சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது வழக்கு பதிவு.!

சென்னையில், 2 நாட்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டிய 287 பேர் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சனி மற்றும் ஞாயிற்றுகிழமை மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய சிறப்பு வாகனத் தணிக்கையில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டனர். அப்போது மது போதையில் கார் ஓட்டிய 67 பேர், இருசக்கர வாகனம் ஓட்டிய 197 பேர் உள்பட மொத்தம் 287 மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Source link

புதுச்சேரி மின்வாரிய ஊழியர்களின் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி துணைநிற்கும்: சீமான்

சென்னை: “மத்திய பாஜக அரசு, தற்போது பொதுப்பட்டியலில் உள்ள மின்துறையையும் யூனியன் பிரதேச அரசுகளின் அனுமதியின்றித் தனியாருக்குத் தாரைவார்க்க முயல்வது, மாநில அரசுகளின் இறையாண்மையை பறிக்கும் எதேச்சதிகார போக்கின் உச்சமாகும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “புதுச்சேரி உள்ளிட்ட மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள யூனியன் பிரதேசங்களின் மின்துறையைத் தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவு கடும் அதிர்ச்சியளிக்கிறது. கோடிக்கணக்கான மக்களின் வரிப்பணத்தில் சேவை … Read more

ஒரு வாரமாக நீடிக்கும் அதிமுகவின் தலைமைக்கான யுத்தம் – தொடரும் ஆலோசனை

அதிமுகவின் தலைமைக்கான யுத்தம் ஒரு வாரமாக நீடித்து வரும் நிலையில், இன்றும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லங்களில் தனித்தனியே ஆலோசனைகள் நடைபெற்றன. அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

ஓ.பி.எஸ்-ஐ ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது – ஜெயக்குமார்

Jayakumar says no intention of sidelining O Pannerselvam in ADMK: அ.தி.மு.க.,வில் ஒற்றைத் தலைமை என்பது காலத்தின் கட்டாயம் என்றும், ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டும் எண்ணம் கிடையாது என்றும், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அ.தி.மு.க.,வில் கடந்த சில நாட்களாக ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ளது. அ.தி.மு.க பொதுக்குழு ஜூன் 23 ஆம் தேதி கூட உள்ள நிலையில், அந்த கூட்டத்திலேயே ஒற்றைத் தலைமை குறித்த முடிவெடுக்க காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. … Read more

வட தமிழ்நாடு….. முடிவு வெளியானதுமே களத்தில் இறங்கிய மருத்துவர் இராமதாஸ்.!

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி விகிதம் சற்று அதிகரித்துள்ள நிலையில், பத்தாம் வகுப்புக்கான தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதேபோல், தேர்ச்சி விகிதத்தில் வடக்கு மாவட்டங்கள் வழக்கம் போலவே இந்த ஆண்டும் கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலை அளிப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் கன்னியாகுமரி மாவட்டமும், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் … Read more

மின்சார காரின் முன்னோட்ட காட்சியை வெளியிட்ட ஓலா நிறுவனம்..

மின் ஸ்கூட்டர் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஓலா நிறுவனம், தங்களது மின்சார காரின் முன்னோட்ட காட்சியை வெளியிட்டுள்ளது. கிருஷ்ணகிரி அருகே தங்களது புதிய தொழிற்சாலை அமைய உள்ள இடத்தில் வாடிக்கையாளர் தின நிகழ்ச்சியை ஓலா நிறுவனம் நடத்தியது. நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, மின்சார காரின் தோற்றம் அடங்கிய வீடியோ காட்சி திரையிடப்பட்டது. தங்களது மின்சார காரை அடுத்தாண்டு ஓலா வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று கார் தொடர்பாக மேலும் பல தகவல்கள் அறிவிக்கப்பட … Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகள் பிளஸ் 2-வில் 86.53% தேர்ச்சி; 10-ம் வகுப்பில் 75.84% தேர்ச்சி 

சென்னை: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் 86.53 சதவீதமும், 10-ம் வகுப்பில் வகுப்பில் 75.84 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சி கல்வித் துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகிறது. இதில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வை 2478 மாணவர்கள், 3164 மாணவியர்கள் என மொத்தம் 5642 பேர் எழுதினார்கள். இதில் 1,975 மாணவர்கள், 2,907 மாணவியர்கள் என மொத்தம் 4882 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 86.53 … Read more

”பணம் செலுத்திய பிறகும் நோட்டீஸா?”..குடும்பத்துடன் நடிகர் ஹலோ கந்தசாமி போலீசில் புகார்!

கமுதி அருகே வங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை செலுத்திய பின்னரும் மீண்டும் கடன் தொகை செலுத்த நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த நடிகர் ஹலோ கந்தசாமி குடும்பத்தினர், மோசடியில் ஈடுபட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கவந்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் ‘களஞ்சியம்’ என்ற தனியார் அமைப்பு மூலம் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெருநாழி கிராமத்திலும் ஏழு மகளிர் சுய உதவி குழுக்கள் … Read more

இந்த படத்தில் இன்னொரு விலங்கு இருக்கு… 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க; நீங்களும் ட்ரை பண்ணுங்க

ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் … Read more

காஞ்சிபுரம்.! கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!

மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 15 வயது மகன் ரித்திக் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்கு ரித்திக் சென்றுள்ளான. அப்பொழுது அங்கிருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை … Read more