புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் உயர் கல்வி வாய்ப்பு: முதல்வர் ரங்கசாமி உறுதி

புதுச்சேரி: “பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி பயில வாய்ப்புகளை அரசு உருவாக்கும். இடங்கள் அதிகரிக்கப்படும்” என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ”பிளஸ்2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள். மாணவர்கள் தேர்ச்சிக்கு காரணமாக இருந்த கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இணைந்து பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை கொடுத்து வருகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் … Read more

’OPS சுமுகமாக போகலாம்னு இருக்காரு.. ஆனால் EPSதான் விட்டுக்கொடுக்க மாட்றாரு’ – புகழேந்தி

சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிகழ வாய்ப்பு இருப்பதால் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி தரக்கூடாது என்று காவல்துறை டி.ஜி.பியிடம் ஓ.பி.எஸ் தரப்பு மனு. இ.பி.எஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட திட்டமிட்டிருப்பதாக குற்றச்சாட்டு. அ.தி.மு.கவில் ஒற்றை தலைமை விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், வருகிற 23ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறுவதாக அதன் தலைமை கழகம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ஓபி.எஸ் ஆதரவாளரும், முன்னாள் அ.தி.மு.க நிர்வாகியுமான புகழேந்தி, வழக்கறிஞர் சதீஷ், எம்.ஜி.ஆர் மன்ற வடசென்னை … Read more

நூடுல்ஸ் சாப்பிட்டு இறந்த சிறுவனின் உடலில் காயங்கள்; மரணத்தில் புதிய சர்ச்சை

திருச்சி தாளக்குடி கிராமத்தை சேர்ந்த சேகர்-மகாலட்சுமி தம்பதியின் மகன் சாய் தருண். 2 வயது நிரம்பிய இவன் படும் சுட்டியாகவே இருந்திருக்கின்றான். இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு மகாலட்சுமி குழந்தைக்கு நூடுல்ஸ் உணவு தயாரித்து கொடுத்துள்ளார். மீதமிருந்த நூடுல்ஸை ப்ரிட்ஜ்ஜில் வைத்த அவர் மறுநாள் காலையும் அதனை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட கொடுத்ததாக தெரிகிறது. இதற்கிடையே குழந்தைக்கு உடலில் அலர்ஜி காரணமாக சிறுசிறு புண்கள் ஏற்பட்டு இருந்தன. அதற்கு மகாலட்சுமி உரிய சிகிச்சை அளித்து வந்த … Read more

மழை நீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்.!

மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி மேயர் திருமதி. பிரியா அறிவுறுத்தி உள்ளார். சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.30.41 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை மேயர் திருமதி ஆர்.பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 2,071 கி.மீ. நீளமுள்ள 8,835 மழைநீர் வடிகால் கட்டமைப்புகள், 48.80 கி.மீ. … Read more

பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம்.. 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே, பலாப்பழம் சாப்பிட்டு, குளிர்பானம் குடித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். ஆலம்பாடி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் என்பவரது குடும்பத்தினர், உணவுடன் பலாப்பழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் 2 குழந்தைகள் உள்பட 3 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். இதனிடையே, … Read more

‘நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை 80,000 பேருக்கு சிகிச்சை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: ‘இன்னுயிர் காப்போம் – நம்மைக் காக்கும் 48’ திட்டத்தில் இதுவரை 80 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 திட்டத்தின்கீழ் சிகிச்சைப் பெற்றுவரும் 80 ஆயிரமாவது பயனாளியை இன்று சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். இதன்பிறகு அமைச்சர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கரோனா காலத்தல் முதலமைச்சர் பல்வேறு மருத்துவத் … Read more

"அண்ணன் இபிஎஸ்க்கு உறுதுணையாக இருப்பேன்; மக்கள் ஆதரவு அவருக்கே" – கோகுல இந்திரா

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா செய்தியாளர்கள் சந்திந்தார். அப்போது தனது ஆதரவு அண்ணன் இபிஎஸ்- க்குத்தான் என்று தெரிவித்தார்.  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எந்த வழக்கு வந்தாலும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம். தொண்டர்களின் நலன் கருதி ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் என நம்பிக்கையுள்ளது என்று தெரிவித்தார். Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

உலகக் கோப்பை டி20: மிடில் ஆர்டரில் புதிய நம்பிக்கை இந்த இருவர்!

பொதுவாக, பெங்களூரு நகரில் இந்த நாட்களில் ஆண்டுதோறும் மழைப் பொழிவு இருக்கும். அதுவும் குறிப்பாக மாலை நேரங்களில், சாரல் மழை அல்லது கன மழை பெய்யும். அவ்வகையில் நேற்றைய தினமும் மழை பெய்தது. இம்முறை சற்றே வெளுத்து வாங்கியது. இதனால், பெங்களூரு நகர வாசிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையேயான 5வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பார்க்க, சின்னசாமி ஸ்டேடியத்தில் குவிந்திருந்த மக்கள் முகத்தில் கோபத் தணல் கொழுந்து விட்டு எரிந்தது. ஏன்னென்றால், … Read more

அரசு கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.! எப்படி விண்ணப்பிப்பது… வெளியானது அறிவிப்பு.! 

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngesa.in / www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம்.  இணையதச வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் 22.06.2022. விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 07.07-2022. இணையதன வாயிலாக விண்ணப்பிக்க இயவாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் … Read more

10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி..

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களில் 85 புள்ளி 8 விழுக்காட்டினரும், மாணவியரில் 94 புள்ளி 3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்பட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 97 புள்ளி 2 விழுக்காட்டினரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 97 புள்ளி ஒரு விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 94 புள்ளி 8 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஒருவர் மட்டும் 100 … Read more