் இல்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “ஏன்… … Read more

நாமக்கல்.! வாகனம் மோதியதில் பெண் உயிரிழப்பு.!

நாமக்கல் மாவட்டத்தில் வாகனம் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஓலப்பாளையம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி மாரியம்மாள்(55). இவர் கூலி வேலைக்காக எல்லைமேடு பகுதிக்கு சென்று விட்டு, வேலை முடிந்தபின் வீட்டிற்கு மோகனூர் பரமத்திவேலூர் நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மாரியம்மாள் மீது மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று உள்ளது. இதில் பலத்த காயமடைந்த மாரியம்மாளை அப்பகுதியில் இருந்தவர்கள் … Read more

சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு.!

சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமை மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சிறப்பு வாகனத் தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் கார் ஓட்டிய 67 பேர், இருசக்கர வாகனம் ஓட்டிய 197 பேர் உள்பட மொத்தம் 287 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும்: சீமான்

சென்னை: “மத்திய பாஜக அரசு, தற்போது பொதுப்பட்டியலில் உள்ள மின்துறையையும் யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதியின்றித் தனியாருக்குத் தாரைவார்க்க முயல்வது, மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் எதேச்சதிகார போக்கின் உச்சமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “புதுச்சேரி உள்ளிட்ட மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் சேவை … Read more