10ஆம் வகுப்புத் தேர்வு முடிவு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி..

பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்ட நிலையில், தேர்வு எழுதியோரில் 90 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவர்களில் 85 புள்ளி 8 விழுக்காட்டினரும், மாணவியரில் 94 புள்ளி 3 விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகப்பட்சமாகக் கன்னியாகுமரி மாவட்டத்தில் 97 புள்ளி 2 விழுக்காட்டினரும், பெரம்பலூர் மாவட்டத்தில் 97 புள்ளி ஒரு விழுக்காட்டினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்ப் பாடத்தில் 94 புள்ளி 8 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஒருவர் மட்டும் 100 … Read more

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடக்கும்: கே.பி.முனுசாமி உறுதி

சென்னை: “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக பொதுக்குழுவில் கலந்துகொள்வார். கருத்துகளைச் சொல்வார். பொதுக்குழு என்ன முடிவு எடுக்கிறதோ, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், இங்கு இருக்கின்ற அனைவரும் ஏற்றுக்கொள்வோம்” என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார். அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “வரும் 23.6.2022 அன்று அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டப்பட வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் கட்சியின் தலைமைக்கழக நிர்வாகிகள் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் … Read more

வெளுத்து வாங்கிய கனமழை முதல் தேர்வு முடிவுகள் வரை…. இன்றைய முக்கியச் செய்திகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அத்துடன் பல இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள். தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பதிவு இன்று தொடங்குகிறது. அக்னிபாத் திட்டம் திரும்பப் பெறப்பட மாட்டாது என ராணுவம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. வன்முறையில் … Read more

மின்னும் முகம் வேண்டுமா? ஹோம்மேட் டோனர் வீட்டிலேயே எப்படி செய்வது?

உங்கள் தினசரி வேலைகளுக்கு இடையில் ஒவ்வொரு நாளும், அவசியம் கடைபிடிக்க வேண்டிய எளிய காலை தோல் பராமரிப்பு பழக்கம் இங்கே உள்ளது. அதற்கு பெரிதாக செலவு செய்ய வேண்டிய தேவையில்லை. ரோஸ் வாட்டர், கற்றாழை மட்டும் போதும். இயற்கையான ஹோம்மேட் டோனர் நீங்களே வீட்டில் செய்யலாம்.  இது உங்கள் முகத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் மாற்றும். ரோஸ்வாட்டர், கற்றாழை கொண்டு செய்யப்படும் இந்த ஹோம்மேட் டோனர், உணர்திறன் வாய்ந்த சருமத்தில், முகப்பரு வருவதை தடுக்கவும், வீக்கம், … Read more

#BigBreaking || எடப்பாடி கே பழனிசாமிக்கு செக்… சற்றுமுன் நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்.!

எடப்பாடி பழனிசாமிக்கு ஓ பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகிற 21-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சூரியமூர்த்தி என்பவர் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரணை செய்த … Read more

ஓய்வில்லை நமக்கு, முதலிடமே இலக்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தாம் நலமாக உள்ளதாகவும், ஓரிரு நாட்களில் மக்கள் பணியை தொடர்வேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், லேசான காய்ச்சல் காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில், இரண்டு நாட்கள் ஓய்வில் இருப்பதாகவும், தமது உடல் நிலை குறித்து பதற்றப்படும் அளவில் ஒன்றும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். ஓய்விலும் தாம் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதாவும், சென்னையில் நேற்றிரவு பெய்த மழையின் பாதிப்புகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Source link

12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் | பெரம்பலூர் முதலிடம்; கடைசி இடத்தில் வேலூர்!

சென்னை: 12-ம் வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் பெரம்பலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. 97.27 சதவீதத்துடன் விருதுநகர் 2-வது இடத்தையும், 97.02 சதவீதத்துடன் ராமநாதபுரம் 3வது இடத்தையும் பிடித்துள்ளது. 86.69 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம் கடைசி … Read more

தாம்பரம்: காணாமல்போன வயதான பெண் வனப்பகுதியில் எலும்புக் கூடாக மீட்பு

தாம்பரம் அருகே காணாமல்போன வயதான பெண் வனப்பகுதியில் எலும்புக் கூடாக மீட்கப்பட்டார். கடந்த மாதம் 26ஆம் தேதி ஏஞ்சலின் என்பவர் தனது தாயார் எஸ்தர் (55) என்பவரை காணவில்லை என சேலையூர் காவல் நிலையத்தில புகார் கொடுத்திருந்தார். இந்நிலையில், தாம்பரம் அடுத்த சேலையூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரபாக்கம் வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காடு பகுதியில் பெண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் சேலையூர் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு … Read more

இ.பி.எஸ்-க்கு ஓ.பி.எஸ் அவசர கடிதம்: பொதுக்குழுவை தள்ளிவைக்க கோரிக்கை

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், வரும் 23-ந் தேதி நடைபெற உள்ள கட்சி பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்குமாறு ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதிமுகவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு பொதுச்செயவலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஒருவாககப்பட்டு இரட்டை தலைமையில் கட்சி இயங்கி வந்தது. இதில் ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி செயல்பட்டு வந்தனர். இந்நிலையில் … Read more

#BigBreaking || திட்டமிட்டபடி நடைபெறுமா அதிமுக பொதுக்குழு கூட்டம்… வெளியான அதிகாரபூர்வமான அறிவிப்பு.!

வருகிற 23ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டப்படி நடக்கும் என்றும், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாவும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள சென்னை வானகரம் திருமண மண்டபத்தில் ஆய்வு மேற்கொண்ட கேபி முனுசாமி, சி வி சண்முகம், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், உதயகுமார், தங்கமணி, எஸ் பி வேலுமணி உள்ளிட்டோர் பின்னர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது, “வருகின்ற 23ஆம் … Read more