'நலமாகவே இருக்கிறேன்; பதற்றம் வேண்டாம்.. பணிகளைத் தொடர்கிறேன்' – முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

”ஓய்வில் இருந்தாலும் பணிகளை முகாம் அலுவலகத்தில் இருந்து மேற்கொண்டவாறே இருக்கிறேன்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-  ”சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று (20-6-2022) ராணிப்பேட்டை மாவட்டத்திலும், … Read more

மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம்… துணை நகரங்கள் பணி ஜரூர்; சிறப்பு அதிகாரிகள் நியமனம்

சென்னைக்கு அருகே மீஞ்சூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்க்ளில் துணை நகரங்கள் அமைப்பதற்கான பணிகளுக்காக சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் துணை நகரங்கள் அமைக்கும் பணிகள் ஜரூராக நடைபெறத் தொடங்கியுள்ளது. சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகரித்து வருவதால், ஏற்ப, சென்னையை ஒட்டிய பகுதிகளில், துணை நகரங்களை அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது. அதன்படி, சென்னைக்கு அருகே உள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மீஞ்சூர், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய 5 இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பணிகள் ஜரூராக … Read more

பலாபழம் சாப்பிட்டுவிட்டு கூல் ட்ரிங்ஸ் குடித்த சிறுவன் உயிரிழப்பு.. மேலும், 2 பேருக்கு தீவிர சிகிச்சை.!

கடலுார் மாவட்டத்தில் உள்ள புவனகிரி அருகே கஸ்பா ஆலம்பாடி பகுதியில் வேல்முருகன் – பரணி தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுடைய மூத்த மகளான 8 வயதான இனியா, 6 வயது மகன் பரணிதரன் ஆகியோர் அருகில் உள்ள பள்ளியில் படித்துவந்துள்ளனர். இந்த நிலையில், தாய் பரணி மற்றும் இரண்டு பிள்ளைகள் ஆகிய மூவரும், நேற்று முன்தினம் மாலை வீட்டில் உணவுடன், பலா சுளை சாப்பிட்டுள்ளனர். அதன்பிறகு கூல் ட்ரிங்ஸ் குடித்துள்ளனர். ஆனால், அதன்பிறகு சற்று நேரத்தில் மூவரும் … Read more

ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை.!

ஆன்லைன் கடன் செயலி நிறுவனம், புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டதால் இளைஞர் தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பட்டதாரியான பாண்டியன் என்பவர் மூன்று மாதங்களாக பணிக்கு செல்லாத நிலையில், தனது செலவிற்காக, செயலி மூலம் ஐந்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இதில், ஆயிரத்து 500 ரூபாயை அவர் செலுத்தாததால், தொடர்ந்து மிரட்டல் விடுத்த கடன் செயலி நிறுவனம், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, உறவினர்கள், நண்பர்களின் … Read more

சிறுவாணி அணையில் இருந்து எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

கோவை: சிறுவாணி அணையில் இருந்து கோவையின் குடிநீர் விநியோகத்துக்காக எடுக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. கோவையின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணை, கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. சிறுவாணி அணையிலிருந்து பெறப்படும் குடிநீர் மாநகராட்சியின் 30-க்கும் மேற்பட்ட வார்டுகள், வழியோர கிராமங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. சிறுவாணி அணையில் 49.50 அடி (878.50 மீட்டர்) அளவுக்கு நீரைத் தேக்கலாம். ஆனால், அணையின் பாதுகாப்பு காரணமாக 45 அடி உயரம் வரைக்கு … Read more

காலையில் வெயில்.. மாலையில் தூரல்.. மீண்டும் சென்னையை குளிர்வித்த மழை

சென்னையில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் போரூர், கொரட்டூர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பாரிமுனை, கிண்டி, கோடம்பாக்கம், அண்ணா நகர், சாலிகிராமம், கோயம்பேடு, அம்பத்தூர், நொளம்பூர், மதுரவாயல், வானகரம், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது. கடந்த வாரங்களில் வெயில் வாட்டியதைத் தொடர்ந்து நேற்றிரவு சில இடங்களில் இடி மின்னலுடன் மழைபெய்தது. இந்நிலையில் இன்று மதியம் முதலே சென்னையில் பல இடங்களில் மேகமூட்டத்துடன் காணப்பட்டதையடுத்து தற்போது மழைபெய்து வருகிறது. அதேபோல், திருவள்ளூர், … Read more

அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் எதிரொலி; பிளாட் பார்ம் டிக்கெட்டை நிறுத்தியது தெற்கு ரயில்வே

Platform ticket Cancelled due to protest against Indian army’s Agnipath Recruitment Scheme: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருவதால், பிளாட்பார்ம் டிக்கெட் வழங்குவதை தென்னக ரயில்வே தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இந்திய ஆயுதப்படை சேர்க்கைக்கான அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் மட்டும் பணி செய்ய முடியும், ஓய்வூதியம் கிடையாது என்பதால் இளைஞர்கள் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து … Read more

சசிகலாவுடன் இணைய.. சம்மதம் தெரிவித்த ஓ.பி.எஸ் – சசிகலா ஆதரவாளர் ஆவின் வைத்தியநாதன்.!

ஒற்றை தலைமை விவகாரம் அதிமுகவில் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுகவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என்று பலரும் அதையே விரும்புவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், அதிமுகவில் 90% பேர் அதிமுகவில் ஒற்றை தலைமையாக எடப்பாடி கே பழனிசாமி தான் வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில், சசிகலா ஆதரவாளர்களுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். சசிகலாவின் பாதையில் பயணிக்க தயாராக இருப்பதாக ஓபிஎஸ் … Read more

கோவையில் 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது.!

கோவையில், 3 கிலோ போலி நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். சேரன்மாநகர் இந்தியன் வங்கியில், மேலாளராக பணியாற்றிய பிரேம்குமார் மற்றும் உதவி மேலாளராக இருந்த உஷா ஆகியோர் கடந்த ஆண்டு தங்கமூலாம் பூசப்பட்ட பித்தளை நகைகளை அடகுவைத்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இது தெரியவந்ததையடுத்து, வங்கியின் மண்டல மேலாளர் சுப்பிரமணியன் கோவை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகாரளித்தார். விசாரணையில் பிரேம்குமார், உஷா   உட்பட இந்த விவகாரத்தில் 12 பேருக்கு … Read more

சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் மதுரையைக் கடந்து சென்ற ரயில்கள் தாமதம்

மதுரை: மதுரை ரயில் நிலையத்தில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் திடீரென தடம் புரண்டதால் மதுரையைக் கடந்து செல்லும் ரயில்கள் சற்று தாமதமாக சென்றன. மதுரை ரயில் நிலையத்தில் இருந்து அசாம், கர்நாடகா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களுக்கு சரக்கு ரயில்கள் மூலம் டிராக்டர்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. இதன்படி, மதுரை வாடிப்பட்டி பகுதியில் இருந்து வடமாநிலத்திற்கு டிராக்டர்களை ஏற்றிச் செல்ல தயாராக 24 பெட்டிகளுடன் கூடிய சரக்கு ரயில் ஒன்று கூடல்நகர் … Read more