உண்​மையை பேசிய கூட்டணி கட்சி தலைவரை மிரட்டுவது அரசியல் அறமா? திமுக​வுக்கு தமிழக பாஜக கண்டனம்

சென்னை: உண்மையை பேசும் கூட்​ட​ணிக் கட்சித் தலைவரை மிரட்டு​வது​தான் அரசியல் அறமா என திமுக​வுக்கு, தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்​ளது. பாஜக மாநில செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிரசாத் வெளி​யிட்​டுள்ள அறிக்கை: சிந்து சமவெளி நாகரிகம் குறித்​தும், தமிழர் தம் பெரு​மையை போற்றும் கீழடி நாகரிகம் குறித்​தும் பெரு​மையோடு பேச வேண்டிய கருத்​தரங்​கில், சம்பந்தமே இல்லாமல் திமுக அரசு குறித்து முதல்வர் ஸ்டா​லின் பெரு​மையோடு பேசுவது வருத்​தம் தருகிறது. தமிழகத்​தில் திமுக ஆட்சிக் கட்டிலில் அமரும்போதெல்​லாம் வரலாற்​றைத் திருத்​திப் … Read more

மம்தா, காதர் மொகை​தீன் பிறந்த நாள்: முதல்வர் வாழ்த்து

சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகை​தீன் ஆகியோ​ருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின் நேற்று பிறந்த நாள் வாழ்த்து தெரி​வித்​துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய யூனியன் முஸ்​லீம் லீக் தேசியத் தலைவர் கே.எம்​.​காதர் மொகைதீன் ஆகியோர் நேற்று தங்களது பிறந்த நாளை கொண்​டாடினர். இதையொட்டி சமூக வலைத்​தளத்​தில் முதல்வர் மு.க.ஸ்​டா​லின் வெளி​யிட்​டுள்ள வாழ்த்​துச் செய்தி​யில் கூறி​யிருப்​ப​தாவது: மேற்கு வங்க முதல்வர் மமதா … Read more

2025 பொங்கலுக்கு மாஸான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

Pongal Holiday: ஜனவரி 14 பொங்கல் விழா வரவுள்ள நிலையில், ஜனவரி 17ம் தேதி கூடுதல் விடுமுறையை அரசு அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களை மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

‘‘உழைக்கும் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன’’ – திராவிட கட்சிகள் மீது சிபிஎம் விமர்சனம்

சென்னை: தமிழகத்தில் அரைநூற்றாண்டாக ஆட்சி செய்யும் திராவிட கட்சிகள் சமூக சீர்திருத்தங்களில் சாதித்தன; ஆனால் உழைக்கும் மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த தவறிவிட்டன என்று சிபிஎம் விமர்சித்துள்ளது. இதுகுறித்து இன்று இக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள், நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாற்று பாலினத்தவர் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அனைவரின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு இடதுசாரி கொள்கைகளே சரியான மாற்றாக அமைய முடியும். சமூகத்தின் மேல் தட்டில் இருக்கும் ஒரு சிறு … Read more

கிங்ஸ்டன் கல்லூரியில் 44 மணி நேர சோதனை நிறைவு: ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் சென்ற அதிகாரிகள்

வேலூர்: காட்பாடி கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை 44 மணி நேரத்துக்கு பிறகு முடிவுற்றது. நள்ளிரவில் ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகளுடன் 8 கார்களில் அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். அமைச்சர் துரைமுருகன் வீடு, கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் 3-ம் தேதி காலை சோதனையில் ஈடுபட்டனர். இதில், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்ட 2 இடங்களில் நடைபெற்ற 8 … Read more

மாநில செயலாளர் குற்றாலநாதனை உடனே விடுவிக்க இந்து முன்னணி வலியுறுத்தல்

சென்னை: “இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் கைது செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்படுகிறது” என அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் கண்டித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “கடந்த நவம்பர் 25 ஆம் தேதி நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அவரின் சம்மதமும் அவருடைய குடும்பத்தாரின் ஒப்புதலும் இல்லாமலேயே கருத்தடை சாதனமான காப்பர் டி-யைப் பொருத்தியுள்ளனர். … Read more

தமிழகத்தில் அறநிலைய துறையை கலைக்க வேண்டும்: முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: தமிழகத்தில் கோயில்களை கண்டுகொள்ளாத அறநிலையத் துறையை கலைக்க வேண்டும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் வலியுறுத்தியுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் கோயிலுக்கு நேற்று வந்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்தில் பழமையான கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் கைவிடப்பட்ட நிலையில் உள்ளன. அங்குள்ள சிற்பங்கள் பாதுகாக்கப்படவில்லை. வழிபாடுகூட நடத்தப்படாமல் உள்ளன. கோயில்கள் மூலம் அறநிலையத் துறை ஆண்டுக்கு ரூ.656 கோடி வரி வசூலிக்கிறது. மத்திய தொல்லியல் துறை மூலம் நாடு … Read more

நீலகிரி மாவட்டத்தில் தோடர் பழங்குடிகளின் மொற் பர்த் பண்டிகை கோலாகலம்

உதகை: “எங்கள் வாழ்வு வளம் பெற வேண்டும், நம் மக்கள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும், எங்கள் எருமைகள் விருத்தி அடைய வேண்டும்” என இறைவனை வேண்டி மொற் பர்த் பண்டிகையை கொண்டாடினர் தோடரின பழங்குடிகள். நீலகிரியில் குரும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர், தோடர், கோத்தர் என ஆறு பண்டைய பழங்குடிகள் வசித்து வருகின்றனர். இதில் தோடரின மக்கள் உதகை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் தங்களுடைய மந்துகளில் வசிக்கின்றனர். மொத்தமுள்ள 65 மந்துகளில் மூவாயிரம் தோடர்கள் … Read more

‘‘அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி’’ – ஹெச். ராஜா விமர்சனம்

மதுரை: அதிகளவில் போதைப் பொருள் கடத்தும் நபர்களுக்கு திமுகவில் கட்சிப் பதவி வழங்கப்படுகிறது என பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா விமர்சித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் போதை பழக்கம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக செனட் உறுப்பினர் துணை முதல்வர் உதயநிதி இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் அரசே மதுபானம் விற்று வரும் சூழலில் தமிழக முதல்வர் போதைக்கு இடம் கொடுக்காதீர்கள் … Read more

பாஜக நிர்வாகி கைது: சாலை மறியலில் தொண்டர்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு – பழனியில் பரபரப்பு

Tamil Nadu News: மதுபான கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்தது, பணியாளர்களை தாக்கியது உள்பட ஐந்து பிரிவுகளின் கீழ் திண்டுக்கல் மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கனகராஜ் மீது பழனி நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.