ஓய்வில்லை நமக்கு, முதலிடமே இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
தாம் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மக்கள் பணியை தொடர்வேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இரண்டு நாட்கள் ஓய்வில் இருப்பதாகவும், தமது உடல் நிலை குறித்து பதற்றப்படும் அளவில் ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓய்விலும் தாம் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதாவும், சென்னையில் நேற்றிரவு பெய்த மழையின் பாதிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link