”பணம் செலுத்திய பிறகும் நோட்டீஸா?”..குடும்பத்துடன் நடிகர் ஹலோ கந்தசாமி போலீசில் புகார்!

கமுதி அருகே வங்கி மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கொடுக்கப்பட்ட கடன் தொகையை செலுத்திய பின்னரும் மீண்டும் கடன் தொகை செலுத்த நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சி அடைந்த நடிகர் ஹலோ கந்தசாமி குடும்பத்தினர், மோசடியில் ஈடுபட்ட நபர்மீது நடவடிக்கை எடுக்க எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கவந்தனர்.  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியில் ‘களஞ்சியம்’ என்ற தனியார் அமைப்பு மூலம் 50க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் பெருநாழி கிராமத்திலும் ஏழு மகளிர் சுய உதவி குழுக்கள் … Read more

இந்த படத்தில் இன்னொரு விலங்கு இருக்கு… 1% பேர்தான் கண்டுபிடிச்சிருக்காங்க; நீங்களும் ட்ரை பண்ணுங்க

ஆப்டிகல் இல்யூஷன் எப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரசியமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையை வெளிப்படுத்தி வருவதால் நெட்டிசன்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகிறார்கள். அதே நேரத்தில், எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தக்கூடியவை கிடையாது. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் உண்மையில் மிகவும் சவாலானவைகள். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் சவாலானது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் … Read more

காஞ்சிபுரம்.! கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.!

மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற பத்தாம் வகுப்பு மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். மாங்காடு அடுத்த மவுலிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது 15 வயது மகன் ரித்திக் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற கபடி போட்டியை பார்ப்பதற்கு ரித்திக் சென்றுள்ளான. அப்பொழுது அங்கிருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை … Read more

ஜூலை மாதம் தொடங்குகிறது மாணவியருக்கு ரூ.1000 வழங்கும் திட்டம்.. விவரங்களை பெற உத்தரவு..

அரசுப்பள்ளிகளில் படித்து, தற்போது உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்திற்காக தகுதியான மாணவிகளிடம் சான்றிதழ்களை பெற  உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், தகுதியான மாணவிகளிடம் இருந்து ஆதார் அட்டை, 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், வங்கிக்கணக்கு விவரம் உள்ளிட்டவற்றை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது.  Source link

லஞ்சம் கொடுத்து பெறுவது அல்ல அரசு பணி: சென்னை உயர் நீதிமன்றம் கருத்து

சென்னை: அரசுப் பணி நியமனம் என்பது தேர்வு நடைமுறைகளின் மூலம் பெற வேண்டுமே தவிர, லஞ்சம் கொடுத்து பெற முடியாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. அரசுத் துறைகளில் உயர் பதவிகளில் நியமனம் பெற்றுத் தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக ஜெகன்நாதன், இந்துமதி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்ததுடன், அவர்களின் … Read more

'நலமாகவே இருக்கிறேன்; பதற்றம் வேண்டாம்.. பணிகளைத் தொடர்கிறேன்' – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

”ஓய்வில் இருந்தாலும் பணிகளை முகாம் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டவாறே இருக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  ”சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், … Read more

மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்… துணை நகரங்கள் பணி ஜரூர்; சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னைக்கு அருகே மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்க்ளில் துணை நகரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் துணை நகரங்கள் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறத் தொடங்கியுள்ளது. சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வருவதால், ஏற்ப, சென்னையை ஒட்டிய பகுதிகளில், துணை நகரங்களை அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய 5 இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் ஜரூராக … Read more

பலாபழம் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்ஸ் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. மேலும், 2 பேருக்கு தீவிர சிகிச்சை.!

கடலுார் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் – பரணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மூத்த மகளான 8 வயதான இனியா, 6 வயது மகன் பரணிதரன் ஆகியோர் அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்துள்ளனர். இந்த நிலையில், தாய் பரணி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகிய மூவரும், நேற்று முன்தினம் மாலை வீட்டில் உணவுடன், பலா சுளை சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு கூல் ட்ரிங்ஸ் குடித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு சற்று நேரத்தில் மூவரும் … Read more

ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை.!

ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பட்டதாரியான பாண்டியன் என்பவர் மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாத நிலையில், தனது செலவிற்காக, செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில், ஆயிரத்து 500 ரூபாயை அவர் செலுத்தாததால், தொடர்ந்து மிரட்டல் விடுத்த கடன் செயலி நிறுவனம், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள், நண்பர்களின் … Read more

சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள், வழியோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் 49.50 அடி (878.50 மீட்டர்) அளவுக்கு நீரைத் தேக்கலாம். ஆனால், அணையின் பாதுகாப்பு காரணமாக 45 அடி உயரம் வரைக்கு … Read more