அதிமுக பொதுக்குழு கூட்டம்: போலீஸ் பாதுகாப்புக் கோரி நீதிமன்றத்தில் மனு

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க காவல்துறைக்கு உத்தரவிடக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக செயலாளருமான பி.பெஞ்சமின் தாக்கல் செய்துள்ள மனுவில், வரும் 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதலமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏக்கள். கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் என 2,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் இந்தக் கூட்டத்திற்கு … Read more

பப்பாளி, பால், வாழைப்பழம்.. பாலூட்டும் தாய்மார்களுக்கு ஆறு சூப்பர் உணவுகள்!

கர்ப்ப காலத்தில் மட்டுமல்ல, பிரசவத்திற்குப் பிறகும் ஆரோக்கியமான உணவு புதிய தாய்மார்களுக்கு அவசியம். சத்தான உணவுகளை உட்கொள்வது பாலூட்டும் தாய்மார்களுக்கு வலிமையை மீட்டெடுக்க உதவுகிறது, அதே நேரத்தில் புதிதாகப் பிறந்த குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா, இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவில், உகந்த ஊட்டச்சத்துக்காக புதிய தாயின் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பகிர்ந்துள்ளார். “பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை வழங்க வேண்டும், இதனால் குழந்தை … Read more

#BigBreaking || அதிமுகவின் ஒற்றை தலைமை குறித்து பகிரங்கமாக கேட்ட ஓபிஎஸ்.! என்ன இப்படி சொல்லிட்டீங்க… 

பொதுக்குழுவுக்கு சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கும் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், வருகிற 23-ஆம் தேதிநடைபெறக்கூடிய பொதுக்குழு கூட்டத்தை தள்ளிவைக்க வேண்டும் என்று, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே பழனிசாமிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளதாக, சற்றுமுன்பு வைத்தியலிங்கம் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார். அந்த கடிதத்தில், ஒற்றைத் தலைமை குறித்து தன்னிச்சையாக பேசிவருவது கட்சிக்குள் கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக எடப்பாடிபழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் … Read more

10-ம் வகுப்பு முடிவுகள் | தமிழகத்தில் 42,519 பேர் தேர்வு எழுதவில்லை; 2019-ஐ விட 22,000 அதிகம்

சென்னை: 2022-ம் ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வை 42,000 மாணவர்கள் எழுதுவில்லை என்றும், இது 2019-ம் ஆண்டை விட 22,000 அதிகம் என்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் தேர்வெழுதிய 9 லட்சத்து 12 ஆயிரத்து 62 பேரில், 8 லட்சத்து 21 ஆயிரத்து 994 பேர் தேர்ச்சி பெற்றனர். குறிப்பாக, 6,016 மாற்றுத் திறன் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 5,424 பேர் … Read more

வாகனங்களை வழிமறித்து அட்டகாசம் செய்த காட்டு யானை: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

ஆசனூர் அருகே வாகனங்களை வழிமறித்து சரக்கு வாகனத்தின் முன்பிருந்த பூமாலையை காட்டுயானை பறித்துச் சென்றதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட ஆசனூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இந்த வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடகம் இரு மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை தமிழகம் கர்நாடக எல்லையில் காரப்பள்ளம் சோதனைச்சாவடி அருகே வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டுயானை, தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை … Read more

கடலில் காற்றாலை மின் உற்பத்தி.. ஸ்காட்லாந்து பயணம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு!

கடலில் காற்றாலை மின் உற்பத்தி சம்மந்தமாக 5 நாள் பயணமாக ஸ்காட்லாந்து செல்வதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். “மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி அமைச்சர் செந்தில்பாலாஜி, ஞாயிற்றுக்கிழமை (ஜூன்;20) அண்ணா சாலை மின்சார வாரிய அலுவலகத்தில் உள்ள மின்னகம் மையத்தை நேரில் ஆய்வு செய்தார். அப்போது மின்னகம் மேலும் சிறப்பாக செயல்பட துறை சார்ந்த அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் செந்தில் பாலாஜி … Read more

தாயை பயமுறுத்த நினைத்த மகன்… கடைசியில் நேர்ந்த அவலம்…!

தாயை மிரட்டுவதற்காக பிளேடால் கழுத்தை அறுத்து கொண்ட இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் பரவை அருகே உள்ள AIBEA காலனி 4-வது தெருவைச் சேர்ந்தவர் ரயில்வே ஊழியர் அழகர்சாமி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் சரவண விஷால் என்ற மகன் உள்ளார். கல்லூரி படிப்பை முடித்த அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார்.  இந்நிலையில் சம்பவத்தன்று அவரின் தாயை பயமுறுத்துவதற்காக அவர் கழுத்தை அறுத்து கொள்ள போவதாக வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அதன் பின் குளியல் … Read more

மதுரை ரயில்நிலையத்தில், சரக்கு ரயில் தரம்புரண்டு விபத்து…!

மதுரை ரயில்நிலையத்தில், டிராக்டர்களை ஏற்றி செல்ல வந்த சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. தூத்துக்குடியில் இருந்து மதுரை வந்த சரக்கு ரயிலின் மையப்பகுதியில் இருந்த 2 பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், 2 மணி நேர மீட்பு பணிக்கு பின்னர் ரயில் போக்குவரத்து சீரானது. Source link

12 ஆம் வகுப்பு தேர்வு முடிவு | அரசுப் பள்ளிகளில் 89.06% தேர்ச்சி: 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: 12 ஆம் வகுப்பு தேர்வில் அரசுப் பள்ளிகளில் 89.06 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. 246 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு பெற்றள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பில் தேர்வெழுதிய மாணவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 6 ஆயிரத்து 277 பேர், இதில் மாணவியர் 4 லட்சத்து 21 ஆயிரத்து 622, மாணவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 84 ஆயிரத்து 655. தேர்ச்சிப் பெற்றவர்கள் 7 லட்சத்து … Read more

வெளியானது 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்! 93.79% பேர் தேர்ச்சி!

கொரோனா காரணமாக கடந்த கல்வியாண்டில் வகுப்புகள் காலதாமதமாக தொடங்கியதால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் மே மாதம் நடத்தப்பட்டன. இந்த இரு தேர்வுகளையும் எழுதிய மாணவர்களின் விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் முடிவுகள் வெளியிடப்பட்டன. 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதிய நிலையில் 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி சதவிகிதம் 93.76% ஆகும். பிளஸ் 2 மற்றும் 10 ஆம் … Read more