‘தலைமையேற்று கழகத்தை வழிநடத்த வாருங்கள்‘ – மதுரையில் ஓபிஎஸ் ஆதரவு போஸ்டர்

அதிமுக உண்மை தொண்டர்கள் என்ற பெயரில் ஒபிஎஸ்-க்கு ஆதரவாக மதுரை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தனித்தனியாக தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவின் தலைமைப் பொறுப்பு யாருக்கு என்பதில் இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மீண்டும் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் … Read more

அதிகரிக்கும் கொரோனா.. சிகிச்சைக்குப் பின் குணமாகும் நபர்களின் எண்ணிக்கையில் கடும் சரிவு!

புதிய கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழகத்தில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சனிக்கிழமை வரை, மாநிலத்தில் 16,000 க்கும் குறைவான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன மற்றும் 600 க்கும் குறைவானவர்கள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தனர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் சுமார் 19,500 மாதிரிகள் (22% அதிகரிப்பு) பரிசோதிக்கப்பட்டன. இதில், மாநிலம் முழுவதும் 692 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. சென்னையில், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 300-ஐத் தாண்டியது, … Read more

பெங்களூர் புள்ளியால் ஓபிஎஸ் மீது எழுந்த குற்றச்சாட்டு., நேற்று என்ன நடந்தது.?! 

ஓ பன்னீர் செல்வத்தை புகழேந்தி சந்தித்தது ஏன் என்பது குறித்து, அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பதிலளித்துள்ளார்.  அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோர் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை அவரது இல்லத்தில் நேற்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி சந்தித்து பேசினார்.  இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, ஓ … Read more

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விற்க வேதாந்தா குழுமம் முடிவு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை விற்பனை செய்வதாக வேதாந்தா குழுமம் சார்பில் நாளிதழ்களில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா குழுமம் வழக்குகளை நடத்தி வந்த நிலையில், ஆலையை விற்பனை செய்ய இன்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஆலையை வாங்குவதற்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனிடையே, மும்பை பங்குச்சந்தையில், வேதாந்தா குழுமத்தின் பங்கு விலை 9 சதவீதம் வரை சரிந்துள்ளது. Source link

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூடத்திற்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் அமைச்சரும் , திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23-ம் தேதி வானகரத்தில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொள்கின்றனர். மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களான 2,500 பேர் இதில் பங்கேற்கவுள்ளனர். எனவே, இந்தக் … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம்: போலீஸ் பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பி.பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் இந்தக் கூட்டத்திற்கு … Read more

பப்பாளி, பால், வாழைப்பழம்.. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆறு சூப்பர் உணவுகள்!

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, பிரசவத்திற்குப் பிறகும் ஆரோக்கியமான உணவு புதிய தாய்மார்களுக்கு அவசியம். சத்தான உணவுகளை உட்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கு வலிமையை மீட்டெடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், உகந்த ஊட்டச்சத்துக்காக புதிய தாயின் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பகிர்ந்துள்ளார். “பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும், இதனால் குழந்தை … Read more

#BigBreaking || அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பகிரங்கமாக கேட்ட ஓபிஎஸ்.! என்ன இப்படி சொல்லிட்டீங்க… 

பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வருகிற 23-ஆம் தேதிநடைபெறக்கூடிய பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக, சற்றுமுன்பு வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், ஒற்றைத் தலைமை குறித்து தன்னிச்சையாக பேசிவருவது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடிபழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் … Read more

10-ம் வகுப்பு முடிவுகள் | தமிழகத்தில் 42,519 பேர் தேர்வு எழுதவில்லை; 2019-ஐ விட 22,000 அதிகம்

சென்னை: 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை 42,000 மாணவர்கள் எழுதுவில்லை என்றும், இது 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் … Read more

வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த காட்டு யானை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து சரக்கு வாகனத்தின் முன்பிருந்த பூமாலையை காட்டுயானை பறித்துச் சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தமிழகம் கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை … Read more